Madras high court orders june 6 Nalini case pubji madan case orders

[6/6, 11:36] Sekarreporter: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில், வழக்கறிஞர்களாக இருந்த என்.மாலா, சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு, எஸ்.சௌந்தர், அப்துல் ஹமீத், ஆர்.ஜான் சத்யன் ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி பரிந்துரைத்தது.

முதல்கட்டமாக என்.மாலா, எஸ். சவுந்தர் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து, அவர்கள் பதவியேற்றனர்.

இந்நிலையில் சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இரு புதிய நீதிபதிகளும், இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பின், புதிய நீதிபதிகளை, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வரவேற்று பேசினர். அப்போது அவர்கள், புதிய நீதிபதிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.

இறுதியில், நீதிபதி சுந்தர் மோகன் அளித்த ஏற்புரையில், அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரத்திடம் ஜூனியராக பணியாற்றிய போது, குற்ற வழக்குகளை கையாள்வது குறித்த விவரங்களை தெரிந்து கொண்டதாக குறிப்பிட்டார்.

மேலும், தொழில் முறையில் தனக்கு உதவியாக இருந்த தனது மூத்த வழக்கறிஞர்களின் பங்களிப்பை குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.

நீதிபதி குமரேஷ் பாபு தனது ஏற்புரையில், வழக்காடும் முறையை கற்றுக் கொடுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கும், மூத்த வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இவர்களின் நியமனங்கள் மூலம் நீதிபதிகள் எண்ணிக்கை 58ஆக உயர்ந்து, காலியிடங்கள் 17ஆக குறைந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75.

புதிய நீதிபதிகள் வாழ்க்கை வரலாறு…

நீதிபதி சுந்தர் மோகன்,

1969ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி சுந்தர் – சுப்புலட்சுமி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். தந்தை வழக்கறிஞர், தாய் ஆசிரியர். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த அவர், 1991ம் ஆண்டு வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு, மும்பை குண்டு வெடிப்பு வழக்கு உள்ளிட்ட உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.

நீதிபதி கே.குமரேஷ் பாபு

சென்னையைச் சேர்ந்த இவரது தந்தை கபாலி சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

முதல் பட்டதாரியான இவர், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி சட்டம் முடித்து 1993ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை துவங்கினார்.

தமிழக அரசின் சார்பில் 2001 முதல் 2002ம் ஆண்டு வரை அரசு வழக்கறிஞராகவும் 2020 முதல் 2021 வரை தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராகவும் பல வழக்குகளில் ஆஜராகி உள்ளார்.
[6/6, 13:02] Sekarreporter: ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி முருகனுக்கு பரோல் கோரிய் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பரோல் வழங்கக் கோரிய வழக்கை நளினி வாபஸ் பெற்றார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருப்பதாகவும், ஆனால் வேலூர் சிறையில் இருக்கும் கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். 31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் விடுதலை தீர்மானத்தின்படி இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ காரணங்களுக்காக கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக் கோரி மே 26ஆம் தேதி தானும், மே 21ஆம் தேதி தனது தாய் பத்மாவும் தமிழக அரசிடம் மனு அளித்ததாகவும், அவை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, சிறையில் இருந்த போது குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதால் முருகனுக்கு பரோல் கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், அதை எதிர்த்து சிறைத்துறை டி ஐ ஜி யிடம் மேல் முறையீடு செய்யலாம் என சிறைத்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா தெரிவித்தார்.

இதையடுத்து, சிறைத்துறை டி ஐ ஜி யிடம் மேல் முறையீடு செய்யும்படி அறிவுறுத்தியதை அடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக நளினி தரப்பில் அனுமதி கோரப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[6/6, 13:24] Sekarreporter: பப்ஜி மதன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்தையடுத்தை, ஜாமீன் மனுவை மதன் தரப்பு வாபஸ் பெற்றனர்.

ஆபாசமாக பேசிக்கொண்டு பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் விளையாடி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தவறான வழிக்கு கொண்டு செல்வதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், மதன் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவினர் கடந்த (2021) ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்டார். பின்னர் சைபர் சட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பப்ஜி மதன் மனுத்தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
மதன் தரப்பில், விளையாட்டின் போது பேசிய வார்த்தைகளை மட்டுமே காரணம் காட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் விளையாட்டில் கலந்துகொள்ள அறிவுறுத்தி உள்ளதாகவும், குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. மேலும் பண மோசடி செய்த தொகையில் ஒரு கோடியே 7 லட்சம் ரூபாயும், 2 கார்களையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. விருப்பப்பட்டு விளையாட்டில் சேர்ந்தவர்களிடம் மட்டுமே விளையாட்டின் மூலம் உரையாடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் தொடங்காத நிலையிலேயே உள்ளதாகவும், 316 நாட்களாக சிறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில், விளையாட்டில் கலந்து கொண்டவர்களிடம் கொரோனா நிதி என கூறி 2 கோடியே 89 லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளதாகவும், விளையாட்டில் சேரும் சிறுவர்களை தவறான வழியில் நடத்தியதாகவும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி,
விளையாட்டை பயன்படுத்தி சிறுவர்கள் உள்ளிட்டோரிடம் தவறாக பேசியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், தற்போதைய நிலையில், மதன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.

அப்போது மதன் தரப்பில் ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதி இளந்திரையன், மனுவை வாபஸ் பெற அனுமதித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...