Madras high court nov 23 orders

[11/22, 13:00] Sekarreporter 1: பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளுக்கு சொந்தமான உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான பல்வேறு கல்லூரிகளில் 2013 முதல் 2015ம் ஆண்டுகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதால், அதுகுறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கல்லூரிகளில் 254 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, அவர்களின் நியமனத்தை செல்லாது என அறிவித்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கெதிராக உதவி பேராசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இது இயற்கை நீதிக்கு எதிரானது எனவும் கூறினர். நாங்கள் போதிய தகுதியை பெறவில்லை எனக்கூறுவது தவறு எனக்கூறிய மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள்,
பல்கலைக்கழகமும், அரசும் எங்களது தேர்வு முறையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறினர்.

பச்சையப்பாஸ் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 152 உதவி பேராசிரியர்கள் போதிய தகுதியை பெற்றிருக்கவில்லை என கூறினார்.

அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நீதிமன்றம் உத்தரவிட்டதாலேயே உதவி பேராசிரியர்களின் கல்வி தகுதியை ஆய்வு செய்து அறிக்கை அளித்ததாக கூறினார்.

இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் நடத்திய விசாரணையில் 150 உதவி பேராசிரியர்களின் வெய்டேஜ் மதிப்பெண்’னில் மட்டுமே தவறு நிகழ்ந்துள்ளதாகவும், ஆசியர்களின் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக உறுதி ஆகாத நிலையில் 254 உதவி பேராசியர்களின் பணி நியமனத்தை ஒட்டு மொத்தமாக ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு நிலைக்கத்தக்கல்ல எனக்கூறி வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை தனி நீதிபதியின் உத்ததரவு நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
[11/22, 14:30] Sekarreporter 1: பேராசிரியர்கள் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்திற்காக பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த கணபதி, லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு,அவர் மீது வழக்கு ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர்..இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கணபதி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கின் விசாரணை நீதிபதி நிர்மல் குமார் முன்பு நடைபெற்றது.
விசாரணையின் போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசிடம் முறையான அனுமதி பெறாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதல் தகவல் அறிக்கையில் எந்த இடத்தில், யாரிடம் பணம் பெற்றது உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லை என்றும் காலதாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். வழக்கு தொடர்பாக மற்ற சிண்டிகேட் உறுப்பினர்கள் யாரிடமும் விசாரிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். உதவி பேராசிரியர்கள் நியமன முறை வெளிப்படை தன்மையோடுதான் நடைபெற்றதாகும் அவர் வாதிட்டார். இந்த வழக்கு உள்ளோக்கத்தோடு பழிவாங்கும் நோக்கில் வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தொடரப்பட்டுள்ளதாகவும், எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், யாரிடம் எவ்வளவு தொகை லஞ்சமாக பெறப்பட்டது என்ற பட்டியலை தாக்கல் செய்தார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையில் அவர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். அரசு உத்தரவின் பேரிலேயே,சோதனை செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, விசாரணை தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும் மனுதாரர் முறைகேடு செய்த து மட்டுமில்லாமல், தகுதி இல்லாத நபர்களுக்கு பணிகளை வழங்கி தகுதியுடைய நபர்களுக்கு பணியை மறுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் கல்வி அமைப்பு முறை மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்றும் இது போன்ற செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் இல்லையென்றால் கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து விடும் என்றும் சுட்டிக்காட்டி உள்ளார். எனவே வழக்கு ரத்து செய்ய முடியாது என்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார் .
[11/22, 17:31] Sekarreporter 1: அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும் என்று தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த
அரசு கேபிள் சேவையில் இரண்டு
நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென் பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு நிர்வாகி ராஜன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார் .இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் முறையீடு ஒன்றை முன் வைத்தார்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனமான காஸ்பல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கட்டணம் செலுத்துவது தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் மத்தியஸ்தர் மூலமே தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று விதிகள் உள்ளதாகவும், ஆனால் அதையும் மீறி கேபிள் சேவை துண்டித்துள்ளதாக தெரிவித்தார். எனவே வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நீதிபதி அவசர வழக்காக விசாரித்தார். அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவிந்திரன், ஆஜராகி உரிய கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால், பிரச்சினையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்க வேண்டும் என்றும், அதையும் மீறி கேபிள் சேவை துண்டித்து மிரட்டல் எடுக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
கேபிள் சேவையை துண்டித்து இடையூறு செய்வது சட்டவிரோதம் எனவும் ,எனவே கேபிள் சேவையை இடையூறு இல்லாமல் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடவேண்டும் என கேட்டுக் கொண்டார். வழக்கு விசாரித்த நீதிபதி , கட்டணம் தரப்படவில்லை என்பதற்காக, கேபிள் சேவையை துண்டிக்க கூடாது என்றும், இதுகுறித்து மத்தியஸ்தர் மூலமா தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மத்தியஸ்தர் மூலம் 90 நாட்களுக்குள் இது குறித்து தீர்வு காண வேண்டும் என கூறிய நீதிபதி அரசுக்கு கேபிள் டிவி சேவையை இடையூறு இல்லாமல் வழங்க வேண்டும் என்று தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
[11/22, 17:52] Sekarreporter 1: கடன் தவணையை, ஊழியர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்துக் கொள்ள வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் அனுப்பிய கடிதத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெறும் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து கடன் தவணைத் தொகையை பிடித்தம் செய்து, மாதந்தோறும் போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்றும், இதற்காக தமிழ்நாடு கூட்டுறவு சட்டத்தின் கீழ் போக்குவரத்துக்கழகத்துடன், கூட்டுறவு சங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆனால், மாநகர போக்குவரத்துக் கழகம், இந்த தவணை தொகையை முறையாக ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தும் செய்து வழங்குவது இல்லை என்பதால், நவம்பர் முதல் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக தவணை தொகையை எடுக்க வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் கடந்த அக்டோபர் கடிதம் அனுப்பியது.

கூட்டுறவு சட்ட ஒப்பந்தத்தின்படி, தவணை தொகையை போக்குவரத்து கழகம் தான் பிடித்தம் செய்து தர வேண்டும் எனவும், கடித்தை ரத்து செய்ய வேண்டும் என மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் சிக்கன நாணய மற்றம் கடன் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் அஸ்கர் அலி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், மாநகர போக்குவரத்து கழகத்தின் கடிதத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரத்துக்கு தள்ளிவைத்தார்.
[11/22, 18:17] Sekarreporter 1: அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும் என்று கேபிள் மென்பொருள் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு கேபிள் டிவி மூலமாக பொதுமக்களுக்கு சேவை வழங்க செட்டாப் பாக்ஸ் வாங்குவது தொடர்பாக கடந்த 2017ஆம் ஆண்டு தூத்துக்குடியைச் சேர்ந்த வி.எஸ்.ராஜன் என்பவரின் மும்பை அடிப்படையாகக் கொண்டு மந்த்ரா இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டட் மற்றும் பாலாஜி மிசின் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிட்டட் ஆகிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்தது. அதன்படி 614 கோடி ரூபாய் மதிப்பில் 37 லட்சத்து 40 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்கப்பட்டு, நிர்வகிக்கும் சேவைகளை வருடாந்திர அடிப்படியில் செய்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின்படி செய்ய வேண்டிய வேலைகளை ராஜனின் நிறுவனங்கள் காலதாமதம் செய்ததன் காரணமாக, சுமார் 52 கோடி ரூபாய் பணம் அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டு, மீதமுள்ள தொகை மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலுவைத் தொகை தொடர்பாக ராஜன், அரசுக்கு கடிதம் அனுப்பியும் தொகை வராததால், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் செட்டாப் பாக்ஸ்கள் செயல்படாமல் தொழில்நுட்ப ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு கேபிள் டிவி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவின் கீழ் ராஜன் மீது வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில், அரசு கேபிள் டிவி சேவை துண்டிப்பு தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் முறையீடு செய்யப்பட்டது.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீனிதிரன் ஆஜராகி, சேவை மென்பொருளை பராமரித்து வழங்கி வரும் இரு நிறுவனங்களுடன், அரசு கேபிள் டிவி நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கட்டணம் செலுத்துவது தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் மத்தியஸ்தர் மூலமே தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும், அதையும் மீறி கேபிள் சேவை துண்டித்துள்ளதாக கூறி, அது தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இக்கோரிக்கையை ஏற்று வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, கட்டணம் தரவில்லை என்பதற்காக, கேபிள் சேவையை துண்டிக்க கூடாது என்றும், மத்தியஸ்தர் மூலமாக பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மத்தியஸ்தர் மூலம் 90 நாட்களுக்குள் இது குறித்து தீர்வு காண வேண்டும் என கூறிய நீதிபதி, அரசுக்கு கேபிள் டிவி சேவையை இடையூறு இல்லாமல் வழங்க வேண்டும் என்று தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

You may also like...