madras high court june 12 orders roundup cj bench suunder j. rmdj bench ananth vengadesh j

[6/12, 17:48] sekarreporter1: கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள மயானத்துக்கு செல்லும் பொது பாதையில் சாலை அமைப்பதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரில், மத்திய கலாச்சார துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தின் வழியாக மயானத்துக்கு செல்லும் பாதை அமைந்திருந்தது.

கலாஷேத்ரா அறக்கட்டளை கோரிக்கையை ஏற்று ஒரு ஏக்கர் 43 செண்ட் பரப்பில் அமைந்துள்ள பாதை குத்தகைக்கு வழங்கப்பட்டதுடன், மயானத்தை வேறு இடத்துக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், நிலம் ஒதுக்கீட்டை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கமளிக்க கலாஷேத்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நோட்டீசை எதிர்த்த வழக்கில், வளாகத்தின் தென் மேற்கு பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை மயானம் அமைக்க ஒதுக்கும்படி, கலாஷேத்ராவுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி 1990ம் ஆண்டு ஒரு ஏக்கர் 16 செண்ட் நிலம் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

அதன்பின் கலாஷேத்ராவின் பயன்பாட்டில் இருந்து வந்த ஒரு ஏக்கர் 46 செண்ட் பாதை நிலம், 2004 வரை ஒரு கோடியே 66 லட்சம் ரூபாய் வாடகைக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.

கல்வி நிறுவனம் என்பதால், இந்த பாதை நிலத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி கலாஷேத்ரா முன் வைத்த கோரிக்கையை ஏற்று, நில நிர்வாக ஆணையர், நிலத்தை வழங்க 2010ம் ஆண்டு பரிந்துரைத்தார்.

அந்த பரிந்துரை மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சென்னை மாநகராட்சி, பொது பாதையில் சாலை அமைக்கும் பணிகளை துவங்கியுள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி கலாஷேத்ரா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி தரப்பில் வனிதா ஜாய்ஸ் ராணி ஆஜராகி, இந்த இடம் அரசுக்கு சொந்தமானது எனவும், மக்கள் பயன்படுத்தக்கூடிய மயானத்துக்கு செல்லக்கூடிய பாதை என்றும் இதை கலாஷேத்ராவுக்கு கொடுத்தால் மயானத்துக்கு 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கலாஷேத்ரா அறக்கட்டளையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[6/12, 17:48] sekarreporter1: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகள்

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் ஆறாவது நாளாக விசாரணை

இ பி எஸ் தரப்பிற்கு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதம்

எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்து சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை அங்கீகரித்து அவைத் தலைவர் கையெழுத்திட உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததால் பொதுக்குழுவின் அதிகாரத்தை பற்றி சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்த வேட்பாளர் தான் தேர்தலில் போட்டியிட்டார். 28/3/23 ல் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் கட்சி ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி வருகிறார். அவரது கையெழுத்துடன் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கு எதிராக அளித்த புகாரின் அடிப்படையில் கர்நாடகாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து வேட்புமனுவை அந்த நபர் வாபஸ்பெற்றார்.

கட்சி லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி கட்சி நிர்வாகிகளை நீக்கி வருகிறார். இந்த வழக்கில் முடிவு வரும் வரை எந்த நடவடிக்கையும் வேண்டாம் என தவிர்த்து வருகிறோம்.

கட்சி விதிப்படி பன்னீர்செல்வத்தை நீக்கியுள்ளதாகவும், அவரை மீண்டும் கட்சியில் சேர்த்தால் குழப்பம் தான் அதிகரிக்கும் என்பதால் நீதிமன்றம் தலையிடக் கூடாது. எட்டு மாதங்களுக்கு பின், பன்னீர்செல்வம் அணியினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

அடிமட்ட அளவில் இருந்து ஜனநாயக அடிப்படையில் செயல்படும் அதிமுக-வில், பொதுக்குழு முடிவுகள் அனைத்து உறுப்பினர்க்ளையும் கட்டுப்படுத்தும்.
பொதுச்செயலாளர் தேர்தலுக்கு 75 மாவட்ட செயலாளர்களில் 20 பேர் எடப்பாடி பழனிச்சாமியை முன்மொழிந்த நிலையில் மீத்முள்ள 55 பேர் உள்ளனர். ஆனால் பன்னீர்செல்வத்துக்கு 95 சதவீதத்தினர் எதிராக உள்ளனர். அதனால் அவரால் போட்டியிட முடியவில்லை.

ஒருங்கிணைப்பாளர் மீது எவரும் நடவடிக்கை எடுக்க முடியாது என பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு அந்த அதிகாரம் உள்ளது.அதிமுகவில் உறுப்பினர்களை நீக்கும் முன் சம்பந்தப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்க வேண்டும் என விதி கூறுகிறது.ஆனால் இதுவரை அப்படி குற்றப்பத்திரிகை ஏதும் வழங்கப்படவில்லை.

மாறாக கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்படும்.உடனடி நடவடிக்கைக்கு எந்த குற்றப்பத்திரிகையும் வழங்க அவசியமில்லை.பொதுக்குழு கூட்ட நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை என்பதற்காக பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என கூறமுடியாது.கட்சி விதிகளில் கூட உடனடி நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கட்சி விதிகள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டவை அல்ல. காலமாற்றத்துக்கு ஏற்ப கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

ஒருங்கிணைப்பாளராக இருந்த போது கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் எந்த விளக்கமும் கேட்காமல் தன் சொந்த தம்பி ராஜாவை கட்சியை விட்டு நீக்கி ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுத்தார்.
அதே நடைமுறை தான் இவரது நீக்கத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் தேர்தலில் தகுதியானவர்கள் போட்டியிட வழிவகை செய்யவே, 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என நிபந்தனைகள் கொண்டு
வரப்பட்டன.

பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ள நிலையில், அடிப்படை தொண்டர்களிடம் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை

பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானது

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், கட்சி விதிப்படி நீக்கப்பட்டுள்ளதாக விளக்கி, தனது வாதத்தை நிறைவு செய்தார்.

பன்னீர்செல்வம் தரப்பில் பதில் வாதத்துக்காக வழக்கின் விசாரணையை ஜூன் 15ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
[6/12, 17:48] sekarreporter1: திருமணத்திற்கு முன் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாய் மற்றும் பாட்டி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த வசந்தி என்பவருக்கு திருமணத்திற்கு முன்பாகவே குழந்தை பிறந்ததால், வசந்தியின் தாய் விஜயாவும், ஜெயராஜ் என்பவரும் சேர்ந்து, பச்சிளம் குழந்தையை கொலை செய்து சில்வர் அடுக்கு சட்டியில் அடைத்து, குப்பை தொட்டியில் வீசியதாக கூறப்பட்டது.

குப்பை தொட்டியை சுத்தம் செய்த ஊழியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கிண்டி காவல் நிலையத்தினர், வசந்தி, விஜயா, ஜெயராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு, கைது செய்தனர். ஜெயராஜுடன் ஏற்பட்ட காதலால் தான் கர்ப்பம் ஏற்பட்டதாக ஜெயராஜ் மீது குற்றம்சாட்டி இருந்தனர்.

இதுதொடர்பான வழக்கு சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி முகமது பாரூக் முன்பு விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆரத்தி ஆஜராகி, காவல்துறை விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட சாட்சியங்களை சமர்ப்பித்தார். மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜயா, வசந்தி இணைந்து பெண் குழந்தையை கொலை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டனர் என வாதிட்டார்,

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குழந்தையை கொலை செய்த வழக்கில் வசந்தி மற்றும் விஜயா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆவதாக கூறி இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், தலா 5000 ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளார். மேலும் வசந்தி மற்றும் ஜெயராஜ் காதலித்தை சந்தேகத்திற்கு இடமின்றி காவல் துறை நிரூபிக்கவில்லை எனவும், டி.என். ஏ. பரிசோதனையில் குழந்தை ஜெயராஜ் உடையது இல்லை என தெரியவந்ததாலும் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[6/12, 17:48] sekarreporter1: நடிகர் விஷால் 21 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில் அவருக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஷால் பிலிம் பேக்டரி தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு, செலுத்தியது.

அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது.

மேலும், அந்த தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த உத்தரவை விஷால் மீறியுள்ளதாகவும், தற்போது வரை 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டி விசாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.செளந்தர் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, தங்கள் நிறுவன தயாரிப்பில் தற்போது வரை எந்த படங்களையும் தயாரிக்கவில்லை என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, இந்த விவகாரத்தில் எந்த அவமதிப்பும் இல்லை என தெரிவித்து, லைகாவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், விஷால் பட நிறுவனத்திற்கு எதிரான லைகா நிறுவனத்தின் பிரதான வழக்கில் ஜூன் 26ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்படும் என கூறி வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.
[6/12, 17:48] sekarreporter1: சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கத்துக்காக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரி பசுமை தாயகம் அமைப்பின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

144 ஆண்டுகள் பழமையான சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை 734 கோடியே 91 லட்ச ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

இதற்காக 60 முதல் 100 ஆண்டுகள் பழமையான 600 மரங்கள் வெட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பசுமை தாயகம் அமைப்பின் செயலாளர் அருள் தரப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் கே.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் ஆஜராகி அவசர முறையீடு செய்தார்.

ரயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து பொது நல வழக்கு தொடர இருப்பதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்றுக்கொண்டு நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.
[6/12, 17:48] sekarreporter1: சென்னை துறைமுக கழகத்தில் சரக்குகளை ஏற்றி இறக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அதிக கட்டணம் வசூலித்த உத்தரவை அனிதா சுமந்த் ரத்து செய்தார்
[6/12, 17:48] sekarreporter1: தமிழ்நாட்டில் 560 பார்களை மூட நீதிமன்றம் உத்தரவிட்டதால் வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் அருகில் தின்பண்டங்கள் விற்பனை செய்வது, காலி மதுபான பாட்டில்களை சேகரிப்பது தொடர்பான பார் உரிமங்களுக்கு டெண்டர் விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்த அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை டாஸ்மாக் பார்களுக்கான டெண்டரை இறுதி செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தனி நீதிபதியின் உத்தரவால் தமிழகம் முழுவதும் 560 பார்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டுமென கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்
வரும் 19ம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

You may also like...