மாநில அரசின் சட்ட மசோதாவை ரத்து செய்ய அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று கூறிய கபில் சிபல், பல மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா ஒன்றிய அரசு என அழைப்பதே சரி எனக் கூறினார்.
சென்னை கலைவாணர் அரங்கில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவன் மகன் ராகேஷ் நினைவாக, நீதி மற்றும் சமத்துவத்திற்கான அறக்கட்டளை துவக்கம் மற்றும் அவரின் திருஉருவப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், ப.சிதம்பரம்,...