Madras high court march 31 orders

[3/30, 19:08] Sekarreporter: மக்களவை தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட 11.48 கோடி ரூபாய் வரி வசூலிக்கும் வருமான வரித்துறை நடவடிக்கையை எதிர்த்து திமுக எம்.பி. கதிர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளராக இருந்த கதிர் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகங்களிலும், அவருடன் தொடர்புடையவர்கள் என தாமோதரன், விமலா ஆகியோர் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அப்போது விமலாவின் வீட்டில் 11 கோடியே 48 லட்ச ரூபாயை கைப்பற்றிய நிலையில், அந்த பணம் தன்னுடையது என அவரது சகோதரர் சீனிவாசன் உரிமை கோரினார்.

ஆனால் அந்த பணம் கதிர் ஆனந்தின் வருமானம் என ஏன் அறிவிக்கக்கூடாது என்று விளக்கம் அளிக்கும்படி வருமான வரித்துறை தரப்பில் அனுப்பிய நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு கதிர் ஆனந்த் விளக்கம் அளித்த பின்னரும், அதை நிராகரித்துவிட்டு, அந்த பணம் கதிர் ஆனந்தின் வருமானம் என அறிவித்ததுடன், அதற்கான வரியை செலுத்த வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கதிர் ஆனந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சி.சரவணன், வருமான வரித்துறை திரட்டிய ஆதாரங்கள் திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிராக இருப்பதாக கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து கதிர் ஆனந்த் மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கதிர் ஆனந்த் தரப்பில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் உரிமையாளருக்கும், தனக்கும் தொடர்பில்லை என்பதை விளக்கமளித்த பிறகும், நடவடிக்கை எடுப்பதாகவும், பணம் தன்னுடையது இல்லை என்று விளக்கத்தை ஏற்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை நாளை (மார்ச் 31) விசாரிப்பதாக கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
[3/30, 19:52] Sekarreporter: எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கு

ரூ.110 கோடியை பறிமுதல் செய்ய அனுமதி நீட்டிப்பு

சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 31:

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கில் அவரது உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் 110 கோடிக்கும் அதிகமான நிரந்தர டெபாசிட் தொகையை பறிமுதல் செய்யலாம் என்ற உத்தரவை நீட்டித்து ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, அவரது நண்பர்கள், உறவினர்கள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள் நடத்தி வந்த கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம், ஆலம் கோல்டு மற்றும் டைமன்ட் நிறுவனம் ஆகியவற்றின் வங்கி கணக்கில் இருந்த 110 கோடியே 93 லட்சத்துக்கு 20 ஆயிரத்து 174 ரூபாய் நிரந்தர டெபாசிட் தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கம் செய்தது.
இந்த பணத்தை பறிமுதல் செய்ய அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில்ல் மனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம்,
எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய 110 கோடியே 93 லட்சத்துக்கு 20 ஆயிரத்து 174 ரூபாய் வங்கி நிரந்தர டெபாசிட்டை இடைக்காலமாக பறிமுதல் செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு சம்பந்தமாக கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம், ஆலன் கோல்டு அன்ட் டைமன்ட் நிறுவனம் ஆகியவை பதில் அளிக்கவும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி ஓம்பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கே.சி.பி. இன்ப்ரா உள்ளிட்ட நிறுவனங்கள் பதில் மனு தாக்கல் செய்தன. கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், எங்களது நிறுவனம் கோவையில் உள்ளது. எனவே, இந்த மனுவை சென்னையில் தாக்கல் செய்ய முடியாது. சட்டவிதிகளுக்கு உட்பட்டு முறையாக இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
ஆலன் கோல்டு அன்ட் டைமன்ட் நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், எங்கள் நிறுவனத்தின் நிதியை பறிமுதல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை கூறும் காரணங்கள் ஏற்புடையது அல்ல. எனவே, இந்த காரணத்தை நிராகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், லஞ்ச ஒழிப்புத்துறையின் மனு ஏற்கனவே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. எனவே, தற்போதைய நிலையில் மனுவை நிராகரிக்க மனுதாரர்கள் கோர முடியாது. இருந்தபோதிலும் கூடுதல் மனு தாக்கல் செய்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில் உள்ள குறைபாடுகளை சரி செய்து லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற ஏப்ரல் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதேவேளையில், நிறுவனங்களின் டெபாசிட் தொகையை பறிமுதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
[3/30, 20:00] Sekarreporter: மாடலிங் வாலிபரின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு
20 பெண்களை ஏமாற்றி உல்லாசம்

சென்னை, மார்ச் 31: மாடலிங்கில் தனது கட்டுமஸ்தான உடலமைப்பை காட்டி தொழிலதிபர்கள் மகள்கள், பேஷன் டெக்னாலஜி கல்லூரி மாணவிகள் மற்றும் மாலிங் என 20க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்ததாக கைது செய்யப்பட்ட துணை நடிகரின் ஜாமீன் மனுவை சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஓட்டேரியை சேர்ந்த தொழிலதிபர் மகளுடன் 2 இளம் பெண்கள் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயனிடம் பரபரப்பு புகார் ஒன்று அளித்தனர். அந்த புகாரில், கடந்த 2019ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் கீழ்ப்பாக்கம் மில்லர் சாலையை சேர்ந்த முகமது சயாத்(26) என்பவர் பழக்கமானார்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு செய்யும் ஸ்டைலான புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் நண்பர்களாக தொடங்கி பிறகு காதலித்துதோம். அப்போது கடந்த 2020ம் ஆண்டு வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள உடற்பயிற்சி கூடம் அருகே அவரது காரிலேயே என்னை வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டார்.
அதன் பிறகு தன்னை திருமணம் செய்வதாக கூறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்தோம். பிறகு கடந்த டிசம்பர் 21ம் தேதி முகமது சயாத் தனது காரில் நட்சத்திர ஓட்டலுக்கு என்னை அழைத்து சென்றார். அப்போது அந்த ஓட்டலில் இருந்து 3 பெண்கள் முகமது சயாத்தை திருமணம் செய்ய போவதாக என்னிடம் கூறினார்.

முகமதுவுடன் இருக்கும் இளம் பெண்களின் இன்ஸ்டாகிராம் ஐடியை எடுத்து அதன் மூலம் அவர்களை தொடர்பு கொண்ட போது தான் நான் ஏமற்றப்பட்டது எனக்கு தெரியவந்தது. இதுகுறித்து நான் கேட்டதற்கு முகமது சயாத் கொலை செய்துவிடுவேன். எனது அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய வேப்பேரி அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்து முகமது சயாத் மீது கற்பறிப்பு, மிரட்டல், பெண்கள்வன் கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி முகமது சயாத் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு 2வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி, தங்க மாரியப்பன் முன்பு விசாரணைக்கு வந்துத அப்போது, மாநகர அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, ஜாமீன் தந்தால் சாட்சிகளை கலைத்துவிடுவார். கடுமையான குற்றம் செய்துள்ளார் என்று வாதிட்டார். இதையடுத்து, முகமது சயாத்தின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
[3/31, 10:42] Sekarreporter: அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மீதான அவதூறு வழக்கு ரத்து…

கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பு தனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் உள்ளதாக பெங்களூரு புகழேந்தி அவதூறு வழக்கு…

எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய கோரி பன்னீர்செல்வம், பழனிச்சாமி மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…
[3/31, 10:58] Sekarreporter: அரசியல் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக டாக்டர் சுப்பையாவை சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக-வின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யை சேர்ந்தவர்கள் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டதில் ஈடுபட்டனர். கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் துறையின் தலைவராக இருந்த டாக்டர் சுப்பையா சிறைக்கு சென்று சந்தித்தார்.

மருத்துவர் சுப்பையாவின் செயல் அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும், அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டி, சுப்பையாவை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதார துறை செயலாளர் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.

இவற்றை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சுப்பையா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், மனுதாரர் ஏபிவிபி எனும் மாணவர் சங்கத்தின் தலைவராக 2017 முதல் 2020 வரை பதவி வகித்துள்ளதாகவும், இந்த இயக்கம் அரசியல் அமைப்பு அல்ல எனவும் வாதிட்டார்.

மேலும், சுப்பையா எந்த விதமான அரசியல் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும், சஸ்பெண்ட் உத்தரவுக்கான காரணங்களை கூறும் ஆதாரங்களை வெளியிட வேண்டும் எனவும் வாதிட்டார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் அரசியல் கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் சுப்பையா பதிவு செய்துள்ளார் என தெரிவித்தார்.

மேலும், ஏபிவிபி ஒரு அரசியல் சார்ந்த அமைப்பு தான் எனவும் துறைரீதியான விசாரணை நடந்து வருவதாகவும், அதனை தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் விளக்கமளித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், இன்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், சுப்பையா பணியிடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.

துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மீதான விசாரணையை 12 வாரங்களில் முடிக்க வேண்டுமென அரசுக்கும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென மருத்துவர் சுப்பையாவுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..
[3/31, 11:06] Sekarreporter: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறப்பட்ட காரணங்கள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும், இருவரையும் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இருவரும் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், சம்மன் ரத்து, அவதூறு வழக்கை ரத்து கோரிக்கைகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக
ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ. நடராஜன் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

அவர்கள் தரப்பில் தவறு செய்த ஒருவர் நீக்கப்பட்டது குறித்து உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டியது கடமை என்ற அடிப்படையில் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், அவதூறுக்கு முகாந்திரம் இல்லை என வாதிடப்பட்டது. கட்சியின் விதிகளை பின்பற்றாத உறுப்பினர் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கட்சியில் இருந்து நீக்கவும் தலைமைக்கு முழு அதிகாரம் உள்ளதெனவும் வாதிடப்பட்டது.

புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத், தன்னிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை எனவும்,
பதில் அளிக்க வாய்ப்பு வழங்கப்படாமல், காரணமின்றி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி நிர்மல்குமார் கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பில் அவதூறு பரப்பும் வகையில் ஏதும் இடம்பெறவில்லை என்பதால், அதன் அடிப்படையில் ஓ.பன்னீரசெல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
[3/31, 12:36] Sekarreporter: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு ஆவணங்களை அமலாக்கத் துறைக்கு வழங்கக் மறுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு ரத்து…

அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

கடந்த 2011 -15ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக 3 வழக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளது…

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவும் விசாரணை…

விசாரணைக்காக ஆவணங்களை வழங்க கோரி அமலாக்கப்பிரிவு மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது..

சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு…

ஆவணங்களை ஆய்வு செய்து பின் நகல் வழங்க கோரி அமலாக்க பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் எனவும் அறிவுரை…
[3/31, 12:46] Sekarreporter: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு தொடர்பான குறியீடு செய்யப்படாத ஆவணங்களை அமலாக்கத் துறைக்கு வழங்கக் மறுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2011 -15ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி அத்துறையில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்ற பிரிவில் 3 வழக்குகளை பதிவு செய்தது.

இந்த வழக்குகள் எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையில், பணி வழங்குவதாக சோசடி செய்ததில் சட்டவிரோதமாக பணம் கை மாறியதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவும் 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள 3 வழக்குகளின் ஆவணங்கள் டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்ட ஆதார ஆவணங்களை வழங்க கோரி அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மனு தள்ளுபடி செய்தது.

சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் ஆவணங்களை வழங்க உத்தரவிட கோரி அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் அமர்வு விசாரித்தது.

அப்போது, அமலாக்கப் பிரிவு சார்பில் ஆஜராக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் விசாரணைக்கு சில ஆதார ஆவணங்கள் தேவைப்படுகிறது. அதை போலீஸ் தரப்பில் கேட்டபோது வழங்கவில்லை என்று புகார் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜிக்கு எதிரான ஒரு வழக்கு ரத்து செய்யபட்டுள்ளதால் சிறப்பு நீதிமன்றம் அந்த வழக்கு சம்மந்தமான ஆவணங்களை வழங்க மறுப்பது அமலாக்க பிரிவு விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் அந்த ஆவணங்களை வழங்க எந்த தடையும் இல்லை என்றும் வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஹசன் முகமது ஜின்னா, போலீஸ் தரப்பில் உள்ள அனைத்து ஆதாரங்களும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு விட்டதாகவும், சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களை வழங்கவோ, மறுக்கவோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக வாதிட்டார்.

 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சான்றளிக்கப்பட்ட குறியீடு செய்யபடாத ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். மேலும் அந்த ஆவணங்களை ஆய்வு செய்து பின் நகல் வழங்க கோரி அமலாக்க பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
[3/31, 13:00] Sekarreporter: பல உண்மைகளை மறைத்து நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மிஸ்டர் லோக்கல் படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 10 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டு 2013ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், படம் எடுக்க முடியாத நிலையில், மீண்டும் 2018ம் ஆண்டு புது ஒப்பந்தம் போடப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 12 கோடியே 78 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை எனவும் அந்த படத்தின் இயக்குநராக ராஜேஷ் தான் வேண்டுமென சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் தான் அந்த படம் தயாரிக்கப்பட்டதாகவும் அந்த படத்தால் தமக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

வரிகளுடன் சேர்த்து மீதம் 2 கோடியே 40லட்சம் ரூபாயை வழங்க வேண்டுமென நடிகர் சிவகார்த்திகேயன், இரக்கமின்றி தனக்கு அழுத்தம் தந்ததாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில், 2 கோடியே 40 லட்சம் தர வேண்டாம் எனவும், வினியோகஸ்தர்கள் பிரச்னையில் சிக்க வைத்து விட வேண்டாம் என சிவகார்த்திகேயன் கூறியதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில்மனுவில் தெரிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், உண்மை தகவல்களை மறைத்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கோரியுள்ளார்.

ஞானவேல்ராஜா தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு நீதிபதி எம்.சுந்தர் தள்ளிவைத்துள்ளார்.
[3/31, 14:54] Sekarreporter: ஸ்டான்லி மருத்துவமனை விபத்து அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாய்களுக்கு உதவியாக ஒரு மாதம் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன், பைக் ரேசில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை கார்நேசன் நகரை சேர்ந்த 21 வயதான பிரவீன் மார்ச் 20ம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துமனை ரவுண்டானாவில் இருந்து மூலகொத்தளத்திற்கு பைக் ரேஸ் சென்றுள்ளார்.

இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சார்லஸ் அளித்த புகாரில் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் பிரவீன் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் ஜாமீன் கோரி பிரவீன் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், அஜித்குமார் என்பவரின் பைக்கில் பின்னால் அமர்ந்து பயணித்ததாகவும், எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில், பைக் ரேசில் ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் இருந்ததாலேயே கைது நடவடிக்கை எடுத்ததாகவும், பொதுசாலையில் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன், சாலையில் செல்லும் மூத்த குடிமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள், இரும்பு கம்பிகளை சாலையில் தேய்த்து தீப்பொறி ஏற்படுத்தி மிரட்டும் தொணியில் செயல்படுவதாகவும் வேதனை தெரிவித்தார்.

பின்னர், மனுராரர் பிரவீன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வார்டில் ஒரு மாத காலம் வார்டு பாய்களுக்கு உதவியாக பணியாற்ற வேண்டும் எனவும், அதுகுறித்து மருத்துவமனை டீனுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்த நீதிபதி, பிரவீனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
[3/31, 16:51] Sekarreporter: மத்திய அரசின் தொழிலாளர் சட்ட மசோதா திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக விசிக தலைவர் தொல் திருமாவளவன்,திமுக எம்.பி.சண்முகம், சிஐடியூ சௌந்தரராஜன் ஆகியோர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது..

கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு தொழிலாளர் நலச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்தது இந்த திருத்தங்களில் 15 அம்ச கோரிக்கைகளை சேர்க்க வேண்டும் என்றும் இல்லை என்றால் அது தொழிலாளர்களுக்கும் பாதகமாக முடியும் என்று கூறி பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். சென்னை அண்ணாசாலையில் தாராபூர் டவர் முன்பு சிஐடியு மாநிலச் செயலாளர் சௌந்தராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்,திமுக மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.. இதையடுத்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் இவர்கள் மீது தடையை மீறி சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ சிபிஎம் கட்சி நிர்வாகி குமரேசன் உள்ளிட்டோர், தொடர்ந்திருந்த வழக்கில் ஜனநாயக ரீதியிலான போராட்டம் நடத்தியதாகவும் எந்தவித அத்துமீறலில் ஈடுபட்டு வில்லை என்றும் எனவே குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த வழக்கின்விசாரணை நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி ஜனநாயக ரீதியிலான போராட்டம் என்றும் அமைதியான வழியிலேயே போராட்டம் நடைபெற்றதாகவும் யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும் வாதிட்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை அடிப்படையிலேயே போராட்டம் நடைபெற்றதாக குறிப்பிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, விசிக தலைவர் தொல். திருமவளவன், திமுக எம்பி சண்முகம், சிஐடியூ சொளந்தரராஜன் உள்ளிட்டோர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
[3/31, 17:29] Sekarreporter: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில்
உள்ள மயில் சிலை மாயமானது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் உண்மை கணடறியும் குழு அமைத்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 2004ம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்ற போது புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானதாக புகார் கூறப்பட்டது.

இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 2018ம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும், அறநிலையத் துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்து துறை ரீதியாக நடத்தப்படும் உண்மை கண்டறியும் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, சிலை மாயமானது குறித்து விசாரிக்கும் உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையையும் ஆறு வார காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, தமிழக இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் உண்மை கண்டறியும் குழு அமைத்து மார்ச் 30ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை அளிக்க ஆறு வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சிலையை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும், சிலையை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நான்கு மாதங்களில் புதிய சிலை நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, மயில் சிலை மாயமானது தொடர்பான வழக்கின் புலன் விசாரணையையும், உண்மை கண்டறியும் விசாரணையையும் விரைந்து முடிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[3/31, 19:44] Sekarreporter: நாளை வெளியாக உள்ள மன்மதலீலை திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை உதவி உரிமையில் நீதிமன்றம் மறுத்து விட்டது.

இதுதொடர்பாக சென்னை திருவான்மியூர் சேர்ந்த கவிதா என்பவர் சென்னை 19ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் மன்மதலீலை என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தினுடைய தலைப்பு தங்களுடையது. எனது தந்தை பிஆர் கோவிந்தராஜன் மற்றும் தாயார் விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து கலக்கேத்திரா மூவிஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அந்த நிறுவனத்தின் மூலமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் எடுத்து வந்ததாகும் அதன்படி கடந்த 1976 ஆம் ஆண்டு மன்மத லீலை என்ற படத்தை தங்கள் தந்தை தயாரிப்பதாகவும் தங்களுடைய அனுமதி இல்லாமல் தற்பொழுது அந்த தலைப்பை பயன்படுத்தி படத்தை வெளியிட உள்ளதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு அல்லி குளத்தில் உள்ள 19 வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியம் இந்த மனு கடைசி நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும். பணம் பறிக்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டு இருப்பதால் இதனை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் சினி மோட்ட சட்டத்தின் படி சென்சார் செய்யப்பட்ட சான்றிதழ்களின் காலம் பத்தாண்டுகள் மட்டுமே ஆகும்.
இந்த தலைப்பிற்கான காலம் 1986 ஆம் ஆண்டு முடிவடைந்து எனவே இந்த வழக்கில் தங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அதற்கு கால அவகாசம் வேண்டும் அதுவரை எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வாதிட்டார்.

இதனை ஏற்ற நீதிபதி வழக்கின் விசாரணையை 4-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை படத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற மனுதரார் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

You may also like...