Judge ilanthiriyan 1,146 கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி நிரந்தரம் செய்வது தொடர்பான தேர்வு நடைமுறைகளை 12 வாரங்களில் முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரிவுரையாளர்கள் நல் சங்க செயலாளர் அருணகிரி வழக்கில் உத்தரவு

அரசு கலை, 1,146 கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி நிரந்தரம் செய்வது தொடர்பான தேர்வு நடைமுறைகளை 12 வாரங்களில் முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகளில் பணியாற்றிய 1,146 கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி நிரந்தரம் செய்வது தொடர்பான தேர்வு நடைமுறைகளை 12 வாரங்களில் முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த 2000ம் ஆண்டு முதல் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களை உதவி பேராசிரியர்களாக பணிநிரந்தரம் செய்ய 2020ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு, நேர்முகத் தேர்வு வரை தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின் சட்டமன்ற தேர்தல் காரணமாக தேர்வு நடைமுறைகள் நிறுத்தப்பட்டன.

ஆட்சி மாற்றத்துக்கு பின், இந்த தேர்வு நடைமுறை கைவிடப்பட்டது. கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி நிரந்தரம் செய்வது தொடர்பான அரசாணையை ரத்து செய்து, 4000 உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்வது தொடர்பாக 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பை ரத்து செய்து, 2020ம் ஆண்டு அரசாணைப்படி கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பான நடைமுறையை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி, கவுரவ விரிவுரையாளர்கள் நல சங்க செயலாளர் அருணகிரி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தேர்வு நடைமுறைகள் துவங்கிய பின் அதை மாற்ற முடியாது எனக் கூறி, 1,146 கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி நிரந்தரம் செய்வது தொடர்பான தேர்வு நடைமுறைகளை 12 வாரங்களில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த வழக கில் மூத்த வக்கீல. ஜி. சங்கரன் , வக்கீல் மார்டின் ஜெயகுமார் ,வக்கீல. செல்வி ஜார்ஜ்.ஆஜராகி வாதாடினார்

You may also like...