88 cpc /கிண்டி ரேஸ் கிளப் அரசுக்கு நோட்டீசு கொடுக்காமல் சிவில் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா? ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கிண்டி ரேஸ் கிளப் அரசுக்கு நோட்டீசு கொடுக்காமல் சிவில் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா? ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குத்தகை பாக்கி 730 கோடி ரூபாய் செலுத்தாததை அடுத்து, சென்னை ரேஸ் கிளப்–புக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம்,ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தாக்கல் செய்தது . அரசுக்கு எதிராக இப்படி சிவில் வழக்கு தாக்கல் செய்யும் முன்பு சிவில் சட்டப்படி அரசுக்கு நோட்டீசு கொடுத்து 2 மாதம் காத்திருத்து பதில் வந்த பிறகு தான் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். அப்படி வழக்கு தாக்கல் செய்யாமல் விலக்கு அளிக்க கோரி ஒரு இடைக்கால மனு சிவில் வழக்கில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ஆரம்ப கட்ட மனுவை நீதிபதி டிக்காராமன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் சோமியாஜியும், அரசு தரப்பில் பிவில்சன், அட்வகேட் ஜெனரல் ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், மூத்த வக்கீல் துஸ்வந்த்தவே ஆகியாரும் ஆஜராகி வாதாடினார்கள். இதை கேட்ட நீதிபதி வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

You may also like...