Madras high court news nov 21

[11/21, 11:23] Sekarreporter 1: பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள 254 பேரின் நியமனங்கள் செல்லாது என அறிவிப்பு….

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு முன்பு முறையீடு…

உத்தரவு நகல் வெளிவாரமலேயே பணி நீக்க நடவடிக்கை தொடங்கியுள்ளதாக பேராசிரியர்கள் தரப்பில் புகார்…

மதியம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக
நீதிபதிகள் பரேஷ்உபாத்யாயா,பரதசக்ரவர்த்தி அமர்வு அறிவிப்பு.
[11/21, 11:25] Sekarreporter 1: கண்ணகி முருகேசன் கொலை வழக்கு மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு…

2004 ஆம் ஆண்டு விருத்தாசலம் அருகில் நடைபெற்ற கண்ணகி முருகேசன் இரட்டை கொலை வழக்கில் பத்து பேருக்கு கிழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்
கந்தவேலு, ஜோதி, மணி, தனவேல், அஞ்சாப்புலி, ஆகிய ஐந்து பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் போபண்ணா, நரசிம்மா அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ரத்னாகர் தாஸ் வழக்கறிஞர்கள் எஸ்.தனஞ்செயன், கே.பாலு ஆகியோர் ஆஜராகினர்.
அதனை தொடர்ந்து மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு சிபிஐக்கு நோட்டீஸ் வாங்கி உத்தரவிட்டுள்ளது
[11/21, 13:02] Sekarreporter 1: கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறப்பது தொடர்பான கருத்துக்களுடன் நவம்பர் 25ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்…

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

பள்ளி சீரமைக்கப்பட்டதால் திறக்க அனுமதி கோரி நிர்வாகம் சார்பில் வழக்கு…

பள்ளி முழுமையான அளவில் எல்.கே.ஜி முதல் வகுப்புகளை துவங்க தயாராக உள்ளது – பள்ளி நிர்வாகம்…

பள்ளியை மீண்டும் திறப்பது தொடர்பாக அரசின் கருத்துக்களை கோரப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர் …
[11/21, 13:06] Sekarreporter 1: கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறக்க அனுமதிக்கலாமா என்பது தொடர்பான கருத்துக்களுடன் நவம்பர் 25ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இ.சி.ஆர். சர்வதேச பள்ளியில் மாணவி மரணத்தை அடுத்து, கடந்த ஜூலை 17ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடியதுடன், தீ வைத்தும் எரித்தனர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது.

இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த ஆய்வுக் குழு ஆய்வு செய்துள்ளதாகவும் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒரு மாத காலத்திற்கு நேரடியாக வகுப்புகளை தொடங்க அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பள்ளி முழுமையான அளவில் எல்.கே.ஜி முதல் வகுப்புகளை துவங்க தயாராக உள்ளதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பள்ளியை மீண்டும் திறப்பது தொடர்பாக அரசின் கருத்துக்களை கோரியுளளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அரையாண்டு மற்றும் இறுதித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டியுள்ளதால், பள்ளியை மீண்டும் திறப்பது குறித்த கருத்துக்களுடன் நவம்பர் 25ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
[11/21, 13:24] Sekarreporter 1: மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவனின் தாய்க்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, கடந்த 2010ம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்க கோரி எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில், சட்டப்படியான தடை உள்ளதாகவும் கூறி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், சிவசங்கர் பாபா மீதான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சிபிசிஐடி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனு இன்று நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்த போது சிவசங்கர் பாபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கால தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செயப்பட்டதால் வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கூடாது என வாதிடப்பட்டது.

காவல்துறை சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, புகார் தாரர் தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கு ரத்து செய்யப்பட்டதால் அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டுமென வாதிட்டார்.

இதனையடுத்து, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்ற நீதிபதி வழக்கை ரத்து செய்யக்கோரிய சிவ சங்கர் பாபாவின் மனுவை இன்று பிற்பகல் விசாரணைக்காக ஒத்திவைத்தார்
[11/21, 14:38] Sekarreporter 1: மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவனின் தாய்க்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, கடந்த 2010ம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்க கோரி எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில், சட்டப்படியான தடை உள்ளதாகவும் கூறி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், சிவசங்கர் பாபா மீதான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சிபிசிஐடி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனு இன்று நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்த போது சிவசங்கர் பாபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கால தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செயப்பட்டதால் வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கூடாது என வாதிடப்பட்டது.

காவல்துறை சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, புகார் தாரர் தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கு ரத்து செய்யப்பட்டதால் அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டுமென வாதிட்டார்.

இதனையடுத்து, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்ற நீதிபதி வழக்கை ரத்து செய்யக்கோரிய சிவ சங்கர் பாபாவின் மனுவை இறுதி விசாரணைக்காக நவம்பர் 29ம் தேதி பிறபகலுக்கு ஒத்திவைத்தார.
[11/21, 15:19] Sekarreporter 1: பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை என கல்லூரிகளின் முதல்வர்கள் விளக்க மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான பல்வேறு கல்லூரிகளில் 2013 முதல் 2015ம் ஆண்டுகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதால், அதுகுறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கல்லூரிகளில் 254 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, அவர்களின் நியமனத்தை செல்லாது என அறிவித்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் அவசர வழக்காக பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது பேராசிரியர்கள் தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின் பேராசிரியர்கள் பணிக்கு அனுமதிக்கப்படவில்லை எனவும், வருகைப்பதிவேடு கல்லூரிகளின் முதல்வர்கள் அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், அறக்கட்டளை தரப்பில், பேராசிரியர்கள் எவரும் பணிக்கு வரவில்லை எனவும், அவர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல் முறையீட்டு மனுவுக்கு எண்ணிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பேராசிரியர்கள் வருவதை தடுக்கவில்லை என்பது குறித்து கல்லூரி முதல்வர்கள் விளக்க அறிக்கையும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் இருந்தால் தாக்கல் செய்ய வாய்மொழியாக உத்தரவிட்டு, மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...