Judge sounder temple land auction confirmation staye. d கோயில் நிலத்தை ஏலம் உறுதி செய்ய இந்து அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

கோயில் நிலத்தை ஏலம் உறுதி செய்ய இந்து அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

சேலம் அருகே அம்மாணி கொண்டலாம் பட்டியில் மலை மீது சென்ராய பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலக்கு சொந்தமாக 9 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.இந்த நிலத்தை இந்து அறநிலைத்துறை சார்பில் நியமனம் செய்யப்பட்ட தக்கர் திடீரென்று ஏலம் விட அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதை எதிர்த்து இந்த கோயிலின் அறங்காவலர் வெங்கடப்பன் இந்து அறநிலையத்துறை மீது சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி சவுந்தர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக வக்கீல் கே.செல்வராஜ் ஆஜராகி, கோயிலுக்கு சொந்தமான 9 ஏக்கர் விவசாய நிலத்தை திடீரென்று இந்து அறநிலைத்துறை தக்கர் ஏலம்விட அறிவிப்பு வெளியிட்டது தவறு. தற்பாதைய நடவடிககை இந்து அறநிலையத்துறை 1963ம் ஆண்டு கோயில் நிலம் குத்தகை விடும் சட்டம் பிரிவு 2, 4, மற்றும் 6ம் விதிக்கு எதிரானது.இந்த விதிப்படி ஏலம் விடுவற்கு 15 நாட்களுக்கு முன்பு அறங்காவலர்களுக்கு நோட்டீசு கொடுக்க வேண்டும். அதை செய்யவில்லை. இதுதவிர கோயில் தக்கர் ஏலம் விதி அதிகாரம் இல்லை. சட்டப்படி தக்கர் அறிவிப்பு வெளியிட்டது தவறானது. இதனால் கோயில் நிலம் வேறு நபர்களுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. ஏலத்தை கோயில் உள்ள இடத்தில் நடத்தாமல் வேறு இடத்தில் நடத்துகிறார்கள்.இந்த நிலம் வருமானத்தை வைத்து தான் பெருமாள் கோயில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்படுகிறது. எனவே இந்த ஏலம் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றார்.

இதை கேட்ட நீதிபதி , ஏலத்தை நடத்தலாம், ஆனால் அதை உறுதி செய்ய கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டு வழக்கின் விசாணையை அடுத்த மாதம் ஒத்தி வைத்து இதில் இந்து அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனர், கோயில் தக்கர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

You may also like...