4 ஐஏஎஸ் அதிகாரிகளை ஆன்லைனில் ஆஜராக.நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் கே.ராஜசேகர் order

சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் பணிநிரந்தரம் கோரிய வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு உதவுவதற்காக 4 ஐஏஎஸ் அதிகாரிகளை ஆன்லைனில் ஆஜரகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தினக்கூலி தொழிலாளர்களுக்கு பணிநிரந்தரம் கோரி, தினக்கூலி தொழிலாளர் சங்கம் சார்பில், வேலூர் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த தொழிலாளர் நீதிமன்றம், மனுதாரர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து செய்யாறு சர்க்கரை ஆலை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு, இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு உதவுவதற்காக தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், நிதித்துறை முதன்மை செயலாளர் டி.உதயசந்திரன், சர்க்கரை ஆணையர் டி.அன்பழகன், விவசாய உற்பத்தி ஆணையர் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி ஆகியோர் ஆன்லைன் மூலம் செப்டம்பர் 25ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

You may also like...