Madras high court orders

[11/12, 15:18] Sekarreporter1: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் சார்பில் ஆஜராக அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

அதன்படி,சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 24 சிறப்பு அரசு பிளீடர்களும்,36 கூடுதல் அரசு பிளீடர்களும், சிவில் வழக்குகளில் ஆஜராவதற்கான 48 அரசு வழக்கறிஞர்களும்,குற்றவியல் வழக்குகளில் ஆஜராவதற்கான 15 அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்

உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு 8 சிறப்பு அரசு பிளீடர்களும்,15 கூடுதல் அரசு பிளீடர்களும்,சிவில் வழக்குகளில் ஆஜராவதற்கான 18 அரசு வழக்கறிஞர்களும்,குற்றவியல் வழக்குகளில் ஆஜராவதற்கான 10 அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்

இது தவிர சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசின் சார்பில் வரிகள் (Taxes) தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக வி.பிரசாந்த் கிரண் நியமிக்கப்பட்டுள்ளார்
[11/12, 15:18] Sekarreporter1: முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் அமல்படுத்தாமல் இருப்பது சட்டவிரோதம் என அறிவிக்ககோரி  நளினி தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த பரிந்துரை மீது ஆளுனர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருக்கபட்டதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். ஆளுநரின் நடவடிக்கை
அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளார்.தான்  எடுத்துக்கொண்டு உறுதிமொழிக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறி கவர்னர் செயல்படுவதாகவும் நளினி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மாருராம் என்பவரது,  வழக்கில் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக செயல்படுவதாகவும், எனவே அமைச்சரவையின் முடிவை ஆளுநர் செயல்படுத்தாமல் இருப்பது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் மேலும் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுவிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டிருந்தால் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது .வழக்கு குறித்து தமிழக அரசு  பதிலளிக்க கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து, வழக்கு விசாரணை இரண்டு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
[11/12, 15:18] Sekarreporter1: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த 237 வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் அங்கம் வகிக்கும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமையாக நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி பதவியேற்று 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவரது மாற்றம் என்பது பொதுநலன் அடிப்படையிலா அல்லது சிறந்த நீதி பரிபாலனத்துக்கா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளதாக, 237 வழக்கறிஞர்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல 75 நீதிபதிகளை கொண்ட சார்ட்டர்டு உயர் நீதிமன்றமான, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து, 2013ம் ஆண்டு துவங்கப்பட்டு, இரு நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜியை மாற்றுவதும் கேள்வியை எழுப்பியுள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த பாகுபாடும் இல்லாமல் துணிச்சலாக செயல்படும் நீதிபதியை முக்கியத்துவம் இல்லாத இடத்துக்கு மாற்றுவது என்பது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் நடந்தது எனவும், இந்த மாற்றம் என்பது நீதிபதியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி இடமாற்ற பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
[11/12, 15:18] Sekarreporter1: மழை வெள்ள பாதிப்புகளை சீராக்க தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கைகைள் எடுத்துவருவதாக குறிப்பிடுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அந்த பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதுடன், தாமாக முன்வந்து வழக்கை எடுக்கவும் மறுத்துவிட்டது.

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகள் கடுமையாக உள்ளதாகவும், உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்றும் எனவே உயர்நீதிமன்றம் தலையிட்டு தானாக முன்வந்தது வழக்கு தொடரவேண்டும் என்று  தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி முறையீடு செய்தார்.

அதற்கு பதிலளித்த  தலைமை நீதிபதி, மழை வெள்ள பாதிப்புகளை சீர் செய்ய தமிழக அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்துவருகிறதாக குறிப்பிட்டு, அவை செயல்படுவதற்கு முழுவதும் அனுமதிக்க வேண்டும் என விளக்கம் அளித்தனர். ஞாயிற்று கிழமைக்கு பிறகு பெய்த கனமழை நேற்றுதான் ஓய்ந்தள்ளது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வருவதை குறிப்பிட்டு, தற்போதை நிலையில் அரசின் பணியில் தலையிட முடியாது என கூறி தாமாக முன்வந்து பொது நல வழக்கை எடுக்க மறுத்துவிட்டனர்.

[11/12, 15:18] Sekarreporter1: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வி.கே.சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க கால அவகாசம் கேட்டதால் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை டிசம்பர் 10 ம்தேதி ஒத்திவைத்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வ்ழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கூடலூர் சுனில் ஆகிய 9 பேரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அதில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வரின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும் எனவும், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி டிசம்பர் பத்தாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
[11/12, 15:18] Sekarreporter1: உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. பின் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது.

பல பகுதிகளில் பல்வேறு காரணங்களால் மறைமுகத் தேர்தல் நடத்தப்படவில்லை. மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் பங்கேற்கும் வார்டு உறுப்பினர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரியும், தேர்தல் நடைமுறைகளை வீடியோ பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும், வார்டு உறுப்பினர் கண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதேபோல மாமநத்தம் கிராம பஞ்சாயத்து த்ணைத்தலைவர் தேர்தல் நடத்த கோரியும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு நவம்பர் 22ம் தேதியும், மாமநத்தம் கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிக்கு நவம்பர் 24ம் தேதியும் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் முத்துகுமார், ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக தொடர்ந்த வழக்கில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளாதாகவும், அந்த உத்தரவின்படி வீடியோ பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து, மறைமுக தேர்தல் நடத்தப்படாத பகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படுமென நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு, தேர்தல் ஆணையத்திடம் கருத்துக்களை பெற்று தெரிவிப்பதாக தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, தகுதியான தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், மறைமுக தேர்தலில் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், மறைமுக தேர்தலையும், தேர்தல் நடைபெறும் வளாகங்களிலும் நடக்கும் நடவடிக்கைகள் முழுவதையும் வீடியோ பதிவு செய்து 60 நாட்களுக்கு பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இரு வழக்குகளையும் முடித்து வைத்தனர்.
[11/12, 15:22] Sekarreporter1: [11/12, 15:18] Sekarreporter1: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் சார்பில் ஆஜராக அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

[11/12, 15:39] Sekarreporter1: மோசடி புகாரில் சிக்கிய கலைமகள் சபா நிர்வாகத்தை நிர்வகிக்க உதவி தலைமை பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை மூன்று வாரங்களில் நியமிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலைமகள் சபா எனும் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்று அதை ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளில் முதலீடு செய்தது.

மொத்தம், 5 லட்சத்து 33 ஆயிரத்து 356 உறுப்பினர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர். இதை பயன்படுத்தி தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கலைமகள் சபா வாங்கி இருந்தது.

இதையடுத்து, நிறுவனத்துக்கு எதிராக முறைகேடு புகார் அளிக்கப்பட்டதையடுத்து கலைமகள் சபா நிர்வாகத்தை கவனிக்க சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு வழக்கறிஞர் மற்றும் சிறப்பு அதிகாரியை நிர்வாகத்தை கவனிக்கவும், சொத்துக்களை விற்று உறுப்பினர்களுக்கு உரிய முதலீட்டு தொகை வழங்கவும் அதிகாரிகளாக நியமித்து உத்தரவிட்டது.

கடந்த 1999ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின் அடிப்படையில், கலைமகள் சபாவின் சொத்துக்கள் விற்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்பட்டது.

தற்போது இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தை கவனிக்கும் பணியில் ஹரிகரன் என்பவர் மட்டுமே ஈடுபட்டிருக்கிறார்.

இந்த நிலையில் கலைமகள் சபா நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்களை விற்பனை செய்து தங்கள் உறுப்பினர்களுக்கு வழங்க உத்தரவிடவேண்டும் என்ற கோரிக்கையுடன் கலைமகள் சபா உறுப்பினர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 2006ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம், 22 ஆண்டுகள் கடந்தும் முதலீட்டாளர்களுக்கு உரிய பணத்தை வழங்கவில்லை என்று கூறி, கலைமகள் சபா நிர்வாகத்தை எடுத்து நடத்த உதவி தலைமை பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை சிறப்பு அதிகாரியாக மூன்று வாரங்களில் நியமிக்க தமிழக வணிக வரித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

அதேபோல தற்போது நிர்வாகத்தை கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிர்வாகியை விடுவித்த நீதிபதி, மொத்த நிர்வாகத்தையும் கணக்கு வழக்குகளையும் ஆவணங்களையும் அடுத்த மூன்று வாரங்களில் சிறப்பு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் அவருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்போது நிர்வாகத்தை கவனித்து வரும் அதிகாரி ஹரிஹரன், கலைமகள் சபா நிறுவனத்தின் கணக்குகள் வருமான வரி ஆகியவற்றை தணிக்கை செய்து ஆறு வாரங்களில் சிறப்பு அதிகாரியிடம் வழங்க வேண்டும் என்றும் சிறப்பு அதிகாரி அதை ஆய்வு செய்து முறைகேடுகளை கண்டறிந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

You may also like...