Madras high court 28 th january order சென்னை ஐகோர்ட் ஜனவரி மாத உத்தரவு

[1/28, 11:38] Sekarreporter: நடிகர் விஜய் இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ சொகுசுகாருக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிம்டபிள்யூ எக்‌ஸ் 5 என்ற சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதற்கு தாமதம் செய்ததற்காக 400 சதவீத அளவிற்கு வணிகவரித் துறை அபராதம் விதித்துள்ளதாக தெரிவித்திருந்தார். ஏற்கனவே நுழைவு வரி தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்ததால்தான் இந்த தாமதம் ஏற்பட்டதாதாகவும் , நுழைவு வரி செலுத்திய நிலையில் அதிகப்படியான அபராதம் விதித்த தை எதிர்த்தே வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் எனவே அபராதம் விதிப்பது தொடர்பாக நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதி சி.சரவணன் முன்பு நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
மேலும் இதேபோல் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அடையார் கேட் ஹோட்டல் நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கோடு இந்த வழக்கின் சேர்ப்பதாக நீதிபதி தெரிவித்தார். இந்த மனு மீதான விசாரணை முடியும்வரை அபராதத்தை வசூலிக்க எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதை வணிக வரித்துறை உறுதி செய்யுமாறு அரசு வழக்கறிஞர்ரிச்சர்ட் வில்சனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
[1/28, 12:22] Sekarreporter: பெத்தேல் நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு சென்னை நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள குடியிருப்புகளுக்கான மின் இணைப்பு துண்டிக்க வேண்டுமென்ற உத்தரவை, கொரோனா பேரிடர் மற்றும் மாணவர்களின் நலன் கருதி நீட்டிக்க வேண்டுமென் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை. வைத்துள்ளது

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள பெத்தேல் நகரில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு சார்ந்த ஆக்கிரமிப்பை அகற்றும்படி கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி ஐ.ஹெச்.சேகர் என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது

அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்று மீண்டும் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். மேலும், வீடு மற்றும் வணிக நோக்கங்களுக்காக ஆக்கிரமித்தவர்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கடந்த வார உத்தரவுக்கு பிறகு, 1052 வணிக கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது, 1007 நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது, 65 சுற்றுசுவர்கள் இடிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது. கொரோனா காலக்கட்டம் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலன், அவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு, வீடுகளுக்கான மின் இணைப்பை துண்டிக்கும் உத்தரவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டு அனைத்தும் திறக்கப்பட்டும், அனுமதிக்கப்பட்டும் உள்ள நிலையில், இந்த இடத்திற்கு மட்டும் கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டுவதா என கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பெத்தோல் நகரில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால் அவர்கள் பாதிக்கபடுவதால் ஆக்கிரமிக்ப்பு அகற்றும் உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கிடையில், பெத்தேல் நகர் பொதுமக்கள் தரப்பில் ஆக்கிரமிக்ப்பு அகற்ற உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரி இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த மனுக்களையும், அரசு தரப்பு கூடுதல் மனுவையும் வரும் திங்கட்கிழமை (ஜனவரி 31) விசாரிப்பதாக கூறி வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்..
[1/28, 12:44] Sekarreporter: சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பை
பி.எஸ் டி. நிறுவனம்
தரமற்ற முறையில் கட்டியதாக தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்கும் என்றும் சமரச மையம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் 2016-ல் 112 கோடி ரூபாய் செலவில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இவை தரமற்றவையாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்ததால்,  ஐஐடி குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.

அதில், தரமற்ற வகையில் குடியிருப்பை கட்டிய பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்க்கவும், அந்த நிறுவனத்திற்கு இனி அரசு ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், பி எஸ் டி நிறுவனத்துக்கு எதிராக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நோட்டீஸ் அனுப்பியது. அதில், ஏன் தடை பட்டியலில் சேர்க்கக் கூடாது என விளக்கம் அளிக்க அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நோட்டீசை எதிர்த்து பி.எஸ்.டி. நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, 93 சதவீத சரி செய்யும் பணிகள் முடிந்து விட்டதாகவும் பி.எஸ்.டி.நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்த்து பணிகள் மேற்கொள்ள தடை விதித்தால் அது சீரமைப்புப் பணிகளை ஸ்தம்பிக்கச் செய்து விடும் எனக் கூறி, அந்நிறுவனத்திற்கு எதிரான நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தாக்கல் செய்த மனுவில் ஏற்கனவே அந்த நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில்,
பிரச்சினைகளை
Aribitration center என்று சொல்லக்கூடிய சமரச மையத்தில் மூலம் தீர்த்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதி , இந்த வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்கும், சமரச மையம் விசாரிக்கத் தேவையில்லை என்று கூறி அந்த கோரிக்கையை நிராகரித்தார். வழக்கு மீதான விசாரணையை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
[1/28, 13:43] Sekarreporter: உதகமண்டலத்துக்கு, ஒரு முறை பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிப்பது குறித்து, அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வனபாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, உதகமண்டலம், கொடைக்கானல் போன்ற மலைவாச தலங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒரு முறை பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோவை மாவட்ட எல்லையில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் தண்ணீர் பாட்டில்கள் கைப்பற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அதேசமயம், நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, அங்கு கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்கப்படுவதில்லை என்றும், சுற்றுலா பயணிகள் தான் அவற்றை கொண்டு வருவதாகவும், அவ்ற்றை பறிமுதல் செய்ய சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வருவதை தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[1/28, 13:57] Sekarreporter: பிளாஸ்டிக் பாட்டிலுடன் வரும் வாகனங்களை 6 அல்லது ஓராண்டு வரை மீண்டும் அந்த சுற்றுலா பகுதிக்கு வர தடை விதிக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் சிந்திக்க வேண்டும் . திருப்பதியில் அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தி மேலே சென்றால் அந்த சுற்றுலா வாகனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு வாகன பறிமுதல் போன்ற நடவடிக்கைகள் இருக்கிறது என நீதிபதி சுட்டி காட்டினார். கொடைக்கானல், நீலகிரியில் நிரந்தரமாக சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக்கை கொண்டு வர தடை விதிக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் ஆலோனையை வழங்கவும் தலைமை வன உயிரின காப்பாளர் சேகர் குமார் நீரஜ்யிடம் நீதிபதிகள் அறிவுறுத்தினர்
[1/28, 14:03] Sekarreporter: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் பண்ணாரி – திம்மம் சாலையில் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்தை தடை செய்வது தொடர்பான உத்தரவை அமல்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்சவர்களுடன் கூட்டம் நடத்தி பிப்ரவரி 24ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சத்தியமங்கலம் புலிகள் சரணாலய கள இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வனப்பகுதிகளில் விலங்குகள் வாகனங்கள் மோதி பலியாவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக நெடுஞ்சாலை துறை செயலாளர் தீரஜ்குமார், தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் உள்ளிட்ட அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் பண்ணாரி – திம்மம் சாலையில் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து 2019ல் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் நெடுஞ்சாலைத் துறை செயலாளர் தெரிவித்தார்.

கர்நாடகாவை இணைக்கும் இந்த சாலையில் 17 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

காணொலி காட்சி மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி, இந்த சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகனங்களுக்கும், இரவு 9 மணி முதல் 6 மணி வரை இதர வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ அவசரம் உள்ளிட்ட காரணங்களை கூறி இந்த தடைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடுவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, மருத்துவ அவசரம், உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக மாவட்ட நிர்வாகம், வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களுடன் பிப்ரவரி 18ம் தேதிக்குள் கூட்டம் நடத்தி, 24ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், வனப்பகுதி சாலைகளில் வாகனங்களின் வேகத்தை கண்டறியும் கேமராக்களை பொருத்தி, அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கலாம் என் எனவும் நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.
[1/28, 14:27] Sekarreporter: பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையின் முன்னாள் ஐஜி மீது சிபிசிஜடி விசாரணை தொடங்கிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
.

லஞ்ச ஒழிப்பு துறை பணியாற்றிய ஐஜி முருகன்
தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதே துறையில் பணியாற்றிவந்த பெண் எஸ்பி கடந்த 2018ஆம் ஆண்டில் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் பெண் எஸ்பி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடரலாம் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு மனுவை
விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, சிபிசிஐடி மற்றும் விசாகா குழு விசாரணைகளை தெலுங்கானாவிற்கு மாற்றியும், அதன் விசாரணை அறிக்கைகளை 6 மாதத்தில் தாக்கல் செய்யவும் 2019 ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல் வழக்கில் பாலியல் புகார் தொடர்பான வழக்கு விசாரணையை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து, 2019ல் ஐ.ஜி. தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஜெ. சத்திய நாராயணபிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வாதங்களை முன்வைக்க நான்கு வார கால அவகாசம் கேட்கப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், இந்த வழக்கு ஏற்கனவே மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாகவும் கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். சிபிசிஐடி சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ,விசாகா கமிட்டி விதிகளின்படி துறை ரீதியான பாலியல் புகார்களை 90 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று விதி உள்ளதாக குறிப்பிட்டார். மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கு நிலையில் உள்ளதாகவும் தற்போது சிபிசிஐடி இந்த வழக்கின் விசாரணையை தொடங்கி விட்டதாகவும், எனவே கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு மட்டும் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
[1/28, 16:48] Sekarreporter: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காணொலி மற்றும் நேரடி முறையில் வழக்குகளை விசாரிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படலாம் என சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

கோரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 2020 மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன், காரணமாக உயர் நீதிமன்றம் முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களும் மூடப்பட்டன. இதனால் வழக்குகள் அனைத்தும் முழுக்க காணொலி விசாரணை நடைமுறையிலேயே நடத்தபட்டன. பின்னர் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து காணொலி விசாரணை, நேரடி விசாரணை, இரண்டும் கலந்த ஹைபிரிட் விசாரணை போன்ற முறையில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

அதன்பின்னர் இரண்டாவது அலை உச்சம் தொட்ட நிலையில் மீண்டும் காணொலி திரும்பிய அனைத்து நீதிமன்றங்களும், ஜனவரி 3ஆம் தேதி முதல் நேரடி விசாரணை மட்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒமைக்ரான் பரவலால் அந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டு, தற்போது காணொலியில் மட்டும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று தமிழக அரசு அறிவிப்பில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, பள்ளி கல்லூரி வழிபாட்டு தளங்கள் மூடல் போன்ற கட்டுப்பாடுகளை தமிழக அரசு விலக்கி கொண்டது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு ஒன்றின் விசாரணை நடைபெற்று, வழக்கு தள்ளிவைக்கப்பட்டபோது நேரடி முறையில் ஆஜராகி வாதங்களை முன்வைக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.

அப்போது பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, அரசின் கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், நேரடி மற்றும் காணொலி ஆகியவை வாயிலான ஹைபிரிட் விசாரணையை அனுமதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
[1/28, 17:46] Sekarreporter: வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ப.ரவீந்திரநாத் எம்.பி. மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ப.ரவீந்திரநாத் ஆகியோர், தங்களின் வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்தும், தவறான தகவல்களையும் தெரிவித்திருந்ததாகக் கூறி, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி, தேனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை சிறப்பு நீதுமன்றத்தில் தேனி மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி மிலானி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம்,
ஓ.பன்னீர்செல்வம், ப.ரவீந்திரநாத் எம்.பி. மீதான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பிப்ரவரி 7ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ஓ.ரவீந்திரநாத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுகள் நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் காவல்துறையினர் சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் தரப்பில் வாதிடப்பட்டது.

காவல் துறைதுறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதையடுத்து, மனு தொடர்பாக காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 1ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

அதுவரை இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
[1/28, 18:06] Sekarreporter: தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் உள்ள பெருங்குடி கிராமத்தில், தாமோதரன் என்பவர், தனக்கு சொந்தமான 10 செண்ட் நிலத்தை பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மூலம் அபகரித்ததாக தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யாததால், திருநெல்வேலி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அப்பாவு, பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட தாமோதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கின் நிலை குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
[1/28, 19:41] Sekarreporter: கட்சி கட்டுப்பாட்டை மதித்து நடப்பேன் அதிமுக எம்பி நவனீதகிருஷ்ணன் பேட்டி

You may also like...