Judge tickaraman advised to lower court மோசடி வழக்குகளில் ஜாமீன் வழங்கும்போது குற்றத்தின் தன்மையை எச்சரிக்கையுடன், கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும்

மோசடி வழக்குகளில் ஜாமீன் வழங்கும்போது குற்றத்தின் தன்மையை எச்சரிக்கையுடன், கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள வீட்டை லட்சுமிநரசிம்மன் என்பவரும், அவரது மனைவி திரிவானா என்பவரும் வாடகைக்கு எடுத்து, பின் தாங்கள் தான் உரிமையாளர் என கூறி நோ புரோக்கர் டாட் காம் மூ, சந்தியா கிரேசி, மோனிஷா ஆகியோருக்கு 4 லட்ச ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டுள்ளனர்.

இதுகுறித்து, வீட்டு உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் லட்சுமிநரசிம்மன் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கைதான லட்சுமிநரசிம்மனுக்கு ஆலந்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அவரது மனைவி திரிவானா முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனு நீதிபதி RMT.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் லியோனார்ட் அருள் ஜோசப் செல்வம், வீட்டின் உரிமையாளர் என்று தங்களை கூறி, 4 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளனர் என்றுமல் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கைதான 13வது நாளில் லட்சுமிநரசிம்மனுக்கு ஆலந்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை சுட்டிக்காட்டி, இதுபோன்ற மோசடி வழக்குகளில் குற்றத்தின் தன்மையை எச்சரிக்கையுடன், கவனத்துடன் பரிசீலித்து ஜாமீன் வழங்க வேண்டும் என கீழமை நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், பணமோசடி குற்றச்சாட்டில் மனுதாரரின் தீவிர பங்கு உள்ளதால், முன் ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, லட்சுமி நரசிம்மனுக்கு ஆலந்தூர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

You may also like...