Former minister jayakumar granted bail in all cases

    [3/11, 12:54] Sekarreporter: https://youtu.be/CW1_Jk3TNMo
    [3/11, 12:54] Sekarreporter: https://youtu.be/CW1_Jk3TNMo
    [3/11, 14:37] Sekarreporter: https://youtu.be/-nVoKwE3Q28
    [3/11, 14:37] Sekarreporter: https://youtu.be/qsDQP5Z8MBc
    [3/11, 14:37] Sekarreporter: https://youtu.be/dIDYJ1u6cSg
    [3/11, 14:37] Sekarreporter: https://youtu.be/uEFH8SUbevA
    [3/11, 14:38] Sekarreporter: https://youtu.be/80oldNagqts

    நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

    முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார்.

    இது தொடர்பான வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரது ஜாமீன் மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனது மருமகன் நவீன்குமாகும், அவரது சகோதரர் மகேஷும் பங்குதாரர்களாக உள்ள மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவன நிர்வாகத்தில் ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்துவிட்டதாகவும், இது தொடர்பான சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், எந்தவித தொடர்பும் இல்லாத தான் கைது செய்யப்பட்டிருப்பதாக ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே மற்றும் மூத்த வழக்கறிஞர் நடராஜன் ஆகியோர் வாதிட்டனர்.

    புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், ஜெயக்குமார் அமைச்சராக இருந்த போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது மருமகனுக்கு ஆதரவாக செயல்பட்டு தன்னுடைய நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், அடியாட்கள அனுப்பி தன்னை தாக்கிய வீடியோ ஆதாரங்கள் ஏற்கனவே காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஜாமின் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

    காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோகுல், ஜெயக்குமார் அடியாட்களை கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும், தற்போது விசாரணை முழுமையாக முடியாததால் அவருக்கு ஜாமின் வழங்க கூடாது என வாதிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இரண்டு வாரங்களுக்கு திருச்சியில் தங்கி இருக்க வேண்டும் பின்னர் திங்கட்கிழமை தோறும் விசாரனை அதிகாரி முன்பு ஆஜராகி கைழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
    …..

You may also like...