For professor mhc adv Anantha krishnan argued. சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வேதியியல் துறை பேராசிரியர்கள் இருவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வேதியியல் துறை பேராசிரியர்கள் இருவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பி.எச்.டி. படித்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த அந்த மாணவி ஐ.ஐ.டி. விடுதியில் தங்கி படித்து வந்தார். இதனிடையே, தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் மாணவி புகார் அளித்தார். மாணவியின் புகாரின் அடிப்படையில் 2 பேராசிரியர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி. வேதியியல் துறையை சேர்ந்த பேராசிரியர்கள் ஜி. எடமன பிரசாத், ரமேஷ் எல். கர்தாஸ் ஆகியோர் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

2020ல் நிர்வாகத்திடம் பெண் அளித்த புகாரில் ஆதாராங்கள் இல்லை எனவும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதால் இரு ஆண் மாணவர்கள் வளாகத்திற்கு வெளியே தங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது எனவும், நிர்வாகத்திடம் அளித்த புகாரில் தங்கள் இருவரின் பெயர்கள் சேர்க்கப்படாத நிலையில், முதல் தகவல் அறிக்கையில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் முன்ஜாமின் மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பேராசிரியரின் பொறுப்பில் உள்ள ஆய்வகத்தில் தான் அந்த மாணவி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும், முதலாவதாக குற்றம்சாட்டப்பட்ட நபரான முன்னாள் மாணவர் கிங்சோ தேபர்மனின் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பேராசிரியர்கள் பொறுப்பாக உள்ள ஆய்வகத்தில் நடந்த சம்பவம் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும், அதனால் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

பேராசிரியர்கள் தரப்பில் மாணவர்களும் ஆய்வக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதாகவும், கிங்சோவை பேராசிரியர்களுடன் ஒப்பிடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை அழைத்த போதெல்லாம் விசாரணைக்கு ஆஜராகி இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

  1. பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சிபிசிஐடி காவல்துறையிடம் சொல்லாமால் தமிழகத்தை விட்டு செல்லக்கூடாது என்றும், பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல நேரிட்டால் விசாரணை நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் செல்லக்கூடாது என்றும் இருவருக்கும் நிபந்தனைகளை விதித்து, முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...