Madras high court march 2 orders ,ஐகோர்ட் மார்ச் 2 உத்தரவுகளர

E

[3/2, 11:35] Sekarreporter 1: கடலூர் மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள், மஞ்சக்குப்பத்தில் உள்ள புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணிக்கை நாளன்று அந்த அறையின் சாவி தொலைந்துவிட்டதாக கூறி, பூட்டை அறுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்ட பின்னர், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத் மனுவில் பாதுகாப்பு அறையை திறப்பதற்கு முன்பாக எந்த கட்சிகளின் பிரதிநிதிகளையும் அழைக்காமல் பூட்டை அறுத்து, கதவை திறந்த மாநில தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சட்டவிரோமானது என குறிப்பிட்டு, அதனால் வாக்குப் பதிவு மற்றும் எண்ணிக்கையை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமென பிப்ரவரி23ஆம் தேதி கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கடலூர் மாநகராட்சி 35வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.சிவா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், அதிமுக வேட்பாளர்கள் பாதிக்கபடும் வகையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தியிருக்கலாம் அல்லது மாற்றியிருக்கலாம் என மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

பாதுகாப்பு அறை பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஆய்வு செய்ய வேண்டுமெனவும், வாக்குப் பதிவு மற்றும் எண்ணிக்கையை ரத்து செய்து, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கடலூர் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலுக்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தை தேர்தல் வழக்காகத்தான் தொடர முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதிகள், அதற்கு அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[3/2, 11:36] Sekarreporter 1: தேர்தல் விதிகளுக்கு எதிராக பத்திரிக்கை, ஊடகங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்ததாக திமுக,பாஜக எதிரான வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தனது கட்சி நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டதாகவும், ஏற்கனவே உயர்நீதிமன்றம் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்த தாக சுட்டிக்காட்டியிருந்தார்.அரசியல் கட்சிகள், மாநில தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றே ஊடகங்கள், பத்திரிகை, மற்றும் ரேடியோவில் விளம்பரம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்..

தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்கு பிறகே விளம்பரங்களை வெளியிட முடியும் என்ற நிலையில்,தேர்தல் நாளன்று திமுக மற்றும் பாஜக தேர்தல் விதிக்கு எதிராக தன்னிச்சையாக பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் செய்துள்ளதாகவும், எனவே தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக செயல்பட்ட திமுக,காஜக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அதுவரை மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்..

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மக்கள் பிரிதிநிதுத்துவ சட்டத்தின் படி வழக்கில் வழக்கு தொடரமுடியாது என்றும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய கட்சிகளுக்கு எந்த தடையும் கிடையாது என தெரிவித்து சட்ட நுணுக்கங்களை ஆராயமல் வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து
வழக்கை தள்ளுபடி செய்தனர்.
[3/2, 12:10] Sekarreporter 1: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் ஆண்டு பொதுக் குழுவை கூட்ட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினரான கிஷோர்குமார் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கான தேர்தல் உரிய விதிகளை பின்பற்றி நடத்தப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தேர்தலில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டிய நிலையில் அதற்கு அவகாசம் அளிக்காமல் அவசர, அவசரமாக தேரதல் நடத்தப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது

தேர்தலை முறையாக நடத்தாத நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறப்படும் உறுப்பினர்களை வைத்து பொதுக்குழுவை கூட்ட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

எனவே பொதுக்குழுவு நடத்த தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன் இன்று தீர்ப்பளித்தார். அதில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் 77வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
[3/2, 12:23] Sekarreporter 1: [3/2, 12:15] Inbadurai Mla: *முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்குகள் தொடர்பாக அவரது மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜெயவர்த்தன் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.*

*இடம்: உயர்நீதிமன்ற MBA Gate*

*நேரம்:நண்பகல் 1 மணி*
[3/2, 12:18] Sekarreporter 1: 🌹🌹
[3/2, 12:39] Sekarreporter 1: தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பத்துக்கு பதிலளிக்கும் பொது தகவல் அதிகாரி, ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்துடன், ஆதார் எண்ணையும் குறிப்பிட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்டு, சிற்றரசு என்பவர், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கும், அயனாவரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கும் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால், அந்த விவரங்களை வழங்கப்படாததை எதிர்த்து சிற்றரசு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தகவல் உரிமைச் சட்ட விண்ணப்பங்களுக்கு தவறான தகவல்களை அளிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏதுவாக, விண்ணப்பங்களுக்கு அளிக்கும் பதில்களின் ஒவ்வொரு பக்கத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரி கையெழுத்திடுவதுடன், அவரது ஆதார் விவரங்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

மேலும், இதுசம்பந்தமாக தகவல் ஆணையம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு தகவல் ஆணையம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், மனுவுக்கு பதிலளிக்கும்படி சிற்றரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.
[3/2, 14:58] Sekarreporter 1: சென்னை உயர் நீதிமன்றத்தில், காணொலி காட்சி மூலம் மேற்கொள்ளும் விசாரணையை திங்கள் கிழமை முதல் நிறுத்த உள்ளதாக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், காணொலி காட்சி மற்றும் நேரடி விசாரணை மூலம் வழக்குகளை விசாரித்து வருகிறது. தற்போது தொற்று பாதிப்பு பெருமளவில் குறைந்து வருகிறது.

இந்நிலையில், தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முன் வைத்த வாதங்களை கேட்க முடியாத வகையில் இடையூறு ஏற்பட்டதாக அரசுத்தரப்பில் ஆஜராகியிருந்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி, காணொலி காட்சி மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை மூலம் வழக்குகள் விசாரணை மேற்கொள்ளும் போது, இணையதள தொடர்பு உள்ளிட்ட பல சிக்கல்களை எதிர்கொள்வதாக சக நீதிபதிகள் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

அதனால், திங்கள் கிழமை முதல் காணொலி காட்சி விசாரணை முறையை நிறுத்த இருப்பதாகவும், உண்மையில் காணொலி காட்சி விசாரணை தேவைப்படும் மூத்த வழக்கறிஞர்கள் மட்டும் காணொலி காட்சி மூலம் வாதிட அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.

இதுசம்பந்தமாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் விளக்கமளிக்கவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக இரு ஆண்டுகளாக காணொலி மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை முறை நிறுத்தப்பட்டு, நேரடி விசாரணை மூலம் மட்டும் நடத்தப்பட உள்ளது.
[3/2, 14:58] Sekarreporter 1: மத்திய அரசு ஊழியரை இரும்பு கம்பியால் தாக்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதித்து சென்னை 21வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பூர் பணிமனையில் ரயில்வே ஊழியராக பணியாற்றி வரும் முஸ்தபா அலி என்பவரை அவருடன் பணிபுரியும் கிரேன் டிரைவர் ஜெயபாலன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு முஸ்தபா அலியை ஜெயபாலன் இரும்பு கம்பியால் மண்டையில் பலமாக தாக்கியுள்ளார்.

இதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முஸ்தபா அலியுடம் பெரம்பூர் காவல்துறையினர் விசாரணை செய்து, அதனடிப்படையில் ஜெயபாலை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் குற்றவாளி ஜெயபாலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து 2019ம் ஆண்டு ஜெயபாலன் சென்னை 21வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், காலதாமதமாக தன் மீது வழக்கு பதிவு செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாட்சிகள் சரியாக விசாரிக்கப்படவில்லை என்பதால் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், பாதிக்கப்பட்ட நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், ஊழியர்களின் சாட்சியத்தின் அடிப்படையிலும் வழக்கை விசாரித்து நீதிமன்றம் சிறை தண்டனை உத்தரவு பிறப்பித்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த 21வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹரிஹர குமார்,ஜெயபாலனுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.
[3/2, 15:53] Sekarreporter 1: தூத்துக்குடி விமானத்தில் பாஜக ஆட்சியை விமர்சித்ததாக ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், அதற்காக அவரது தந்தைக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018ல் பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் பயணித்த தூத்துக்குடி விமானத்தில், ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியா தனது பெற்றோருடன் பயணத்துள்ளார். அப்போது, பாஜக ஆட்சி ஒழிக என கோஷம் எழுப்பியதால் விமானத்திலும், விமான நிலையத்திலும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தினரால் கைதுசெய்யபட்ட சோபியா பின்னர் ஜாமினில் வெளிவந்தார்.

இந்நிலையில், சோபியாவின் தந்தை ஏ.ஏ.சாமி மாநில மனித உரிமை ஆணையத்தில் அளித்திருந்த புகாரில், விமான நிலைய காவல் ஆய்வாளர் நித்யா பதட்ட நிலையை தணிக்க முயன்றபோதும், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை தங்களை காவல் நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும், விசாரணை என்ற பெயரில் மதியம் முதல் இரவு வரை தன் மகளை கொடுமைப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டபோது, அடிவயிற்று வலியால் மகள் பாதிக்கப்பட்டதாகவும், பொய் வழக்கு மூலம் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய காவல்துறையினர் மீது மனித உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

அந்த புகார் மனுவை ஆணைய உறுப்பினரான நீதிபதி துரை ஜெயச்சந்திரன் விசாரித்தபோது, காவல்துறை தரப்பில் விமான நிலைய இயக்குனர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுத்ததாகவும், மனித உரிமை மீறல் ஏதும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், சோபியா மீதான குற்றச்சாட்டுகள் சரியா, தவறா என்பதை குற்றவியல் நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டுமென்றாலும், அவர் கைது செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார். ஆனாலும் சோபியா கைது மற்றும் விசாரணையின்போது அவரிடம் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவே பாதிக்கபட்ட சோபியாவிற்காக அவரது தந்தை ஏ.ஏ.சாமிக்கு இரண்டு லட்ச ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஏழு ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில் கைது நடவடிக்கையில் ஈடுபடும்போது, காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படக்கூடாது என உரிய அறிவுறித்தல்களை வழங்கும்படி தமிழக டிஜிபி-க்கும் அறிவுறுத்தி உள்ளார்.
[3/2, 17:05] Sekarreporter 1: கிராம பஞ்சாயத்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக தமிழக அரசை அணுகுமாறு
அறிவுறுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம்,
தமிழகம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலக வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும்,
தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் சுதந்திரதினம், குடியரசு தினங்களில் தேசிய கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்படுவதாகவும், அவர்கள் பஞ்சாயத்து தலைவர் இருக்கைகளில் அமரும் உரிமை மறுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்

அதேபோல, ஆவணங்களை கையாள விடாமல் பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் தடுக்கப்படுவதாகவும், அவர்களை ஜாதி பெயரை சொல்லி அழைப்பதுடன், பிற சமுதாயத்தைச் சேர்ந்த துணைத் தலைவர்களால் மிரட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்

ஜாதிய ரீதியிலான குற்றங்களை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டுமென கோரிய இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்த போது,
கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்துமாறு எப்படி நீதிமன்றம் உத்தரவிட முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,
இன்று கிராம பஞ்சாயத்துகளில் கேமரா பொருத்த உத்தரவிட்டால்,நாளை அது ஒவ்வொரு இடமாக நீண்டு கொண்டே போகும் என தெரிவித்தனர்

இது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள்,மனுதாரர் உரிய அரசுதுறையை அணுக உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்
[3/2, 17:23] Sekarreporter 1: அரசு பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

கடந்த 2018, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறை வார்டர்கள் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் தேர்வு தொடர்பாக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்புகளை வெளியிட்டது.

இப்பணியிடங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை என்றும், மூன்றாம் பாலினத்தவர்கள் என்ற அடிப்படையில் விண்ணப்பிக்க அனுமதித்த போதும், சம்பந்தப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களை ஆண்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் போது, ஆண்களுக்கான தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படும் எனவும், பெண்கள் என அடையாளப்படுத்தும் போது பெண்களுக்கான தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்தும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு சலுகையுடன், எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வுகளிலும், கட் ஆப் மதிப்பெண்களிலும் சலுகைகள் வழங்கக் கோரி சாரதா என்பவர் உள்பட மூன்றாம் பாலித்தவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், எந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெண்கள் என அடையாளப்படுத்தும் மூன்றாம் பாலினத்தவர்கள், பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆண்கள் என அடையாளப்படுத்தும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை என வேதனை தெரிவித்த நீதிபதி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு எந்த தடையும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரர்கள் அனைவரும் ஆரம்பகட்ட தேர்வு நடவடிக்கைகளில் தகுதி பெற்றதாக கருதி, உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட பிற தேர்வுகளில் பெண்களுக்கான சலுகைகளை வழங்கி, எட்டு வாரங்களில் தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும் என சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

எதிர்காலத்தில், அரசு பணி நியமனங்களில் சலுகைகள் மட்டுமல்லாமல், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.
[3/2, 17:42] Sekarreporter 1: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் சாலையில் போக்குவரத்தை சீர்படுத்த, அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்டு திட்டத்தை வகுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் கோவை – பெங்களூரு சாலையில் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதித்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவை, முறையாக அமல்படுத்தும்படி சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும்படி உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, கனரக வாகனங்கள் அனுமதிக்கவில்லை என்றும், தடை கிராம மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் அரசு உத்தரவிற்கு பிறகு, பாதியாக வாகன போக்குவரத்து குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், 16 டன்னுக்கு மேல் வாகனங்கள் அனுமதிக்கக் கூடாது, கேமரா பொருத்த வேண்டும் உத்தரவிட்டாலும் முறையாக நிர்வகிக்கவில்லை என சுட்டிக்காட்டினர். பிப்ரவரி 27ஆம் தேதி சரணாலய பகுதியில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

போக்குவரத்தை சீர்படுத்த மனுதாரர்கள் தங்கள் தரப்பு கருத்துகளை அரசுக்கு வழங்க வேண்டுமெனவும், அந்த கருத்துக்களை பெற்று திட்டம் வகுக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அவ்வாறு திட்டம் வகுக்கும்போது வனத்துறையை ஆலோசித்து, கிராம மக்களின் பிரச்னைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசின் விதிகளுக்கு முரணாக இல்லாமல் வகுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

பின்னர் வழக்கு விசாரணை மார்ச் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[3/2, 18:12] Sekarreporter 1: சொந்த மகனுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அடையாறு இந்திராநகரைச் சேர்ந்தவர் விஸ்வபாண்டியன் என்பவருக்கும், அண்ணாநகர் அன்புகாலனியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு இந்த சிறுவன் 4 வயது குழந்தையாக இருந்த போது தந்தை விஸ்வபாண்டியன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து தவறாக நடந்துள்ளார்.

இதுகுறித்து சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார், விஸ்வபாண்டியன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சமி, விஸ்வபாண்டியன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

[3/2, 07:40] Sekarreporter 1: Madras high court orders marxh 1 ஐகோர்ட் உத்தரவுகள் மார்ச் 1 https://sekarreporter.com/madras-high-court-orders-marxh-1-%e0%ae%90%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/
[3/2, 07:41] Sekarreporter 1: Madras high court orders marxh 1 ஐகோர்ட் உத்தரவுகள் மார்ச் 1 https://sekarreporter.com/madras-high-court-orders-marxh-1-%e0%ae%90%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/
[3/2, 08:06] Sekarreporter 1: Judgment delivered by Justice G.K. Ilanthiraiyan for Police protection AIADMK Councillors Annavasal Town Panchayat Pudukottai District M. Rajarajan former AGP Madurai bench of madras High court https://sekarreporter.com/judgment-delivered-by-justice-g-k-ilanthiraiyan-for-police-protection-aiadmk-councillors-annavasal-town-panchayat-pudukottai-district-m-rajarajan-former-agp-madurai-bench-of-madras-high-court/
[3/2, 08:54] Sekarreporter 1: [ I.S.Inbadurai 572/1990 R.M.Babu Murugavel 196/1999 E.Balamurugan  667/2002 K. Gopal 532/2002 Palani 1289/2003 H. Iniyan 1378/2004 Brezhnev 1958/2006 Thiyagarajan 545/2008 Muralikrishnan 28/2008 COUNSEL FOR PETITIONERS 3/2, 08:51] Sekarreporter 1: Today Bail is listed as item No.6 before the Chengalpet Prinicpal District Judge Court. [3/2, 08:51] Sekarreporter 1: Today 02.03.2022 Former ADMK Minister Jayakumar Bail application is coming before the Chengalpattu Session court. Mr.A.Natarajan Senior advocate (Former State PP) is appearing for Mr.D.Jayakumar. This is the case registered by CCB police against the daughter, son-in-law of Mr.Jayakumar. Civil dispute between family members were given a colour of criminal matter. Complainant Mr.Magesh Kumar, in this case is none other than the own elder brother of Mr.Naveen Kumar (son-in-law of Mr.D.Jayakumar). Naveen kumar is added as A1 in this case. https://sekarreporter.com/i-s-inbadurai-572-1990-r-m-babu-murugavel-196-1999-e-balamurugan-667-2002-k-gopal-532-2002-palani-1289-2003-h-iniyan-1378-2004-brezhnev-1958-2006-thiyagarajan-545-2008-muralikrishnan-2/
[3/2, 10:11] Sekarreporter 1: இன்று சென்னை மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கும் மாநில மாணவர் அணியின் துணை செயலாளர் என்றும் என் பாசத்திற்குரிய சகோதரர் வழக்கறிஞர் *கவி* .. *கணேசன்* அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய வித்திட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் தளபதி அவர்களின் வழித்தடத்தில் திருவொற்றியூர் நகர மன்றத்தின் துணைத் தலைவராக உங்கள் தந்தையார் கழக செயல் வீரர் வீராசாமி அவர்கள் விட்டுச் சென்ற மக்கள் பணியை தொடர மனமார வாழ்த்தி மகிழ்கின்றேன்….. வாழ்த்துக்களுடன் செந்தமிழ்ச்செல்வன் சி.ஜெயபிரகாஷ்💐💐💐
[3/2, 10:11] Sekarreporter 1: இன்று சென்னை மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கும் துறைமுகம் பகுதி வழக்கறிஞர்களின் அமைப்பாளர் என்றும் என் பாசத்திற்குரிய அண்ணன் *வீ.பரிமளம்* அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய வித்திட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் தளபதி அவர்களின் வழியில் மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்களின் ஆலோசனையில் உங்களின் மக்கள் தொண்டு தொடர மனமார வாழ்த்தி மகிழ்கின்றேன்….. வாழ்த்துக்களுடன் செந்தமிழ்ச்செல்வன் சி.ஜெயபிரகாஷ்💐💐💐
[3/2, 10:11] Sekarreporter 1: இன்று மாமன்ற உறுப்பினராக சென்னை மாநகராட்சியில் தடம் பதிக்கும் சென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஆயிரம்விளக்கு எம்.ஏ. *நந்தினி* அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மாண்புமிகு கழக தலைவர் தமிழக *முதல்வர்* அவர்களின் மக்கள் நலத் திட்ட பணிகளை உங்களின் பகுதி மக்களுக்கு முழுமையாக சென்றடைய உங்களின் மாமன்ற உறுப்பினர் பொறுப்பு அமைய நல்வாழ்த்துக்கள் ஈடு இணையற்ற இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அன்புக்குரிய அண்ணன் *உதயநிதி* அவர்களின் வழிகாட்டுதலோடு மேற்கு மாவட்ட கழக செயலாளர் அன்புச் சகோதரர் *நே.சிற்றரசு* ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் _டாக்டர்_ *நா.எழிலன்* அவர்களின் ஒத்துழைப்போடு உங்களின் பணி சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் வாழ்த்துக்களுடன் _செந்தமிழ்ச்செல்வன்_ *சி.ஜெயப்பிரகாஷ்*💐💐💐
[3/2, 10:11] Sekarreporter 1: இன்று சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கும் சென்னை கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் என்றும் என் பாசத்திற்குரிய சகோதரர் *சரவணன்* அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய வித்திட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் தளபதி அவர்களின் வழியில் மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்களின் ஆலோசனையில் திரு.வி.க. சட்டமன்ற உறுப்பினர் அன்புக்குரிய அண்ணன் ப.தாயகம் கவி அவர்களுடன் இணைந்து உங்களின் மக்கள் பணி தொடர மனமார வாழ்த்தி மகிழ்கின்றேன்….. வாழ்த்துக்களுடன் செந்தமிழ்ச்செல்வன் சி.ஜெயபிரகாஷ்💐💐💐
[3/2, 10:14] Sekarreporter 1: புதிய்கவுன்சிலர்களுக்கு வாழ்த்து adv JP https://sekarreporter.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/
[3/2, 10:25] Sekarreporter 1: வழக்கறிஞர் எம்.ஏ. நந்தினி
[3/2, 10:26] Sekarreporter 1: [3/2, 10:24] jp dmk: வழக்கறிஞர் கவி. கணேசன்
[3/2, 10:25] jp dmk: வழக்கறிஞர் எம்.ஏ. நந்தினி
[3/2, 10:25] Sekarreporter 1: 🌹
[3/2, 10:26] Sekarreporter 1: எனது சீனியரிடம் வாழ்த்து https://sekarreporter.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/
[3/2, 10:55] Sekarreporter 1: இன்று சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கும் சென்னை கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் அன்புக்குரிய சகோதரி _அயனாவரம்_ *தாவுத்* *பிவி* அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய வித்திட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் தளபதி அவர்களின் வழியில் மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் *பி.கே* . *சேகர்பாபு* அவர்களின் ஆலோசனையில் இணைந்து உங்களின் மக்கள் பணி தொடர மனமார வாழ்த்தி மகிழ்கின்றேன்….. வாழ்த்துக்களுடன் செந்தமிழ்ச்செல்வன் சி.ஜெயபிரகாஷ்💐💐💐
[3/2, 11:06] Sekarreporter 1: பள்ளிக்கல்வித் துறை 2021-22ஆம் ஆண்டிற்கான அரசு பொதுத் தேர்வுகள்   மற்றும்  ஆண்டு இறுதித்  தேர்விற்கான  கால அட்டவணை 10th 12th https://sekarreporter.com/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-2021-22%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d/
[3/2, 11:06] Sekarreporter 1: https://youtu.be/rN5kpKeesy4
[3/2, 11:07] Sekarreporter 1: பள்ளிக்கல்வித் துறை 2021-22ஆம் ஆண்டிற்கான அரசு பொதுத் தேர்வுகள்   மற்றும்  ஆண்டு இறுதித்  தேர்விற்கான  கால அட்டவணை 10th 12th https://sekarreporter.com/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-2021-22%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d/
[3/2, 11:24] Sekarreporter 1: #Breaking: வரும் 5ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

#Tamilnadu

https://t.co/hMF9t7Iqht
[3/2, 11:40] Sekarreporter 1: Election case 10k cost chief justice order for advt https://sekarreporter.com/election-case-10k-cost-chief-justice-order-for-advt/
[3/2, 11:45] Sekarreporter 1: Meyar election case admk withdraw the petition mhc cj dismissed case https://sekarreporter.com/meyar-election-case-admk-withdraw-the-petition-mhc-cj-dismissed-case/
[3/2, 11:47] Sekarreporter 1: Mayor election case admk withdraw the petition mhc cj dismissed case https://sekarreporter.com/meyar-election-case-admk-withdraw-the-petition-mhc-cj-dismissed-case/
[3/2, 12:02] Sekarreporter 1: Mhc slams transport corporation full order. CORAM THE HONOURABLE MR. JUSTICE S. VAIDYANATHAN AND THE HONOURABLE MR. JUSTICE MOHAMMED SHAFFIQ W.A. No. 212 of 2022 & C.M.P. No. 1593 of 2022 The Secretary to Government, Transport Department, Fort St. George https://sekarreporter.com/mhc-slams-transport-corporation-full-order-coram-the-honourable-mr-justice-s-vaidyanathan-and-the-honourable-mr-justice-mohammed-shaffiq-w-a-no-212-of-2022-c-m-p-no-1593-of-2022-the/
[3/2, 12:14] Sekarreporter 1: South indian film general.body meeting stayed by mhc judge velmurugan https://sekarreporter.com/south-indian-film-general-body-meeting-stayed-by-mhc-judge-velmurugan/
[3/2, 12:19] Sekarreporter 1: முதல்வர் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் விழா தேனி வடக்கு மாவட்ட தி மு க வழக்கறிஞர் அணி சார்பாக தேனி நீதிமன்றம் முன்பு கொண்டாடப்பட்டது M.Sukumaran Additional PP Theni
[3/2, 12:21] Sekarreporter 1: Inbadurai Mla: *முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்குகள் தொடர்பாக அவரது மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜெயவர்த்தன் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.* *இடம்: உயர்நீதிமன்ற MBA Gate* *நேரம்:நண்பகல் 1 மணி* https://sekarreporter.com/inbadurai-mla-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%95/
[3/2, 12:47] Sekarreporter 1: RTi order stayed by. Mhc chief bench https://sekarreporter.com/rti-order-stayed-by-mhc-chief-bench/
[3/2, 15:01] Sekarreporter 1: Mhc only physical heaing except senior https://sekarreporter.com/mhc-only-physical-heaing-except-senior/
[3/2, 15:28] Sekarreporter 1: [3/2, 15:27] Sekarreporter 1: Transgender case lordship m s ramesh full order https://sekarreporter.com/transgender-case-lordship-m-s-ramesh-full-order/
[3/2, 15:27] Sekarreporter 1: ஆண்” அல்லது “மூன்றாம் பாலினம்” என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் TG களுக்கு உடல் அளவீட்டு சோதனைகள், பொறையுடைமை சோதனைகள் மற்றும் உடல் திறன் சோதனைகள் ஆகியவற்றில் தளர்வுகளை வழங்குவதற்கு தமிழக அரசுக்கு இந்த நீதிமன்றம் கடுமையாக பரிந்துரைக்கிறது. பெண் வேட்பாளர்கள் மற்றும் பிற சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்; மற்றும்
v) டிஜிக்களுக்கு ஏதேனும் இடஒதுக்கீடு, சலுகைகள் மற்றும் தளர்வுகளை வழங்கும் போது, ​​தமிழ்நாடு அரசு மற்ற சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு இதே போன்ற சலுகைகளை வழங்குவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட விகிதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, இந்த சலுகைகளை நிர்ணயம் செய்வதற்கு இதே முறையை பின்பற்ற வேண்டும். .
[3/2, 15:28] Sekarreporter 1: Transgender case lordship m s ramesh full order https://sekarreporter.com/transgender-case-lordship-m-s-ramesh-full-order/
[3/2, 15:33] Sekarreporter 1: [3/2, 15:31] Sekarreporter 1: [3/2, 15:31] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1498961595853983748?t=03NqMhNlwdwZz_IPAj12GA&s=08
[3/2, 15:31] Sekarreporter 1: Transgender case lordship m s ramesh full order https://sekarreporter.com/transgender-case-lordship-m-s-ramesh-full-order/
[3/2, 15:31] Sekarreporter 1: Super order
[3/2, 15:53] Sekarreporter 1: ml ravi madras high court advt interview regarding election case cost 10 k
[3/2, 18:07] Sekarreporter 1: Sofiya case compensation HON’BLE THIRU D.JAYACHANDRAN, B.A., B.L., MEMBER.    Dr.A.A.Samy                                                                              … Complainant https://sekarreporter.com/sofiya-case-compensation-honble-thiru-d-jayachandran-b-a-b-l-member-dr-a-a-samy/
[3/2, 19:17] Sekarreporter 1: https://youtu.be/b5N3tPMGYJE
[3/2, 19:17] Sekarreporter 1: https://youtu.be/J6dhqQOmR-U
[3/2, 20:20] Sekarreporter 1: https://youtu.be/fpaMpMyRArI
[3/2, 20:31] Sekarreporter 1: https://youtu.be/6ExjvGTVRKU

 

You may also like...