[12/23, 10:58] sekarreporter1: https://youtu.be/IUjZWOwVrvI [12/23, 11:04] sekarreporter1: *NULM தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு வெற்றி!* ★சென்னை உயர்நீதிமன்றம், இன்று 22/12/2022 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு நாள் கூலி ரூ.424-லிருந்து ரூ.76 உயர்த்தி ஜனவரி 2023 முதல் ரூபாய் 500 தினக்கூலி வழங்க இடைக்கால உத்தரவிட்டுள்ளது. இதனால் தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.12720 லிருந்து ரூ.2280 உயர்ந்து இனிமேல் ரூ.15000 மாக கிடைக்கும்என்பது குறிப்பிட்டதக்கது.

[12/23, 10:58] sekarreporter1:

 

 

 

 

 

[12/23, 11:04] sekarreporter1: *NULM தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு வெற்றி!*

★சென்னை உயர்நீதிமன்றம், இன்று 22/12/2022 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு நாள் கூலி ரூ.424-லிருந்து ரூ.76 உயர்த்தி ஜனவரி 2023 முதல் ரூபாய் 500 தினக்கூலி வழங்க இடைக்கால உத்தரவிட்டுள்ளது. இதனால் தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.12720 லிருந்து ரூ.2280 உயர்ந்து இனிமேல் ரூ.15000 மாக கிடைக்கும்என்பது குறிப்பிட்டதக்கது.

★சென்னை மாநகராட்சியில் மண்டலம் 4, 5, 6, 7 மற்றும் 8 ஆகியவற்றில் 6849 NULM தூய்மை மற்றும் சுகாதார பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

★சென்னை முழுக்க தனியார்மயம் நடந்த போது, அம்பத்தூர் 7-வது மண்டலத்தில் உழைப்பர் உரிமை இயக்கம் (இணைப்பு – இடது தொழிற்சங்க மையம் – LTUC) -ல் தொழிலாளர்கள் இணைந்து தனியார்மயத்திற்கு எதிராக போராடினார்கள்.

★உழைப்பர் உரிமை இயக்கத்தின் மாநில தலைவர் கு.பாரதி WP.No.8281 / 2021 என்ற வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து NULM தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பும், நியாயமான கூலியும் வழங்க கோரினார். அதில் 30/4/2021 அன்று மாண்புமிகு நீதிபதி S.வைத்தியநாதன் அவர்கள் தொடர்பணியில் ஒப்பந்தமயமாக்குதலுக்கு எதிராக தடை விதித்தார்.

★மேலும் அதில் 07/01/2022 அன்று மாண்புமிகு நீதிபதி V.பார்த்திபன் அவர்கள் இறுதி உத்தரவு வழங்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கமிட்டி அமைத்து முடிவு செய்யுமாறு, அதுவரை குறைந்தபட்ச சம்பள சட்டத்தின் கீழான குறைந்தபட்ச கூலி ரூ.18,401/- ஊதியம் வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

★அதை எதிர்த்து சென்னை மாநகராட்சி, உயர் நீதிமன்றத்தில் WP.No. 1379/2022 என்ற வழக்கை தாக்கல் செய்து WP.No.8281/2021 என்ற உத்தரவுக்கு தடை பெற்றது. தடை நீக்க சங்கத் தரப்பில் தாக்கல் செய்த மனுவை இன்று 22/12/2022 சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்த போது சென்னை மாநகராட்சி தரப்பில் அமைக்கப்பட்ட கமிட்டி தினக்கூலி எவ்வளவு உயர்த்தி வழங்குவது என்பது குறித்து முடிவெடுக்க மூன்று மாத காலம் அவகாசம் கேட்கப்பட்டது. சங்கத் தரப்பில் தொழிலாளர்களுடைய தற்போதைய நிலை குறித்து எடுத்துரைத்த போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் R.மகாதேவன், J.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் கமிட்டி தினக்கூலி சம்பந்தமாக இறுதி முடிவெடுக்கும் வரை இடைக்கால நிவாரணமாக நாள் கூலி ரூ.424-லிருந்து ரூ.76-யை உயர்த்தி ரூ.500 ஆக ஜனவரி 2023 முதல் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.

★இதன்மூலம் 6,849 NULM தொழிலாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.18 கோடியே 99 லட்சத்து 91ஆயிரத்து 260 ரூபாய் தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடும்.

★இவ்வழக்கை தொழிலாளர் தரப்பு மூத்த வழக்கறிஞர் S.குமாரசாமி நடத்தினார். மூத்த வழக்கறிஞர் K.M.ரமேஷ் மற்றும் K.சுரேஷ், M.K.நிவேதா, S.அழகுலட்சுமி, M.A.அகமது பைரோஸ் ஆகியோர் வழக்கறிஞர்களாக இருந்தனர். கொரானா காலத்தில் மக்களின் உயிரை காப்பாற்றிய தூய்மை மற்றும் சுகாதார பணியாளர்கள் குறைந்தபட்ச சம்பளம் பெற, பணி நிரந்தரம் பெற ஆதரவளிப்பீர்.

செய்தி வெளியீடு:

*உழைப்போர் உரிமை இயக்கம் மாநில பொருளாளர் R.மோகன்*,

*7-வது மண்டல தலைவர் V.ஹரிபிரசாந்த்.*

செல் – 96770 07388, 73582 14170.

You may also like...