Madras high court orders ஐகோர்ட் உத்தரவுகள் till afternoon fen 16

[2/16, 15:12] Sekarreporter 1: நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்துக்காக விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்ட எவருக்கும் அனுமதியளிக்க கூடாது….

ஒட்டப்பட்ட போஸ்டர்களை உடனடியாக அகற்றி, அதற்கான செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்க வேண்டும்….

சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வு

அனுமதியின்றி போஸ்டர் ஒட்ட தடை உள்ளது – மாநகராட்சி

அனுமதியின்றி போஸ்டர் ஒட்ட அனுமதிக்க கூடாது சென்னை மாநகராட்சிக்கும், காவல் ஆணையருக்கும் உத்தரவு

சுவரொட்டி ஒட்டியவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்….நீதிமன்றம்

தேர்தலின் பெயரால் நகரை குப்பை காடாக்க கூடாது. உத்தரவை மீறுவோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கட்டிட சுவர்கள், தனியார் சுவர்களில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டக் கூடாது ர்ன விளம்பரம் வெளியிட வேண்டும் – நீதிபதிகள்

சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை 117வது வார்டில் தேர்தலில் பிரச்சாரத்துக்காக ஒட்டப்பட்ட தனது போஸ்டர் மீது திமுக வேட்பாளர் போஸ்டர் ஒட்டியுள்ளதாக கூறி, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் வழக்கு
[2/16, 15:12] Sekarreporter 1: வாக்கு எண்ணிக்கையை எங்கு நடத்துவது என மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

சோளிங்கர் நகராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தை வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியிலிருந்து சோளிங்கருக்கே மாற்றக்கோரி அமமுக வேட்பாளர் சீனிவாசன் வழக்கு

வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கடைசி நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. தள்ளுபடி – தலைமை நீதிபதி அமர்வு

சோளிங்கலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வாலாஜாபேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை மாற்ற கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் – மனு
[2/16, 15:12] Sekarreporter 1: தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கு ரூ. 5 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம்

எந்த கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற எந்த அடிப்படை தகவலும் இல்லாமல் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது – நீதிமன்றம்

ரூ.13500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட போதும் தனியார் கல்லூரிகள் ரூ. 8 லட்சம் வரை வசூலிப்பதாக வழக்கறிஞர் பாலமுருகன் என்பவர் வழக்கு

தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு
[2/16, 15:13] Sekarreporter 1: ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை விலைக்கு வாங்க ஏதுவாக  தமிழக அரசு 68 கோடி ரூபாய்  டெபாசிட்  தொகையை திரும்ப பெறுவதாகவும்,கையப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் தமிழக அரசு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
 
கடந்த அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு ஏதுவாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளது. 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டுத் தொகையைத் தமிழக அரசு செலுத்தியுள்ளது. ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது.  மனுக்களை விசாரித்த நீதிபதி, அரசின் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தீபா, தீபக் மற்றும் வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்த சட்டபூர்வ வாரிசுகான தீபக், தீபா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி,  கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து, கடந்த நவம்பர் 24ம் தேதி தீர்ப்பளித்திருந்தார்
இந்த தீர்ப்பை எதிர்த்து  ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை  உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மூன்றாம் நபர் மேல் முறையீட்டு மனு  தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அமர்வு,
தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை என நீதிபதிகள்  குறிப்பிட்டு அதிமுக வழக்கை தள்ளுபடி செய்தனர்.இந்த நிலையில சென்னை ஆறுவது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு சார்பில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் வேதா இல்லத்தை விலைக்கு வாங்க ஏதுவாக 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்த தொகையை திரும்ப பெறுவதாகவும்,கையப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை விசாரித்த நீதிமன்றம், வருமானவரித்துறையின் சார்பில் சில விளக்கம் தேவைப்படுவதால் வழக்கில் வரும் 18 ம் தேதி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
 

You may also like...