polachi jayaraman in mhc master court /case against udayanithi Stalin

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்த மான நஷ்டஈடு வழக்கில், முன்னாள் துணை சபாநாயகர்
பொள்ளாச்சி ஜெயராமன், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போதைய, திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்புப்படுத்தி பேசியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் தன் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி, சமுதாயத்தில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கூறி அவருக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொள்ள்ச்சி ஜெயராமன், சாட்சியம் அளிக்க மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.

இதையடுத்து, மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் முன்பு பொள்ளாச்சி ஜெயராமன் இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக குறுக்கு விசாரணை செய்தார்.

குறுக்கு விசாரணை நிறைவடையாததால், விசாரணையை செப்டம்பர் 24ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

You may also like...