Madras high court orders sep 29th

[9/29, 11:19] Sekarreporter.: கடந்த அதிமுக ஆட்சியின்பொது நடைபெற்ற ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1991 -1996 அதிமுக ஆட்சியின்போது
இலவச வேஷ்டி, சேலை, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச செருப்பு வழங்கியதில் முறைகேடு செய்ததாகதொடரப்பட்ட வழக்குகளில் அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் இந்திரகுமாரி உட்பட அனைவரும் விடுதலைசெய்யப்பட்டனர்.

இந் நிலையில் இந்திரகுமாரி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 1997ம் ஆண்டு சமூக நலத்துறையின்செயலாளராக லட்சுமி பிரானேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதிமுக ஆட்சி காலத்தில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி, சமூக நலத்துறையின் முன்னாள் செயலாளர் கிருபாகரன் ஐ.ஏ.எஸ்., ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகம் ஐ.ஏ.எஸ். இந்திரகுமாரியின் கணவரும், வழக்கறிஞருமான பாபு,இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையைசி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்தனர். அதில், ஊழல் செய்யும் நோக்கத்தில் 1992-96ம் ஆண்டுகளில் பாபுவை நிர்வாக அறங்காவலராக ஏற்படுத்திமெர்சி மதர் இந்தியா என்ற அறக்கட்டளையும் பரணி சுவாதி என்ற பெயரில் கல்வி அறக்கட்டளையும் தொடங்கி,அரசிடம் பணம் பெற்றனர்.
காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளையும் தொடங்குவதாகக் கூறி அரசுப்பணத்தில் ரூ.15.45லட்சம் மோசடி செய்துள்ளனர். இந்திரகுமாரி, கிருபாகரன், சண்முகம் ஆகியோர் அதிகாரங்களை தவறாகபயன்படுத்தி சுயலாபம் அடைந்துள்ளனர.
இவர்கள் செய்த ஊழலுக்கு பாபு, வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் உடந்தையாக இருந்ததால் இவர்களைஅனைவரையும் இந்திய தண்டனைச்சட்டம், ஊழல் தடுப்புச்சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் தண்டிக்க வேண்டும்என்று குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.. பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் எத்தனை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது அதில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் சண்முகம் பாபு உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி அலிசியா தெரிவித்துள்ளார்.
[9/29, 12:23] Sekarreporter.: ஊழல் வழக்கில் திமுக இலக்கிய அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இந்திரகுமாரி அவரது கணவர் பாபு உள்ளிட்டோர் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக சமூக நலத்துறை அமைச்சராக 1991 – 1996 காலக்கட்டத்தில் இருந்தவர் இந்திரகுமாரி. அந்த சமயத்தில், அவருடைய கணவர் பாபு நடத்தி வந்த வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகளுக்கான அறக்கட்டளைக்கு சமூக நலத்துறை சார்பில் ரூ.15.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதியின் மூலம் குழந்தைகளுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என்று
கடந்த 1997ம் ஆண்டு சமூக நலத்துறையின் செயலாளராக லட்சுமி பிரானேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில்
இந்திரகுமாரி, அவரது கணவரும் வழக்கறிஞருமான பாபு,
சமூக நலத்துறையின் முன்னாள் செயலாளர்
கிருபாகரன் (இறந்து விட்டார்),ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகம்
இந்திரகுமாரியின் உதவியாளர்
வெங்கட கிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்த்தில் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை
சி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்தனர்.
அதில், ஊழல் செய்யும் நோக்கத்தில் 1992-96ம் ஆண்டுகளில் பாபுவை நிர்வாக அறங்காவலராக கொண்டு மெர்சி மதர் இந்தியா என்ற அறக்கட்டளையும், பரணி சுவாதி என்ற பெயரில் கல்வி அறக்கட்டளையும் தொடங்கி அரசிடம் பணம் பெற்றதாகவும்,
காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளியும் தொடங்குவதாகக் கூறி அரசுப்பணத்தில் ரூ.15.45லட்சம் மோசடி செய்துள்ளதாகவும், இந்திரகுமாரி, கிருபாகரன், சண்முகம் ஆகியோர் அதிகாரங்களை தவறாகபயன்படுத்தி சுயலாபம் அடைந்துள்ளதாகவும்,
இவர்கள் செய்த ஊழலுக்கு பாபு, வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலிசியா, முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி,அவரது கணவர் பாபு,
ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகம் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளார்

கிருபாகரன் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் வெங்கடகிருஷ்ணன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவரது கணவர் பாபுவுக்கு
தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
[9/29, 12:25] Sekarreporter.: 1991-96 ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு…

சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு…

தமிழக சமூக நலத்துறை அமைச்சராக இந்திராகுமாரி 1991 – 1996 இருந்த காலக்கட்டத்தில், அவருடைய கணவர் பாபு நடத்தி வந்த வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகளுக்கான அறக்கட்டளைக்கு சமூக நலத்துறை சார்பில் ரூ.15.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம்

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவரது கணவர் பாபுவுக்கு
தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு
[9/29, 12:26] Sekarreporter.: புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலை அக்டோபர் 4 ம் தேதிக்கு தள்ளிவைக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் 10 பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக  அறிவிப்பு  வெளியிடப்பட்டது.

 இந்த தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கு முறையான ஒதுக்கீடு வழங்கப்படாததால் இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்ககோரி 
 முத்தியால்பேட்டை தொகுதி சுயேட்சை சட்ட மன்ற உறுப்பினர் பிரகேஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் ஆணைய அறிவிப்பில், பட்டியலினத்தவர்களுக்கு வார்டுகள் முறையாக ஒதுக்கப்படவில்லை என்றும் பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் வார்டுகளை அவர்களுக்கு ஒதுக்காமல்  குறைந்த எண்ணிக்கையில் வசிக்கும் வார்டுகளை அவர்களுக்கு ஒதுக்கி உள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த தவறுகளை சரி செய்யாமல் தேர்தலை நடத்த முடியாது என தெரிவித்த நீதிபதிகள்,வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி  தேதியை அக்டோபர் 4 ம் தேதிக்கு தள்ளிவைக்க உத்தரவிட்டனர்.

மேலும்,மனுவுக்கு பதில் அளிக்கும்படி புதுச்சேரி அரசுக்கு, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை தள்ளிவைத்தனர்..
[9/29, 12:48] Sekarreporter.: வாக்காளர் பட்டியலில் தவறு நடந்துள்ளது என்பதற்காக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது…

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுக்கா இச்சிபுத்தூர் கிராத்தில் உள்ள 8வது வார்டில் வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தி புது வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை தேர்தல் நடத்த கூடாது அந்த வார்டை சேர்ந்த சீனிவாசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது,8 வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதால் மற்ற வார்டில்  உள்ள பெண்கள், இறந்தவர்கள் பெயர்கள் என 120 பேர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதை திருத்தாமல் தேர்தல் நடத்த கூடாது  என உத்தரவிட வேண்டுமென மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அக்டோபர் 6 ம் தேதி தேர்தல் நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் தவறாக சேர்க்கப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காக தேர்தலை தள்ளிவைக்கும்படி உத்தரவிட முடியாது என தெரிவித்து, வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
[9/29, 13:01] Sekarreporter.: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அவர்களின் அண்ணன் மனைவி இளவரசியின் இரண்டாவது மருமகன் மீது பண மோசடி செய்ததாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல்

கடந்த 2016 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது சேலம் மாவட்ட சட்டமன்ற தொகுதியில் எம்.எல். ஏ சீட் வாங்கி தருவதாக கூறி சுமார் 5 கோடி ரூபாயை பெற்று கொண்டு சீட் வாங்கி தராமலும் மற்றும் வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியது சம்மந்தமாக இளவரசியின் இரண்டாவது மருமகனான ராஜராஜான் மீது சென்னை மத்திய குற்றபிரிவில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட நபர் கருணாகரன் என்பவர் சென்னை எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார் இந்த வழக்கு நீதிபதி ஜெ.பரத் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது வழக்கை அக்டோபர் மாதம் 5ம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளவதாக உத்தரவிட்டார்
[9/29, 13:02] Sekarreporter.: இந்திரகுமாரிக்கு மாரடைப்பு

*அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு சுவாச பிரச்சினை காரணமாக மூச்சடைப்பு – மாரடைப்பு உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட.டார்
[9/29, 15:20] Sekarreporter.: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தொலைகாட்சி சின்னம் ஒதுக்க கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒன்பது மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில், தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.

ஆனால், 2019 ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் பொதுசின்னமாக தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கப்படவில்லை எனக் கூறி, புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கையை நிராகரித்து செப்டம்பர் 17ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து, உள்ளாட்சி தேர்தலில் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வி.கே.அய்யர்  வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கை மனுவை நிராகரித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டிருந்தது..

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது,
இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் இடம்பெற்ற 15 கட்சிகளில் புதிய தமிழக கட்சி இடம்பெறவில்லை என்றும் அதில் தொலைக்காட்சியின் சின்னமும் இல்லை என தெரிவித்த மாநில தேர்தல் ஆணையம், மனுவை மறுபரிசீலனை செய்ததில் தொலைக்காட்சி சின்னம் வழங்க மீண்டும் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதைப்பதிவு செய்த நீதிபதிகள், சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவின்படி குறைந்தபட்ச தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னம் பெற உரிமை இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்..
[9/29, 17:14] Sekarreporter.: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி, தமிழக அரசு, கடந்த பிப்ரவரி 25ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும் திருச்சி, துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி அதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களின் ஒய்வு பெறும் வயதை அதிகரித்துள்ளதால், அரசு வேலை தேடுவோருக்கு பதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஏற்கனவே உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து,  முழுமையான விவரங்கள் இல்லாமல் மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 மேலும், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், 2 ஆண்டுகளுக்கு நீதிமன்ற அனுமதி இல்லாமல் பொதுநல வழக்கு தொடர மனுதாருக்கு தடை விதித்தும் உத்தரவிட்டனர்.. 
[9/29, 17:32] Sekarreporter.: மத மோதலை ஏற்படுத்தும் வகையில் உள்ள ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க, பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரிச்சர்ட் ரிசி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் ஜிஎம் பிலிம் கார்பரேசன் தயாரிப்பில் அக்டோபர் 1 ம் தேதி வெளி வரவுள்ள திரைப்படம் ருத்ர தாண்டவம்.

இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியிடபட்டது.

இந்நிலையில் இந்த படம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான இருப்பதாகவும், அவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் இருப்பதாகவும், கூறி, படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சிறுபான்மை மக்கள் நல கட்சியின் தேசிய தலைவர் சாம் யேசுதாஸ் என்பவர் சென்னை 15வது உதவி உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், திரைப்படத்தில் வசனம் மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது எனவும், சிறுபான்மை கிறிஸ்தவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும், இது இரு மதத்தினர் இடையில் பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதுவரை படத்தை திரையரங்கு மற்றும் ஓடிடி உள்ளிட்ட இணையதளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த 15 உதவி உரிமையில் நீதிமன்ற நீதிபதி, மனு தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் நாளைக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணை நாளைக்கு தள்ளிவைத்தார்.
[9/29, 21:06] Sekarreporter.: அரசு புறம்போக்கு மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு
இனி தண்ணீர் இணைப்போ, மின் இணைப்போ வழங்கப்படமாட்டாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ஏரியில்  அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டிடங்களை இடிக்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது, பொதுப்பணித்துறை,ஊரக வளர்ச்சி துறை,பஞ்சாயத்து ராஜ் துறை ஆகியவற்றின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது,

அதில்,நீர் ஆதாரங்களை பாதுகாக்கவும்,
ஆக்கிரமிப்புகளை அகற்றவும்,புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் உரிய நடவடிகை எடுக்கப்பட்டு வருவதாகவும்,தலைமை செயலாளர் முன்னிலையில் கடந்த ஜீலை மாதம் நடைபெற்ற கூட்டத்தில் மிகவும் ஆட்சேபகாரமான அல்லது வெள்ளம் வந்தால் பாதிப்பை ஏற்படுத்த கூடிய ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக, அரசு புறம்போக்கு மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு
இனி தண்ணீர் இணைப்போ, மின் இணைப்போ வழங்கக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையிலும்,
ஆக்கிரமிப்பு குறித்து அரசிடம் தெரியப்படுத்தும் வகையிலும்
ஒவ்வொரு கிராம அளவில்
இளைஞர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பை சேர்ந்தோரை கொண்டு குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அடையாறு,கூவம் ஆறு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்வாய்களை ஆக்கிரமித்து வசித்து வந்த 18,363 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மாற்று இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,சென்னை தவிர பிற நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ள 585 நீர் நிலைகளில் 9802 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அவற்றில் இதுவரை 5178 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நீர்நிலைகளை பராமரிக்கும் வருவாய்த்துறை,பொதுப்பணித்துறை அதிகாரிகள், நீர்நிலைகள் உள்ள
பகுதிகளின் சர்வே எண்களை பதிவுத்துறைக்கு தெரிவிக்கவும், அத்தகைய இடங்களை அரசு இடங்களாக கணக்கில் கொண்டு அவற்றின் மதிப்பை
“ஜீரோ – 0” என நிர்ணக்க உள்ளதாகவும், அத்தகைய இடங்களை யாருக்கும் பதிவு செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை தசரா விடுமுறைக்கு பின் ஒத்திவைத்துள்ளனர்

 

 

 

You may also like...