charge memo quashed by nskjநீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- பொதுவாக குற்ற குறிப்பாணை விவகாரத்தில் இந்த ஐகோர்ட்டு தலையிடுவது இல்லை. ஆனால், வேறு ஏதோ காரணங்களுக்காக குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது என்று தெரிய வந்தால், அரசியல் அமைப்புச்சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அந்த விவகாரத்தில் தலையிடப்படும்.

lசென்னை ஐகோர்ட்டில், ஆனந்தஜோதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மருத்துவத்துறையில் 29 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். மருத்துவத்துறையின் நிர்வாக பிரிவு துணை இயக்குனர் பதவி உயர்வுக்கு தயாரிக்கப்பட்ட பணி மூப்பு பட்டியலில் என் பெயர் முதலில் இருந்து. 2-வதாத பிரபு, 3-வதாக ரமேஷ்குமார் ஆகியோரது பெயர்கள் இருந்தன. சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம், ரமேஷ்குமார் மூத்த நேர்முக உதவியாளராக ரமேஷ்குமார் பணியாற்றினார். அவரை துணை இயக்குனர் பதவிக்கு நியமிப்பதற்காக, எனக்கு எதிராக திடீரென குற்ற குறிப்பாணை (சார்ஜ் மெமோ) கொடுக்கப்பட்டது.
விழுப்புரத்தில் நான் 2 சமையல்காரர்களை நியமனம் செய்யும்போது, அரசு விதிகளை பின்பற்றவில்லை என்று கூறப்பட்டது. இதுகுறித்து ஏற்கனவே, மொட்டை கடிதம் வடிவில் புகார் வந்தது. அந்த புகார் மீது நடந்த விசாரணையில் குற்றச்சாட்டு பொய் என்று வந்தது. தற்போது, அதே குற்றச்சாட்டை சுமத்தி சுமதி என்பவர் கொடுத்து புகாரின் அடிப்படையில், எனக்கு எதிரான குற்ற குறிப்பாணை கொடுக்கப்பட்டுள்ளது.
இதை ரத்து செய்து, எனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் பாலா டெய்சி ஆஜராகி, ‘‘பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கும்போது, மனுதாரருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை. மேலும், பதவி உயர்வு பட்டியலில் 3-வது இடத்தில்தான் ரமேஷ்குமார் இருந்துள்ளார். அமைச்சரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி ஒரே காரணத்துக்காக அவருக்கு பதவி உயர்வு வழங்க மனுதாரருக்கு எதிராகஇதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு எதிரான குற்ற குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று வாதிட்டார்.
அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ‘‘மனுதாரருக்கு எதிரான ஆரம்பக்கட்ட விசாரணையின்போது, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் இல்லை. ஆனால், அடுத்தக்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்ததால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் உள்நோக்கம் இல்லை’’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பொதுவாக குற்ற குறிப்பாணை விவகாரத்தில் இந்த ஐகோர்ட்டு தலையிடுவது இல்லை.

ஆனால், வேறு ஏதோ காரணங்களுக்காக குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது என்று தெரிய வந்தால், அரசியல் அமைப்புச்சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அந்த விவகாரத்தில் தலையிடப்படும்.

பதவி உயர்வுக்காக பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு, இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் 2 மாதங்களுக்குள் தெரிவிக்கலாம் என்று அறிவித்த அதே நாளில், ரமேஷ்குமாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதுவும், பணி மூப்பு பட்டியலில் இவரது பெயர்3-வது இடத்தில்தான் உள்ளது. 2-வது இடத்தில் பிரபுராம் என்பவர் பெயர் உள்ளது. இதன்மூலம் அமைச்சரின் மூத்த நேர்முக உதவியாளராக பணியாற்றி ரமேஷ்குமாருக்கு பதவி உயர்வு வழங்குவதில் யாரோ ஒருவர் அவசரம் காட்டியுள்ளார் என்பது தெரிகிறது. எனவே, மனுதாரருக்கு கடந்த பிப்ரவரி 18-ந்தேதி வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்கிறேன். அவருக்கு பணி மூப்பு பட்டியலின் அடிப்படையில் துணை இயக்குனர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
……….

You may also like...