11:46] Sekarreporter: இந்து சமய அறநிலைய துறையின் ஆலோசனை கூட்டங்களுக்கு தலைமை தாங்க கூடாது என முதல்வருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

[8/9, 11:46] Sekarreporter: இந்து சமய அறநிலைய துறையின் ஆலோசனை கூட்டங்களுக்கு தலைமை தாங்க கூடாது என முதல்வருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒரு நாத்திகர் என்பதால், இந்து சமய அறநிலையத் துறையின் ஆலோசனைக் கூட்டங்களுக்கு தலைமை வகிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்து மதத்தை பின்பற்றுவதாக இந்து கடவுள் முன் உறுதிமொழி எடுத்த பிறகே இக்கூட்டங்களுக்கு தலைமை வகிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, இந்தியா மதச்சார்பற்ற நாடு எனவும் இந்திய அரசியல் சட்டம், குடிமக்களுக்கு கருத்து சுதந்திரத்தை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டது.

முக்கிய பதவிகளை வகிப்பவர்கள், பதவியேற்கும் போது, கடவுள் பெயரிலோ, அரசியல் சட்டத்தின் பெயரிலோ பதவியேற்க அரசியல் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டனர்.

எந்த மதமும் குறுகிய மனப்பான்மையை போதிக்கவில்லை எனவும், பிற மதத்தினரை புண்படுத்த கூறவில்லை எனவும் கூறிய நீதிபதிகள், மனுதாரரின் மத உணர்வு ஏற்கத்தத்தல்ல எனவும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், சம்பந்தப்பட்ட நீதிபதியின் முன் அனுமதி பெறாமல் பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய மனுதாரருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
[8/9, 11:46] Sekarreporter: தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவை ரத்து செய்யக் கோரி பப்ஜி மதன் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ஜூன் 18 ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதன் குமார் என்கிற மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், தனது செயல்பாடுகளால் மாநிலத்தின் சட்டம் – ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், பப்ஜி விளையாடுவது ஒரு போதும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல் எனக் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள், மனதைச் செலுத்தாமல் தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், தான் விளையாடியது இந்திய அரசால் தடை செய்யப்படாத கொரிய பப்ஜி விளையாட்டு எனவும் கூறியுள்ளார்.

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தொழில் போட்டியாளர்கள், தனது வீடியோவை எடிட் செய்து பதிவேற்றம் செய்துள்ளதாகவும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் தனக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு, சென்னை மாநகர காவல் ஆணையரும் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
[8/9, 11:46] Sekarreporter: கடவுள் பெயரால் உறுதி மொழி எடுக்காத தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்து அறநிலைதுறை ஆலோசனை கூட்டங்களுக்கு தலைமை வகிக்க தடை கோரி வழக்கு

வழக்கை தொடந்தவர் 5 ஆண்டுகள் பொதுநல வழக்குகளை தொடர தடை – சென்னை உயர் நீதிமன்றம்
[8/9, 11:47] Sekarreporter: இந்து சமய அறநிலைய துறையின் ஆலோசனை கூட்டங்களுக்கு தலைமை தாங்க கூடாது என முதல்வருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒரு நாத்திகர் என்பதால், இந்து சமய அறநிலையத் துறையின் ஆலோசனைக் கூட்டங்களுக்கு தலைமை வகிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்து மதத்தை பின்பற்றுவதாக இந்து கடவுள் முன் உறுதிமொழி எடுத்த பிறகே இக்கூட்டங்களுக்கு தலைமை வகிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, இந்தியா மதச்சார்பற்ற நாடு எனவும் இந்திய அரசியல் சட்டம், குடிமக்களுக்கு கருத்து சுதந்திரத்தை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டது.

முக்கிய பதவிகளை வகிப்பவர்கள், பதவியேற்கும் போது, கடவுள் பெயரிலோ, அரசியல் சட்டத்தின் பெயரிலோ பதவியேற்க அரசியல் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டனர்.

எந்த மதமும் குறுகிய மனப்பான்மையை போதிக்கவில்லை எனவும், பிற மதத்தினரை புண்படுத்த கூறவில்லை எனவும் கூறிய நீதிபதிகள், மனுதாரரின் மத உணர்வு ஏற்கத்தத்தல்ல எனவும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், சம்பந்தப்பட்ட நீதிபதியின் முன் அனுமதி பெறாமல் பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய மனுதாரருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
[8/9, 17:53] Sekarreporter: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையம், சீல் வைத்த கவரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து தமிழக அரசிற்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு இச்சம்பவம் குறித்து நேரடியாக தூத்துக்குடி சென்று விசாரணை மேற்கொண்டது. அதன் அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் தமிழக முதன்மை செயலாளர் தரப்பில் செப்டம்பர் மாதம் 2018 ஆம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் அக்டோபர் 2018 ஆம் ஆண்டு இந்த வழக்கை முடித்து வைத்தது.

இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தேசிய மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாததால், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வு, எந்த ஆயுதமும் இன்றி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது… இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது… ஒரு நாகரிகமான சமுதாயத்தில் இது ஏற்புடையதா? என்று கேள்வி எழுப்பியது.

மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை மற்றும் தமிழக முதன்மை செயலர் அறிக்கை இரண்டையும் சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், தேசிய மனித உரிமை ஆணையமும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக பொதுத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியதுடன் பல ஆதாரங்களை சேகரித்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்க் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட துணை தாசில்தாரர்களின் மொபைல் எண் தொடர்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், 718 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 1,126 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை முதல் காவல் துறை அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், பலியான 13 பேரின் குடுபங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்த 64 பேருக்கு தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் 21 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த மே 14ம் தேதி அளித்த இடைக்கால அறிக்கையில் அளித்த பரிந்துரை அடிப்படையில், போராட்டக்காரர்களுக்கு எதிரான 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், 84 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதை ஏற்ற நீதிபதிகள், மூன்று வார கால அவகாசம் வழங்கி, விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...