Judge jayachandren refuse to quash FIR against formee minister

முன்னாள் அமைச்சர் ஆவடி நாசருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நாசர், வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகவும், தடுக்க முயன்ற தன்னை ஆபாசமாக பேசியதுடன், தன் மீது காரை ஏற்ற முயற்சித்ததாகவும் அதிமுகவைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், ஆவடி நாசர் மீது, மிரட்டுதல், தவறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்ப்ட்டது.

பூந்தமல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நாசர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நாசர் தரப்பில், தனக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தெளிவற்றதாக உள்ளதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, விசாரணையின் போது மட்டுமே நாசருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிருபிக்கமுடியும் என்பதால், ஆவடி நாசர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறி, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், நாசர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளதால், விசாரணை நடைபெற்று வரும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்களிப்பது குறித்து பரீசிலிக்கும்படி பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

You may also like...