aag Ravinthiren பரபரப்பு வாதம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த பரிந்துரைகள் அரசை கட்டுப்படுத்தாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த பரிந்துரைகள் அரசை கட்டுப்படுத்தாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை பரிந்துரையின் அடிப்படையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட17 காவல்துறையினர், 3 வருவாய்த்துறையினருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி சம்பவத்தில் பலியான ஸ்னோலின் என்ற இளம் பெண்ணின் தாயார் வனிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில்
தமிழக அரசு தலைமை செயலாளர் சார்பில் பொதுத் துறை செயலாளர் நந்தகுமார் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில்,
நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் உண்மை கண்டறியும் அமைப்பு தானே தவிர, பரிந்துரை அமல்படுத்துவதற்கு ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

சிபிஐ, தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம், தேசிய பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையம் என சட்டபூர்வ அமைப்புகள் இந்த விவகாரம் குறித்து விசாரித்து அதிகாரிகள் மீது எந்த தவறும் இல்லை என்று கண்டறிந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளராக இருந்த திருமலை மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎன விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒரு கோடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க முடியாது எனவும், ஆணையத்தின் அறிக்கை அரசை கட்டுப்படுத்தாது என்பதால், வனிதா தககல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள்து.

You may also like...