Madras high court last week orders க

[2/1, 11:46] Sekarreporter 1: நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்ததாக அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்ததால் வழக்கு திரும்பப் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதிமுகவின் தேர்தல் பிரிவு துணை செயலாளர் ஐ.எஸ்.இன்பத்துரை தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 19ம் தேதி நடத்தபடும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அறிவிப்பாணை வெளியிடபட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன் பிறகு அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு தான் அதிகாரம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக கடந்த 29ம் தேதி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் காவல்துறையில் 17 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்த உத்தரவு தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக உள்ளதால் 17 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்த தமிழக அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்… தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளவரை தமிழக அரசும், டிஜிபியும் காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பண்டாரி தலைமையிலான முதல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மற்றும் அரசு ப்ளீடர் மபெறப்பட்டதால்
ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்று விதிக்க வேண்டும் என்றும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
இந்த வழக்கை பொதுநல வழக்காக எடுத்துக்ககொள்ள முடியாது, அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கு என்றும் உள்ளாட்சித் தேர்தலை தடை செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு என்பதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர் இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஒரு மனுவைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்ததால் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[2/1, 12:32] Sekarreporter 1: சென்னை மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்தது தொடர்பாக மக்கள் தொகை அடிப்படையிலா அல்லது வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையிலா என்பது குறித்து விளக்கமளிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 1996ம் ஆண்டு தமிழ்நாடு பேரூராட்சிகள், மூன்றாம்நிலை நகராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் வார்டு மறுவரையறை மற்றும் ஒதுக்கீடு விதிகள், பெண்களுக்கு 50 சதவீதத்துக்கு குறையாமல் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்கிறது.

சென்னை மாநகராட்சியில், மண்டல அளவில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மொத்த இடங்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் ஜனவரி 17ம் தேதி வார்டு ஒதுக்கீடு தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதில், சில மண்டலங்களில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும், சில மண்டலங்களில் 50 சதவீதத்துக்கு அதிகமான வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை சூளைமேட்டை சேர்ந்த முத்துராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அந்த மனுவில், எந்த நடைமுறையையும் பின்பற்றாமல், எந்த புள்ளிவிவர ஆதாரங்களும் இல்லாமல் வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் தேர்தல் நடத்த அனுமதித்தால், அது பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கத்தையே பாதிக்க செய்யும் என்றும் கூறியுள்ளார்.

இந்த வார்டு ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்து, வார்டுகளில் உள்ள பெண்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஒதுக்கீடு வழங்கி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், அதுவரை சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, பெண்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்தது என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலா அல்லது வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையிலா என்பது குறித்து சென்னை மாநகராட்சி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
[2/1, 15:49] Sekarreporter 1: வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ப.ரவீந்திரநாத் எம்.பி. மீதான வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ப.ரவீந்திரநாத் ஆகியோர், தங்களின் வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்தும், தவறான தகவல்களையும் தெரிவித்திருந்ததாகக் கூறி, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி, தேனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை சிறப்பு நீதுமன்றத்தில் தேனி மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி மிலானி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம்,
ஓ.பன்னீர்செல்வம், ப.ரவீந்திரநாத் எம்.பி. மீதான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பிப்ரவரி 7ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ஓ.ரவீந்திரநாத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், காவல் துறை பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்கு இன்று வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. அதேபோல புகார்தாரரான மிலானி தரப்பில், வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதுடன், இதுசம்பந்தமான உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல்களை இணைத்து பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

இதை ஏற்று விசாரணையை பிப்ரவரி 21ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை, இந்த மனுக்கள் மீது தீர்ப்பளிக்கும் வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
[2/1, 17:22] Sekarreporter 1: *அமெரிக்கவிலிருந்து இறக்குமதி செய்த பி.எம்.டபிள்யூ. காருக்கு நுழைவு வரி செலுத்த தாமதித்ததால், 400 மடங்கு அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.*

கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து நடிகர் விஜய் இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது. பின்னர் நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என 2018ல் உத்தரவு பிறப்பித்தது.

அதற்கு பிறகு 7,98,075 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்ட நிலையில், வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதத்தை கணக்கிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி
தாமதித்த காலத்திற்கான அபராதமாக 400% விதித்து 30,23,609 ரூபாய் செலுத்த வேண்டுமென 2021 டிசம்பர் 17ல் உத்தரவிட்டது.

வணிகவரித்துறையின் உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எந்த அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது என ஆவணங்களை தாக்கல் செய்ய வணிக வரித்துறைக்கு உத்தரவிட்டு, அபராத தொகையை செலுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சரவணன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் அவகாசம் கோரபட்டதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி பிப்ரவரி 16ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
[2/1, 17:34] Sekarreporter 1: ,,,மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை விமர்சித்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்கள் சந்திப்பின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியதாக எழும்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் அளித்த புகாரில் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு, சென்னை எம்.பி. எம் எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வைகோ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தனது கட்சி அலுவலகத்தில் பேட்டியளித்ததாகவும், கலவரத்தை தூண்டும் வகையில் எந்த வார்த்தையையும் பேசவில்லை எனவும் அவதூறாக பேசியதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
[2/2, 11:06] Sekarreporter 1: தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொறுத்த உத்தரவிடக்கோரிய வழக்கை, தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, இரண்டு ஆண்டுகள் வழக்கு தொடர தடையும் விதித்துள்ளது.

மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்திருந்த பொது நல மனுவில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் அதிகரித்தி வருகிறவதாகவும்,பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சான்றிதழ்களும் பெற லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளதாகவும், அனைத்து அலுவலகங்களிலும் லஞ்சம் வழங்க கூடாது என அறிவிப்பு பலகையை கட்டாயம் வைக்க வேண்டும். அனைத்து அலுவலங்களிலும் சிசிடிவி பொருத்தி உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்..
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரத்த நீதிபதிகள்,மனுதாரர் எந்த ஆதாரமும் இல்லாமல், விளம்பரத்திற்காக மட்டுமே இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டனர்.
விளம்த்திற்காக வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து,
அடுத்த 2 வருடத்துக்கு எந்த பொதுநல வழக்கும் தொடரக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[2/2, 11:20] Sekarreporter 1: ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகளின் சொத்துக்களை முடக்க கோரி எந்த ஆதாரங்களும் இல்லாமல் வழக்கு தொடர்ந்ததாக கூறி, மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், 2 ஆண்டுகள் பொது நல வழக்கு தொடர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதாகவும், பிறப்பு முதல் இறப்பு சான்று பெறுவது வரை லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாக கூறி, அனைத்து அலுவலகங்களிலும், லஞ்சம் வாங்குவதும்; கொடுப்பதும் குற்றம் என விளம்பர பலகை வைக்க கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் அந்த மனுவில், ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகும் அரசு அதிகாரிகளின் அசையும், அசையா சொத்துக்களை முடக்க வேண்டும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, பொதுப்படையான கோரிக்கைகளுடன், எந்த ஆய்வும் நடத்தாமல் விளம்பரத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, வழக்கை 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய மனுதாரருக்கு தடை விதித்த நீதிபதிகள், அபராதத் தொகையை 15 நாட்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்தவும் உத்தரவிட்டனர்.
[2/2, 11:52] Sekarreporter 1: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஊரகப் பகுதிகளை சேர்ந்த அரசு அதிகாரிகளை தேர்தல் அலுவலர்களாக நியமிக்க கோரி அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.

தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 80 ஆயிரம் காவல்துறையினர், ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசுப் பணியாளர்களை தேர்தல் அலுவலர்களாக நியமிப்பதாகவும் தெரிவித்திருந்தது.

தேர்தல் நடைபெறும் பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதிலாக, தேர்தல் முடிந்து விட்ட ஊரக பகுதி அதிகாரிகளை தேர்தல் அலுவலர்களாக நியமிக்க கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அவர், தனது மனுவில், தேர்தலில் பெரும்பாலும் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முறைகேடுகளை தவிர்க்கவும், தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த ஊரக பகுதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களை தேர்தல் அலுவலர்களாக நியமிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக அளித்த விண்ணப்ப மனுவை பரிசீலிக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் நடத்த முடியாது என்றும், இதுபோன்ற வழக்குகள் கண்டிக்கத்தக்கது என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

தேர்தல் பணியில் யாரை எங்கு பணியமர்த்த வேண்டும் என தேர்தலை ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனவும், மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாகவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக பாபு முருகவேல் தரப்பில் கூறியதை ஏற்ற நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடனர்.
[2/2, 12:23] Sekarreporter 1: வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்புக்கும்வரை இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கக்கோரி பாமக முன்னாள் எம்.எல்.ஏ. சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திரும்ப பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை 10.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ்
புதிதாக மாணவர் சேர்க்கையோ, பணி நியமனமோ நடைபெறக் கூடாது எனக் கூறி பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளுக்கு வழக்கை தள்ளிவைத்துள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு வரும் வரை, தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாதென பாமக முன்னாள் எம்.எல்.ஏ.காவேரி வையாபுரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வரும் 15ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதுவரை மாணவ சேர்க்கையை ஒத்திவைக்குமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அப்போது நீதிபதி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் உயர் நீதிமன்றத்தில் ஏன் மனுத்தாக்கல் செய்தீர்கள் என கேள்வி எழுப்பி, ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தார்.

இதனையடுத்து மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை, ஏற்று மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
[2/2, 13:06] Sekarreporter 1: கல்லூரி பருவத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தடை கோரிய வழக்கு, திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொரோனா தொற்று மூன்றாவது அலை பரவல் காரணமாக கல்லூரி பருவத்தேர்வுகள் ஆன் லைன் மூலம் நடத்தப்படும் எனவும், இறுதி பருவத்தேர்வுகள் நேரடியாக ஜூன் – ஜூலை மாதங்களில் நடத்தப்படும் என தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் கடந்த மாதம் 21ம் தேதி அறிவித்திருந்தார்.

பருவத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன், கல்வி நிறுவனங்களின் நம்பகத்தன்மையும் பாதிக்கப்படும் எனக் கூறி, ஆன் லைன் மூலம் தேர்வுகள் நடத்த தடை விதிக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[2/2, 16:13] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை அகற்றுவது குறித்த திட்டத்தை இரண்டு வாரங்களில் வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்த வழக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி சதீஷ்குமார், நீதிபதி ஆதுகேசவலு அடங்கிய முழு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில், சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு திட்டமும் வகுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அறிவியல் ரீதியாக அகற்றுவதற்காக, நிபுணர் குழு மற்றும் நீரி அமைப்பின் அறிக்கை கோரியுள்ளதாகவும், அவை கிடைத்த பின் முழுமையாக அகற்றுவது தொடர்பாக திட்டம் வகுக்க 6 மாத அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,
சீமை கருவேல மரங்கள் நிலத்தடி நீரை பாதிப்பது மட்டுமல்ல, நிலத்தையும் மலடாக்கி விடுகிறது என்பதால் அவற்றை வெறுமனே வெட்டுவது மட்டுமல்லாமல், வேரோடு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

2015ஆம் ஆண்டு தொடரபட்ட வழக்கில், 2017ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், 5 ஆண்டுகளாக முழுமையாக அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கடும் அதிருப்தியை பதிவு செய்த நீதிபதிகள், குழுக்கள் மேல் குழுக்கள் அமைத்து அறிக்கை கேட்பதால் எந்த பலனும் இல்லை என தெரிவித்தனர்.

சமநிலையற்ற சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக இரண்டு வாரங்களில் திட்டம் வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில் அமல்படுத்த வேண்டும் என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியையோ அல்லது அரசு நிதி ஒதுக்கியோ பயன்படுத்தலாம் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[2/2, 16:43] Sekarreporter 1: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழ் உட்பட 22 மாநில மொழிகளை வெளியிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்ததை ஏற்று, இதுதொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

ஆங்கிலம் மற்றும் இந்தியில்  வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடக்கோரி மீனவர் அமைப்பு உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கு, 22 மாநில மொழிகளில் வெளியிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
[2/2, 16:59] Sekarreporter 1: சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்கான டெண்டருக்கு நகராட்சி நிர்வாகத்துறை அனுமதி கோரியுள்ள கடிதம் மீது 2 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டுமென மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

2011ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில், பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தவில்லை என அய்யம்பெருமாள் என்பவர் 2019ல் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள செப்டிக் டேங்குகள் நிரம்பி சாலைகளில் வடிவதால் நோய் தொற்று அபாயம் இருப்பதாகவும்,
பாதாள சாக்கடை அமைப்பது தொடர்பாக அனுப்பிய மனு மீதி சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர் நடவடிக்கை எடுக்க குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கில், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் தரப்பில், மடிப்பாக்கம் பகுதிக்கு 160 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் பாதாள சாக்கடை அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும், திட்ட அறிக்கை கிடைத்தவுடன், நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை 2020ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என 2019ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவுப்படி பணிகள் முடிக்கப்படவில்லை என கடந்த ஆண்டு அய்யம்பெருமாள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு,
நீதிமன்ற உத்தரவை அவமதித்ததற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர்,சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர் மற்றும் செயற் பொறியாளர் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்

இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகி, டெண்டருக்கு அனுமதி கோரி மாநில தேர்தல் ஆணையத்துக்கு
கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது

தொடர்ந்து
2 நாட்களுக்குள் டெண்டருக்கு அனுமதி கோரிய கடிதம் குறித்து மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், அனுமதி பெற்ற பிறகு 10 நாட்களுக்குள் டெண்டர் நடவடிக்கையை முடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்
அடுத்த முறை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விலக்கு அளித்துள்ளனர்
[2/2, 17:09] Sekarreporter 1: நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே திண்டிவனத்தில் 8வது வார்டு கவுன்சிலர் எனக்கூறி நகராட்சி தண்ணீர் தொட்டியில் கல்வெட்டு வைத்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டில் உள்ள ரவிச்சந்திரன் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி உள்ள நகராட்சி குடிநீர் தொட்டியை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ்.மஸ்தான் வைத்து திறந்தாகவும், பிறகு அங்கு உள்ள கல்வெட்டில் தன்னை எட்டாவது வார்டு உறுப்பினர் எனக்கூறி பெயர் பெறிக்கபட்டதாகவும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடத்தப்படவில்லை. வருகிற 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுத்துள்ளது.

சட்டத்திற்கும், விதிகளுக்கு புறம்பாக அரசு தண்ணீர் தொட்டியில் வார்டு உறுப்பினர் என கூற ரவிச்சந்திரன் பெயர் பலகை வைத்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கடந்த மாதம் 10 தேதி தான் தமிழக அரசு மற்றும் திண்டிவனம் நகராட்சி ஆணையருக்கு புகார் மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே எனது புகார் மீது கால வரையறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக, தமிழக அரசு, திண்டிவனம் நகராட்சி ஆணையர், அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
[2/2, 18:02] Sekarreporter 1: அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணைக்கு
சிபிஐக்கு உதவ தமிழக காவல்துறை அதிகாரிகள் பட்டியலை கேட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த 2012ம் வருடம் மார்ச் 29 ல் நடைபயிற்சி சென்ற,தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி – கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி ராமஜெயம் மனைவி லதா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், கொலையாளிகள் யாரும் பிடிபடாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்றம், விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்த்து. சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து
கொலை செய்யபட்ட ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிசந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனபதால் மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என டிஜிபிக்கு மனு அளித்துள்ளதாகவும், அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி. பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதி விசாரணை அதிகாரி சரியான கோணத்தில் விசாரித்து வருவதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் என் ஆர். இளங்கோ சிபிஐ விசாரணை அதிகாரியோடு சேர்த்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி,சிபிஐக்கு உதவ தமிழக காவல்துறை அதிகாரிகள் பட்டியல் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக காவல்துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும், விசாரணைக்கு உதவ காவல்துறை அதிகாரிகள் பட்டியலை வழங்குகிறோம் என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து நீதிபதி, பட்டியல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்துள்ளார்….
[2/3, 11:37] Sekarreporter 1: கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு நிரந்தரமாக இடம் ஒதுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்பேடு தக்காளி மைதானத்தை திறக்க கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், வாகனங்களை நிறுத்தக்கூடிய இடத்தில் சிறுகடைகளின் உரிமையாளர்கள் விற்பனை செய்ததால் மைதானம் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் மார்க்கெட் கமிட்டில் சார்பில் 800 வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு வசதிகள் அமைக்கப்படுள்ளதாக தெரிவிக்கபட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கொரனோ பரவல் மற்றும் தக்காளி விலை உயர்வை கருத்தில் கொண்டு தான் தக்காளி ஏற்றி வரும் வாகங்களை நிறுத்துவதற்கு தற்காலிகமாக இடம் ஒதுக்கபட்டதாகவும், தற்போது இயல்பு நிலை திரும்புவதால் தக்காளி ஏற்றி வரும் வாகங்களை நிறுவதற்கென நிரந்தரமாக இடம் ஒதுக்கமுடியாது என உத்தரவிட்டார்.

மேலும், சட்ட விரோதமாக வாகங்களை நிறுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
[2/3, 12:26] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும், அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய இந்துசமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோவிலுக்கு சொந்தமான பெருமளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி சேவியர் பெலிக்ஸ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கான மின் இணைப்பை துண்டிக்கவும், நியாயமான வாடகையை நிர்ணயிக்கவும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத கோவில் செயல் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவின்படி, நடவடிக்கைகள் எடுக்காமல் ஆக்கிரமிப்பை ஊக்குவித்தது கோவில் நிர்வாகம் தான் எனவும், கோவில் நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய செயல் அலுவலர்கள், ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்து செயல்படுவதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

கடமையைச் செய்வதற்கு தான் செயல் அலுவலருக்கும், ஆணையருக்கும் ஊதியம் வழங்கப்படுகிறதே தவிர, ஏசி அறையில் இருக்க அல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், செயல்படாத இவர்களின் ஊதியத்தை ஏன் பிடிக்க கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்.

கோவில் நிலத்தில் உள்ள 1,640 ஆக்கிரமிபாளர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், செயல் அலுவலர்களின் செயல்பாட்டை அறநிலையத் துறை ஆணையர் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத செயல் அலுவலரை உடனடியாக அங்கிருந்து மாற்ற வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், 2014ம் ஆண்டு முதல் கோவில் செயல் அலுவலர்களாக பணியாற்றியவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டனர்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளின் விவரங்களும், அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும் என அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[2/3, 12:53] Sekarreporter 1: இந்து அறநிலையத்துறை ஆலோசனை குழு அலுவல்சாரா உறுப்பினர் சாந்தலிங்க மருதாசல அடிகளாருக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் இந்து அறநிலையத்துறை ஆலோசனை குழு அலுவல்சாரா உறுப்பினராக
திருப்பேரூர் அருள்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்தை விமர்சிக்கும் வகையில் முகநூலில் ராஜநாக முனிவர் என்ற பெயரில் தரக்குறைவான வார்த்தைகளுடன் சில கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாந்தலிங்க மருதாசல அடிகளாருக்கு எதிராக கருத்துக்களை பதிவிடும் நபர்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி சண்டிகேசுவர நாயனார் நற்பணி மன்றத்தின் தலைவரான டி.சுரேஷ்பாபு ஜனவரி 18ஆம் தேதி கோவை மாநகர காவல் ஆணையர், சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார்.

அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுரேஷ்பாபு அளித்த புகார் மனுவை கோவை சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் நான்கு வாரங்களில் விசாரித்து, சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
[2/3, 13:39] Sekarreporter 1: இரு பிரிவினரிடையே வெறுப்புணர்வை தூண்டியதாக பதிவான வழக்கில் தமிழக பாஜக இளைஞர் அணி தலைவரான வினோஜ் பி. செல்வத்தை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோவில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக
தமிழக பாஜக இளைஞர் அணி தலைவரான வினோஜ் பி. செல்வம் அவரது டிவிட்டர் பதிவிட்டிருந்தார். அவரது பதிவு உண்மைக்கு மாறான தகவலுடனும், வதந்தியை பரப்பி, இரு பிரிவினரிடையே வெறுப்பு மற்றும் பகைமையை உருவாக்கி, பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

அதில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார், வினோஜ் பி. செல்வம் மீது கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி வினோஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். செய்தித்தாளில் வந்ததை டிவிட்டரில் பதிவிட்டதாகவும், கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், பாஜக-விற்கு பரப்புரை செய்யும் வகையிலேயே பதிவிட்டதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரியதால் வழக்கை பிப்ரவரி 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை வினோஜை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.
[2/3, 16:38] Sekarreporter 1: சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு வார்டு ஒதுக்கியதை எதிர்த்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், திங்கள் கிழமைக்கு தள்ளிவைத்துள்ளது.

சென்னை மாநகராட்சியில், மண்டல அளவில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், மொத்த இடங்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் ஜனவரி 17ம் தேதி வார்டு ஒதுக்கீடு தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதில், சில மண்டலங்களில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும், சில மண்டலங்களில் 50 சதவீதத்துக்கு அதிகமான வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை சூளைமேட்டை சேர்ந்த முத்துராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சென்னை மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 66 லட்சத்து 72 ஆயிரத்து 103 என்றும், இதில் 70 சதவீதமான 46 லட்சத்து 46 ஆயிரத்து 732 பேர் சென்னையின் மையப்பகுதியில் வசிப்பதாகவும், 20 லட்சத்து 25 ஆயிரத்து 371 பேர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகை அடிப்படையில் வார்டு பிரிக்கும் போது நகரின் மையப் பகுதியில் வார்டுகள் சிறியதாகவும், பிற பகுதிகளில் பெரியதாகவும் இருக்கும் எனவும், அந்த பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை சமமான அளவில் மேற்கொள்வதில் சிக்கல் எழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விரிவான வாதங்களை முன் வைக்க தலைமை வழக்கறிஞர் அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கு விசாரணை திங்கள் கிழமை தள்ளிவைக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், அரசியல் சாசனத்தின்படி வார்டு மறுவரையறையை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்றும், தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சட்டப்படி மேற்கொள்ளப்பட்ட வார்டு மறுவரையறை அடிப்படையில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த தவறும் இல்லை எனவும் தெரிவித்தார்.
[2/3, 17:50] Sekarreporter 1: கடந்த 4 மாதங்களில் 4717 சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டவிரோதமாக பேனர் வைத்தது தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளின் நிலை என்ன? என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

அந்த வழக்குகள் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக உள்துறை செயலாளர் சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் தாக்கல் செய்த பதில் மனுவில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை, சட்டவிரோதமாக பேனர்கள் வைத்தது தொடர்பாக 10 ஆயிரத்து 926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பேனர்கள் அமைப்பதற்கு உரிமம் வழங்குவது தொடர்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர்கள் பேரூராட்சி ஆணையர்கள் நகராட்சி நிர்வாக இயக்குனர் டிஜிபி ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது

கடந்த 2020ஆம் அக்டோபர் முதல் கடந்த ஜனவரி 31ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 4717 சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் 1465 பேனர்களும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 2933 பேனர்கள், பேரூராட்சிகளில் 319 பேனர்களும் அகற்றப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சட்டவிரோத பேனர்களை அகற்றுவதற்கான செலவை சம்பந்தப்பட்டவர்களிடம் வசுலிக்க வேண்டும் எனத் தெரிவித்து, விசாரணையை பிப்ரவரி 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[2/4, 09:59] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களில் மூட வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் பார் டெண்டர் புதிய விதிகளை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில்,
ஏற்கனவே பார் வைத்திருந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என்றும் நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றிதழ் ஏற்கனவே தங்கள் பெற்றுள்ளதாகவும் ஆனால் தங்களுக்கு எந்த ஒரு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சரவணன், பார் உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களையும் ஆறு மாதங்களில் மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

மேலும், டாஸ்மாக் மதுபான கடைகளை ஒட்டி அமைக்கப்படும் பார்களில் மது அருந்த தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் அனுமதிக்கவில்லை எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதி, டாஸ்மாக் நிர்வாகம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பார்களை நடத்த இந்த சட்டம் அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பொது இடங்களில் போதையில் இருக்கும் நபர்களுக்கு 3 மாத சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், பார்களில் மதுபானம் அருந்திய நபர்களை பொது இடங்களில் நடமாட அனுமதிப்பது குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ள நீதிபதி, டாஸ்மாக் கடைகளுக்கு இடத்தை குத்தகைக்கு வழங்குபவர்கள், அருகில் உள்ள இடத்தை மேம்படுத்தி பார் அமைக்கும் நடைமுறையை அனுமதிக்க முடியாது என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
….
[2/4, 11:33] Sekarreporter 1: மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை காலி செய்வதாக குடியிருப்போர் உத்தரவாதம் அளித்தால், மாற்று இடம் வழங்குவது பரிசீலிக்கப்படும்…..

பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கில் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்

பெத்தேல்நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் அண்ணாதுரை தொடர்ந்த வழக்கு பிப்ரவரி 9 தள்ளிவைப்பு

வீடுகளுக்கு பட்டா கோரி 15 ஆண்டு கால போராட்டங்களுக்கு பின் அரசு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை நத்தம் நிலமாக வகைமாற்றம் செய்ய மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவும் பிறப்பித்ததாகக் மனுவில் தகவல்

அரசின் மக்கள் நல திட்டப்படி பட்டா வழங்க வேண்டுமென்ற கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் – மனு

மக்கள் நல திட்டத்தில், மாற்று இடம், மறு வாழ்வு வழங்க வகை செய்துள்ளது என்பதால் இந்த இடத்தை காலி செய்ய தயார் என உத்தரவாதம் அளித்தால் உத்தரவு பிறப்பிக்கப்படும் – நீதிபதிகள்
[2/4, 12:00] Sekarreporter 1: சென்னை மாம்பலம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை அகற்றுவதற்கு ஆகும் செலவை சம்பந்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் அண்மையில் பெய்த மழை காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் நீர் தேங்கி நின்றது. பல இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது.
இவ்வாறு தேங்கி கிடந்த மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில், மாநகராட்சி சார்பில், திநகர் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வடிகால்கள் வழியாக தண்ணீரை வெளியேற்றிய போதிலும், தண்ணீர் கால்வாயில் செல்லவில்லை. மாறாக, வடிகால்களில் இருந்து மீண்டும் ரிவர்ஸ் ஆகி தண்ணீர் வந்தது. இதனால், சில நாட்களாக குடியிருப்பு பகுதியில் தண்ணீர் அப்படியே தேங்கி கிடந்தது. இந்த நிலையில் தண்ணீர் ஏன் வடியாமல் இருக்கிறது என்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, திநகர், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, மேற்கு மாம்பலம், சிஐடி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் வெளியேறும் தண்ணீர் மாம்பலம் கால்வாய் வழியாக தான் வெளியேறுகிறது. இந்த கால்வாயை சீரமைக்க கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 6 ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் கால்வாய் சீரமைப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. மாறாக, சீரமைப்பு பணியின் போது, கட்டிட கழிவுகளை கால்வாய் அருகே ஆங்காங்கே கொட்டி விட்டு சென்றனர். இந்த நிலையில் சென்னையில் விடிய,விடிய பெய்த மழை காரணமாக கட்டிட கழிவுகள் கால்வாயின் நீர் வழித்தடத்தை அடைத்து கொண்டது. இதனால், தண்ணீர் சீராக செல்ல முடியாமல் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பிரச்சனையை தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தன்னிச்சையாக வழக்காக எடுத்துக்கொண்டு விசாரித்து வருகிறது.இந்த நிலையில் வழக்கு இன்று பசுமைத் தீர்ப்பாய நீதிபதி இராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதி கட்டிட கழிவுகளை அகற்றுவதற்கான செலவை ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்கள் செலுத்த வேண்டும் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
[2/4, 12:25] Sekarreporter 1: 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், கடந்த நவம்பர் 21ஆம் தேதி தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை பிறப்பித்த உத்தரவில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வைக்கப்பட்டுள்ள நகைக்கடன்களை ரத்து
செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இந்த உத்தரவு பொது நலனுக்கு முரணாக அறிவிக்கப்படுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்வேறு இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், பயிர்களுக்கான இழப்பீடு ஆகியவற்றை வழங்கி 2021-22ஆம் ஆண்டில் நிதி பற்றாக்குறையுடன் உள்ள அரசு, நகைக்கடன் ரத்து செய்யும்போது பல்வேறு விதிமீறல்களை செய்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நகைக்கடனுக்கான வட்டி மற்றும் அசலில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டிவருபவர்களுக்கு கடன் தள்ளுபடி சலுகை வழங்காமல், எந்த தொகையும் செலுத்தாதவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும், கூட்டுக்குடும்ப நடைமுறையை சிதைக்கும் வகையில் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

நகைக்கடன் தள்ளுபடி மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கான பயன்களை விவசாயிகளும், சுய உதவி குழுக்களும் பெறுவதற்கு வருமானம் மற்றும் பொருளாதார எல்லை ஆகியவை நிர்ணயிக்கப்பட்டுள்ளபோது, தற்போதைய நகைக்கடன் தள்ளுபடிக்கு அதுபோன்ற விதிகள் ஏதும் பின்பற்றப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தமிழக அரசின் நகைக்கடை தள்ளுபடி உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் கடிதம் அனுப்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதனை ஏற்ற நீதிபதிகள், வாபஸ் பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[2/4, 14:58] Sekarreporter 1: ரயில்வே தண்டவாளங்கள் அருகில் சூரிய மின் சக்தி வேலிகளை அமைப்பது குறித்து ரயில்வே துறையும், வனத் துறையும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும்….

ரயில்கள் மோதி யானைகள் பலியான சம்பவங்கள் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அதுவரை சூரிய மின்சக்தி வேலிகள் அமைக்க வேண்டாம் எனவும் ரயில்வே துறைக்கு உத்தரவு

ரயில்வே தண்டவாளங்கள் அருகில் சூரியமின் சக்தி வேலிகளை அமைப்பது வன விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் – வனத்துறை

கோவை – பொள்ளாச்சி – பாலக்காடு வழித்தடத்தில் செல்லும் ரயில்களின் வேகத்தை மணிக்கு 45 கிலோமீட்டர் என்ற அளவில் கட்டுப்படுத்தியுள்ளது போதாது. மேலும் குறைப்பது குறித்து நிபுணர் குழுவுடன் கலந்தாலோசிக்க வேண்டும் – நீதிமன்றம்

உணவுப்பொருட்கள் தண்டவாளங்களுக்கு அருகில் வீச வேண்டாம் என பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார்
[2/4, 15:25] Sekarreporter 1: ரயில்வே தண்டவாளங்கள் அருகில் சூரிய மின் சக்தி வேலிகளை அமைப்பது குறித்து ரயில்வே துறையும், வனத் துறையும் கலந்து பேசி தீர்வு காண வலியுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதுவரை சூரிய மின்சக்தி வேலிகள் அமைக்க வேண்டாம் என ரயில்வே துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

ரயில்கள் மோதி யானைகள் பலியான சம்பவங்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ரயில்வே துறையும், தமிழக வனத்துறையில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்தன.

அந்த அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிகள், கோவை – பொள்ளாச்சி – பாலக்காடு வழித்தடத்தில் செல்லும் ரயில்களின் வேகத்தை மணிக்கு 45 கிலோ மீட்டர் என்ற அளவில் கட்டுப்படுத்தியுள்ளது போதாது என்றும், வேகத்தை மேலும் குறைப்பது குறித்து நிபுணர் குழுவுடன் கலந்தாலோசித்து பிப்ரவரி 25ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தெற்கு ரயில்வேவுக்கு உத்தரவிட்டனர்.

ரயில்வே தண்டவாளங்கள் அருகில் சூரியமின் சக்தி வேலிகளை அமைப்பது வன விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என வனத்துறை ஆட்சேபம் தெரிவிப்பதால், இந்த விவகாரத்தில் ரயில்வே துறையும், வனத்துறையும் கலந்து பேசி தீர்வு காண வலியுறுத்திய நீதிபதிகள், அதுவரை சூரிய மின்சக்தி வேலிகள் அமைக்க வேண்டாம் என ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அதேபோல யானைகள் கடந்து செல்வதற்கான சுரங்க பாதைகளை அமைப்பதற்கான நிதியை ஒதுக்க ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ரயில் ஓட்டுனர்கள், யானைகள் வருவதை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள தாவரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், யானைகள் கடக்கும் பகுதிகளில் அலாரங்கள் அமைக்கவும் ரயில்வே துறைக்கு உத்தரவிட்டனர்.

உணவுப்பொருட்கள் தண்டவாளங்களுக்கு அருகில் வீச வேண்டாம் என பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், யானைகள் வருவது குறித்து ரயில் ஓட்டுனர்களை எச்சரிக்க, கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மார்ச் 18ம் தேதி அடுத்தகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய ரயில்வே துறைக்கும், வனத்துறைக்கும் உத்தரவிட்டனர்.

மேலும் வன விலங்குகள் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்க கோரிய தமிழக அரசு அனுப்பிய கருத்துருவை இரு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க, மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதுசம்பந்தமான விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[2/4, 15:26] Sekarreporter 1: நடிகர் சூரி அளித்த பண மோசடி புகாரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீதான வழக்கின் விசாரணையை சென்னை மத்திய குற்றபிரிவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக கூறி, நடிகர் சூரியிடம் பணமோசடி செய்ததாக, முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி நடிகர் சூரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது சூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால் அவருக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரிகள் அவருக்கு சாதகமாக செயல்படுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் இது போன்ற பண மோசடி செயல்களில் ஈடுபடக்கூடாது கருத்து தெரிவித்தார். மேலும், கோடிக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளதால் இந்த வழக்கின் விசாரணையை மத்திய குற்ற பிரிவு காவல்துறைக்கு மாற்றி உத்தரவிடுவதாகவும், துணை ஆணையர் பொறுப்பில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் எனவும், இதனை கூடுதல் ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரி மேற்பார்வையிட வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் குடவாலா மீது புதிதாக விசாரணை நடத்தி அதை ஆறு மாதங்களுக்குள் முடித்து, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.
[2/4, 15:27] Sekarreporter 1: அரியலூர் மாணவி (நந்தினி) கொலை தொடர்பாக அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 16ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூரைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி மாயமானார். இதற்கிடையே, கீழமாளிகை கிராமத்தில் அழகுதுரை என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை, மணிகண்டன், மணிவண்ணன், ராமச்சந்திரன், திருமுருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.

இந்த வழக்கை ஜெயங்கொண்டம் டிஎஸ்பி விசாரித்து வந்த நிலையில், விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றக்கோரி மாணவியின் தாயார் ((ராஜகிளி)) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கை வேறு அமைப்பு விசாரணைக்கு மாற்ற மறுத்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்க அரியலூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி விசாரணை தொடங்கி 12 சாட்சிகள் விசாரிக்கப்படுள்ள நிலையில், மேலும் சில குற்றச்சாட்டுக்களை சேர்க்க அனுமதி கோரி இரும்புலிக்குறிச்சி காவல் ஆய்வாளர் தரப்பில் அங்கு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை அனுமதித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகளை சேர்க்க உத்தரவிட்டது.

அரியலூர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இந்த வழக்கில் மூன்றாவது குற்றம்சாட்டப்பட்ட நபரான ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனு நீதிபதி ஜெகதிஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிற குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமுலத்தில் கூட்டுச்சதி என குறிப்பிடாத நிலையிலும், குற்றச்சாட்டுகள் வரையறுக்கப்பட்ட நிலையிலும் மீண்டும் குற்றச்சாட்டுகளை சேர்ப்பது சட்டவிரோதம் என மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்
காந்திகுமார் வாதிட்டார். தடயங்களை அழித்ததாக மட்டுமே வழக்குப்பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் கூட்டுச்சதி என குற்றச்சாட்டை சேர்ப்பது சட்டவிரோதம் என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அரியலூர் நீதிமன்ற விசாரணைக்கு தடைவிதித்தும், காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[2/4, 15:28] Sekarreporter 1: கோடைவாசஸ்தலங்களான ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் தடை கண்டிப்புடன் அமல்படுத்தப்படுவதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வனபாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, உதகமண்டலம், கொடைக்கானல் போன்ற மலைவாச தலங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒரு முறை பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வருவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்பனையை தடுப்பதாகவும், கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கோவை ஆட்சியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஊட்டி வரும் பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்ய குன்னூர் மற்றும் கோத்தகிரியில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்ய செக் போஸ்ட்களில் முன்னாள் ராணுவத்தினரை பணியமர்த்தியுள்ளதாகவும், பயணிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாநில நெடுஞ்சாலையில் 32 குடிநீர் சுத்திகரிப்பு மையங்களும், தேசிய நெடுஞ்சாலையில் 14 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஊட்டியில் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீரும், குளிர்பானங்களும் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகங்களின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு, பழனியில் பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

அதேபோல கொடைக்கானலில் குடிநீர் ஏடி எம் கள் முறையாக இயங்குகின்றனவா என ஆய்வு செய்யவும் உத்தரவிட்டனர்.

பிளாஸ்டிக் தடை கண்டிப்புடன் அமல்படுத்தப்படுவதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டனர்.

இதேபோல கோவை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்களும் நேரில் ஆய்வு செய்து அறிக்கையளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[2/4, 15:29] Sekarreporter 1: தமிழகத்தில் விலங்குகள் வேட்டையாடப்படுவது உள்ளிட்ட வனக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தமிழ்நாடு, கேரளா மாநில காவல் துறை, வனத்துறை அதிகாரிகள் மற்றும் சிபிஐ அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வனவிலங்குகள் சரணாலயங்களைப்பாதுகாப்பது தொடர்பாகவும், யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வு விசாரித்து வருகிறது.

யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

தற்போது வனக் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சிபிஐ கண்காணிப்பாளர் நிர்மலா தேவி விசாரித்து வருவதாக கூறிய நீதிபதிகள், தமிழ்நாடு – கேரளா மாநில காவல் துறை, வனத்துறை அதிகாரிகள் மற்றும் சிபிஐ அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

சிறப்பு புலனாய்வு பிரிவில் இடம்பெற உள்ள அதிகாரிகளின் பெயர்களை தெரிவிக்க, இரு மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 14ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[2/4, 20:33] Sekarreporter 1: இந்த சட்டப்பிரிவு அமலில் இருக்கும் வரை வீட்டில் வைத்து தான் குடிக்க வேண்டும் ஒன்று அப்பில் செய்ய வேண்டும் அல்லது சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்த சட்டத் திருத்தம் செய்து அதை நிறைவேற்ற வேண்டும் தற்போது இல்லை அதுதான் என்று வழக்கறிஞர் கூறினார்
[2/4, 21:24] Sekarreporter 1: அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணைக்கு அனுமதி – உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் பிப்ரவரி 7 திங்கட்கிழமை முதல் நேரடி, காணொலி மற்றும் ஹைபிரிட் முறையில் விசாரணை நடைபெறும் என தலைமை பதிவாளர் அறிவிப்பு…

வழக்கறிஞர்கள், நேரில் ஆஜராகி வாதிடும் மனுதாரர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம்….

வழக்கறிஞர் சங்கங்கள், வழக்கறிஞர் அறைகள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படலாம்…

உணவகம், நூலகம் ஆகியவை திறக்க அனுமதி இல்லை..

உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் சார்பில் அறிவிப்பு வெளியீடு
[2/4, 21:57] Sekarreporter 1: சென்னை உயர் நீதிமன்றம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உள்ளிட்ட தமிழகம் முழுதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி வழக்கு விசாரணைக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2020 மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக உயர் நீதிமன்றம் மூடப்பட்டு, அவசர வழக்குகளை மட்டும் நீதிபதிகள், தங்கள் வீடுகளில் இருந்து காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நீதிபதிகள், உயர் நீதிமன்றத்துக்கு வந்து வழக்குகளை விசாரித்தனர்.

அதன் தொடர்ச்சியாக வழக்கின் தன்மையை பொறுத்தும் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி வாதிட விரும்பும் பட்சத்திலும் நேரடி விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது.
வயதில் மூத்த வழக்கறிஞர்கள் தொடர்ந்து காணொளி காட்சி மூலமும் ஆஜராகி வந்தனர். நேரடி விசாரணை முறை, காணொளி காட்சி விசாரணை முறை என கலப்பு விசாரணை முறை அமலில் இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில், வழக்குகள் நேரடியாக மட்டுமே விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 27ம் தேதி அறிவித்திருந்தது.

21 மாதங்களுக்கு பின் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் நேரடி விசாரணை துவங்க இருந்த நிலையில், ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக அந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு, காணொலி காட்சி மூலம் மட்டுமே வழக்குகள் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது

தற்போது ஒமிக்ரான் தொற்று குறைய தொடங்கியுள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை உள்ளிட்ட தமிழகம் முழுதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் நேரடி விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

எனினும் முழுக்க முழுக்க நேரடி விசாரணையாக இல்லாமல், நேரடி விசாரணை முறை மற்றும் காணொளி காட்சி விசாரணை முறை என கலப்பு முறையில் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அறைகளை கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அளிக்கப்பட்டுள்ள நிலையில்,
உணவகங்கள், நூலகங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

குறிப்பாக நேரடி விசாரணைக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள், வழக்கில் தானே நேரில் ஆஜராகி வாதிடும் மனுதாரர்கள்,வழக்காடிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பொறுப்பு தலைமை நீதிபதி
முனீஸ்வர்நாத் பண்டாரி அறிவுறுத்தலின் பேரில் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
[2/5, 07:15] Sekarreporter 1: அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு மின்கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை ஐந்து மடங்கு அதிகமாக விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுமதியின்றி கட்டிடம் கட்டியுள்ளதாக கூறி, சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த காஞ்சனா என்பவருக்கு சொந்தமான வீட்டுக்கு சீல் வைக்க மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து காஞ்சனா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, மனுதாரருக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் அந்த உத்தரவில், ஆக்கிரமிப்புகளையும், விதிமீறல்களையும் கண்டறிய டிரோன் போன்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், சிறப்பு அதிரடி படை அமைக்கவும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், விதிமீறல் கட்டிடங்களுக்கு வர்த்தக கட்டிடங்களுக்கான கட்டணத்தில் ஐந்து மடங்கு அதிகமாக மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை விதிக்கும்படி உத்தரவிட்டனர்.

அதேபோல கட்டுமானங்கள் முடிந்த பின் கட்டிடத்துக்கு ஒப்புதல் கோரிய விண்ணங்களை ஏற்கக் கூடாது என அறிவுறுத்தினர்.

கட்டிட அனுமதி கோரும் விண்ணப்பங்களை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு நியாயமான அவகாசம் வழங்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், உடனடியாக ஒப்புதல் வழங்க கோருவது என்பது லஞ்ச லாவண்யத்தையே ஊக்குவிக்கும் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
[2/5, 13:48] Sekarreporter 1: வரதட்சணை குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததாலும், இரண்டாவது மணம் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாலும் கணவருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறை தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், அன்னிமங்கலத்தைச் சேர்ந்த முருகானந்தமும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த தமயந்தியும் 2001ல் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இருவருக்கும் தமிழமுதன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தன்னை புகுந்த வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டதாகவும், மேலும் சட்டவிரோதமாக, தனது சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி, முருகானந்தம், அவரது பெற்றோர், சகோதரர் உறவினர்களுக்கு எதிராக, தமயந்தி, ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், முருகானந்தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அபராதத்தொகையை தமயந்திக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டது.

அதேபோல குற்றம்சாட்டப்பட்ட முருகானந்தத்தின் உறவினர்களுக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நாமக்கல் நீதிமன்றம் பிறப்பித்த இந்த தீர்ப்பை எதிர்த்து முருகானந்தம் உள்ளிட்ட அவரது உறவினர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, முருகானந்தம் மீதான வரதட்சணை தடைச் சட்டம், வன்கொடுமை தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பெண்கள் கொடுமை தடுப்பு சட்டம், முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொண்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையை இரு ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்தார்.

மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகானந்தத்தின் உறவினர்களை விடுதலை செய்த நீதிபதி, பெண்களின் வலிமையை குறைத்து மதிப்பிடுவது சமுதாயத்தில் தொடர்வதாகவும், அதற்கு பெண்களே பழியாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
[2/5, 14:36] Sekarreporter 1: ஃபாக்ஸ்கான் ஆலை விவகாரத்தில் அவதூறு பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சாட்டை துரைமுருகன் தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஓரகடத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் உள்ள பணியாளர்கள் தரமற்ற உணவை உட்கொண்டதால் இறந்துவிட்டதாக தகவல் பரவியதை அடுத்து, பிற தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திருவள்ளூர் தாலுக்கா போலீஸார், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

அவ்விசாரணையின் அடிப்படையில், திருச்சியை சேர்ந்த ’சாட்டை’ துரைமுருகன் என்பவர் மீது வன்முறையை தூண்டுதல், அவதூறு செய்தி பரப்புதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, ஜனவரி 19-ம் தேதி இரவு அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

இச்சூழலில், `சாட்டை’ துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சாட்டை துரைமுருகன் தாக்கல் செய்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் மீதான இந்த வழக்கின் அடிப்படையில் தான் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை பிப்ரவரி 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்
[2/5, 16:49] Sekarreporter 1: முன்னுக்கு பின் முரணான சாட்சியங்கள் காரணமாக, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தர்மபுரி மாவட்டம், ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பள்ளி ஆசிரியர் செந்தில்குமார், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, மாணவி ஒருவரின் தந்தை புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தர்மபுரி மகளிர் சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் செந்தில்குமாருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2018ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து செந்தில்குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை, நீதிபதி மஞ்சுளா விசாரித்தார்.

விசாரணையின் போது, கீழமை நீதிமன்ற விசாரணையின் போது உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவிகளின் வாக்குமூலமும், புகார் அளித்த மாணவியின் தந்தையின் வாக்குமூலமும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளதாகவும், தாமதமாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் செந்தில்குமார் தரப்பில் வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில், ஆசிரியரின் பாலியல் சீண்டல்கள் தொடர்பாக, தயக்கம் காரணமாக மாணவிகள் தாமதமாக பெற்றோரிடம் தெரிவித்ததாகவும், அதை தீவிரமாக கருத வேண்டியதில்லை என்றும், மாணவிகளின் வாக்குமூலங்கள் தெளிவாக இருப்பதால் தண்டனையை ரத்து செய்யக் கூடாது என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தீவிரமாக கருத வேண்டும் எனவும், குழந்தைகளின் சாட்சியங்கள் முன்னுக்கு முன் முரணாக இல்லாமல் தெளிவாக இருக்கும் சாட்சியங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் சாட்சியம் அளித்த மாணவி, பாலியல் தொல்லை பற்றி ஏதும் குறிப்பிடவில்லை என்றும், மாணவிகளின் சாட்சியங்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளதாகவும் கூறி, ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

மேலும், முன்னுக்குப்பின் முரணான ஆதாரங்களுக்கும், சாட்சியங்களுக்கும் உரிய வலுவை கொடுக்காவிட்டால் அது நீதி வழங்கும் நோக்கத்தையே வீழ்த்தி விடும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
[2/5, 17:23] Sekarreporter 1: சட்டவிரோதமாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பணியில் நீடிப்பதை மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 1980ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சியரால் இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்ட கண்ணம்மாள் என்பவர், 1981 பெரம்பலூர் மாவட்டம் லடாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2005ம் ஆண்டு அவர் ஓய்வுபெற்ற போதும்,
உயர் நீதிமன்ற உத்தரவின்படி இவரது பணி வரன்முறை செய்யப்பட்ட போதும், பணியாற்றிய காலத்திற்கான ஊதிய உயர்வு மற்றும் ஊதிய பாக்கியை தர மறுத்து 2008ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கண்ணம்மாள் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணக்கு வந்தது.

அப்போது, இளநிலை உதவியாளராக பணியாற்றியபோது அவரது பணி வரன்முறைபடுத்தபடவில்லை என்றும், தவறுதலாக அவரது பெயர் தமிழ் ஆசிரியருக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டதால் ஊதிய உயர்வு பெற அவருக்கு தகுதியில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இளநிலை உதவியாளர் மற்றும் தமிழாசிரியர் போன்ற பதவிகள் அரசு பணியாளர் தேர்வாணையம் வழியாக தேர்வு செய்யப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளார்

கல்வித்தகுதியை ஆராயாமல் தமிழாசியராக நியமிக்கப்பட்டு 23 ஆண்டுகளாக பணியில் நீட்டிக்க அனுமதித்தே சட்டவிரோதம் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்காலிக பதவியில் 25 ஆண்டுகள் நீட்டித்த அவரை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது சட்டத்தை மீறிய செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் ஊதிய உயர்வு மற்றும் ஊதிய பாக்கியை மறுத்து பிறப்பித்த உத்தரவில் தலையிட தேவையில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக்கொண்டு, இதேபோல தற்காலிகமாக சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் பணியில் நீட்டிப்பதை மறு ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய சரியான தருணம் இது எனவும் உத்தரவில் அரசை வலுயுறுத்தியுள்ளார்.
[2/5, 20:17] Sekarreporter 1: ஜீவஜோதி மற்றும் அவரது கணவர் தண்டபாணி ஆகியோர் மீதான மோசடி வழக்கில் மூன்று மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேதாரண்யம் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு தொழில் தொடங்குவதற்காக ஜீவ ஜோதியும்
அவரது கணவர் தண்டாயுதபாணியும் தங்கள் வீட்டை அடமானமாக
வைத்து பெற்ற 10 லட்சம் ரூபாய் கடனை திருப்பித் தராமல்,
உறவினர்கள் அடியாட்களுடன் வந்து தன்னை மிரட்டி அடமான
பத்திரத்தை பிடுங்கிச் சென்று விட்டதாக நாகப்பட்டினம் மாவட்டம்,
வேதாரண்யத்தைச் சேர்ந்த வேதராசு என்பவர் வேதாரண்யம் காவல்
நிலைத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில்
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை
என்பதால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேதாரண்யம் போலீசாருக்கு உத்தரவிடக் கோரி வேதராசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், இந்த வழக்கில் 3
மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என வேதாரண்யம் போலீசாருக்கு உத்தரவிட்டு, விசாரணை தள்ளி வைத்துள்ளார்.

You may also like...