Judge barath chakravarthy மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் நகரமயமாக்கல் காரணமாக எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கோயில் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் நகரமயமாக்கல் காரணமாக எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல்
கோயில் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள பழமையான சித்தி கணேசர் நடராஜ பெருமாள் துர்கை அம்மன் கோவிலுக்கு சொந்தமான கல்யாண மண்டபம் நிர்வாகம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்துள்ள தீர்ப்பில், மக்கள் ஒரு காலத்தில் தங்களது சொத்துகளை கோயிலுக்கு தானமாக அளிக்கும் பழக்கம் இருந்ததாகவும் கோயில் சொத்துகளை அபகரிப்பது அல்லது சுரண்டுவது பயத்தை அளித்ததாக கூறியுள்ளார்.

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாதல் காரணமாக அந்த பயம் அற்றுப்போய் விட்டதாக தெரிவித்துள்ள நீதிபதி கோயில் சொத்துகள் எந்த வித குற்ற உணர்ச்சிகளும் இல்லாமல் ஆக்கிரமிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

You may also like...