Pnpj bench ஏரியா தகராறில் ரவுடியை கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Add pp babu

ஏரியா தகராறில் ரவுடியை கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த சத்தியராஜ் எதிராக பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்தர பதிவேடு குற்றவாளியான அவர், கடந்த 2013ம் ஆண்டு தனது சகோதரியோடு சென்னை உயர் நீதிமன்றம் எதிரில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஏரியா தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக
மூன்று பேர் கொண்ட கும்பல் சத்தியராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த சத்தியராஜுக்கு ஓமந்தூரர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு திரும்பிய நிலையில், உடல் நலக்கோளாறு ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இது தொடர்பாக விஜி என்பவர் சரணடைந்த நிலையில், அப்பன் ராஜ், வேலு ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வழக்கை விசாரித்த சென்னை ஆறாவது கூடுதல் நீதிமன்றம், மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2017ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து மூவர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், டீக்காராமன் அமர்வில் வந்த போது, பலியான சத்தியராஜின் சகோதிரி அளித்த சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது எனவும் தங்களுக்கு எதிராக போதிய சாட்சிகள் இல்லை எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அனைத்து சாட்சிகளையும் முறையாக ஆய்வு செய்தே கீழமை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளதால், அந்த தீர்ப்பில் தலையிட தேவையில்லை எனக்கூறி, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து, தண்டனைதை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

You may also like...