Cj benchதமிழகத்தில் 245 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் மூன்று மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 245 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் மூன்று மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கால்நடைகள், கோழி போன்ற பறவைகளுக்கு உடனடி மருத்துவ சிகிச்சைகள் வழன்க்கும் வகையில், 245 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் பணியமர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் இந்த மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு வரவில்லை எனக் கூறி, ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்ற விலங்குகள் நல ஆர்வலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், பிரதமரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதால் இந்த வாகனங்களை தமிழக அரசு பயன்படுத்தவில்லை என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு வந்தால், நோய் பரவல் கட்டுப்படுத்தப்படும் என்பதால், நடமாடும் கால்நடை மருத்துவமனைகளை செயல்பாட்டுக்கு கொண்டு வரக் கோரி அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 245 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று மாதங்களில் அவை செயல்பாட்டுக்கு வரும் எனவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

You may also like...