7/16, 22:21] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1680621218385530880?t=cxSzTYNVSve4UolSKDv5DA&s=08 [7/16, 22:21] sekarreporter1: ” மூத்த வக்கீல்களை, நீதிபதியாக நியமனம் செய்யும் போது, அவர்கள் அளிக்கும் விண்ணப்பத்தில், எத்தனை இளம் வக்கீல்களுக்கு பயிற்சி கொடுத்தார்கள் என்ற விவரத்தை கேட்க வேண்டும் sc . judge viswanathan speech

[7/16, 22:21] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1680621218385530880?t=cxSzTYNVSve4UolSKDv5DA&s=08
[7/16, 22:21] sekarreporter1: ”

இளம் வக்கீல்களுக்கு நிரந்தர வாய்ப்பு தர வேண்டும் : கோவையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு

கோவை : ”சீனியர் வக்கீல்கள், இளம் வக்கீல்களுக்கு நிரந்தர தொழில் வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும்,” என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஸ்வநாதன் கூறினார்.

டில்லி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, கோவை மாவட்டத்தை சேர்ந்த கே.வி.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டார். புதிய நீதிபதியாக பொறுப்பேற்ற அவருக்கு, கோவை வக்கீல் சங்கம் சார்பில், பாராட்டு விழா, ஆவராம்பாளையம், எஸ்.என்.ஆர்., கலையரங்கில் நேற்று நடந்தது.

இதில், நீதிபதி விஸ்வதாதன் பேசியதாவது:

உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதை, ஒரு பதவியாக காண விரும்பவில்லை. பொறுப்பாக பார்க்கிறேன். கோவை சட்டக்கல்லுாரியில் பயின்று, சீனியர் வக்கீல்களிடம் பணியாற்றினேன். கோவையில் ஜூனியர் வக்கீலாக பிராக்டீஸ் செய்து வந்த நிலையில், அரசு உதவி வக்கீலாக பணியாற்றிய, எனது தந்தை வேண்டுகோளை ஏற்று டில்லிக்கு சென்றேன்.

என்னிடம் பேசிய பல மூத்த வக்கீல்கள், இந்த பொறுப்பு, பதவி, உங்களது தந்தையின் நேர்மையால் கிடைத்தது என்று கூறினார்கள். இதை கேட்கும் போது, எனக்கு மிகப்பெருமையாக உள்ளது.

இளம் வக்கீல்கள், தங்கள் திறமையினை வெளிக்கொண்டு வருவதற்கு தேவையான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. சீனியர் வக்கீல்கள், இளம் வக்கீல்களுக்கு நிரந்தர தொழில் வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும்.

இனிமேல், மூத்த வக்கீல்களை, நீதிபதியாக நியமனம் செய்யும் போது, அவர்கள் அளிக்கும் விண்ணப்பத்தில், எத்தனை இளம் வக்கீல்களுக்கு பயிற்சி கொடுத்தார்கள் என்ற விவரத்தை கேட்க வேண்டும்.

வக்கீல் சங்கம் சார்பில், இளம் வக்கீல்கள�

You may also like...