Madras high court orders march ,19

[3/19, 11:02] Sekarreporter: மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி ஒருநாள் சத்தியாகிரகம் நடத்த அனுமதி மறுத்ததை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு, காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், மகாத்மா காந்தியின் மதச்சார்பற்ற கொள்கையை வலியுறுத்தும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையின் கீழ் ஒருநாள் சத்தியாகிரகம் நடத்த அனுமதி கோரி காவல் துறைக்கு மனு அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னையை தொடர்ந்து கடற்கரை சாலையில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, சத்தியாகிரகத்துக்கு அனுமதி மறுத்ததாக கூறியுள்ளார்.

ஜல்லிகட்டு போராட்டம் என்பது தங்கள் வழக்குக்கு தொடர்பு இல்லை எனவும், காந்தி சிலை அருகில் பல அரசு நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு என்பதால், சத்தியாகிரகத்துக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து, சத்தியாகிரகத்துக்கு அனுமதி வழங்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இரு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
[3/19, 12:39] Sekarreporter: நகரங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்கள், மேற்படிப்பில் சேர கிராமப்புறங்களில் பணியாற்றுபவர்களுக்கான ஊக்க மதிப்பெண் பெற உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், தண்டலை கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் அருண்குமார், மருத்துவ மேற்படிப்பில் கிராமப்புறங்களில் பணியாற்றியவர்களுக்கான 5 சதவீத ஊக்க மதிப்பெண்கள் வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார்.

அவரது கோரிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரக தேர்வுக்குழு நிராகரித்தது. இதை எதிர்த்து அருண்குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாவட்ட தலைநகரில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றியதால், ஊக்க மதிப்பெண் சலுகையை வழங்க முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர் அருண்குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளதால், கிராமப்புறங்களில் பணியாற்றியோருக்கான ஊக்க மதிப்பெண்ணை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஊக்க மதிப்பெண்கள் வழங்குவதற்காக கிராமப்புறம், மலைப்பகுதி, தொலைதூர பகுதிகளை வரையறுத்த நீதிபதி ஏ.செல்வம் தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி, மனுதாரருக்கு ஊக்கமதிப்பெண் பெற தகுதியில்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும், மருத்துவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றுவதை ஊக்குவிக்கவே, மேற்படிப்புகளில் ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படுகிறதே தவிர, நகரங்களுக்கு அருகில் உள்ள பகுதியில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு அல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், அப்படி ஊக்க மதிப்பெண்கள் வழங்கினால், அது ஊக்க மதிப்பெண்கள் வழங்கும் நோக்கத்தையே வீழ்த்தி விடும் எனத் தெரிவித்தனர்.

நகரங்களில் இருந்து வெகு தொலையில் அமைந்துள்ள கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மட்டுமே ஊக்க மதிப்பெண் பெற உரிமை உள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நகரங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் பெற உரிமையில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
[3/19, 14:20] Sekarreporter: மேற்கு மாம்பலத்தின் பழம்பெரும் மண்டபமான அயோத்யா மண்டபத்தை இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபம் 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த மண்டபத்தை ஆரம்பத்தில் நிர்வகித்து வந்த இராம சமாஜம் அமைப்பு பல்வேறு நிதி lமுறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து, தமிழக அரசு ஆணையின் படி, அயோத்யா மண்டபத்தை கடந்த 2014ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கீழ் வந்தது

இதனை எதிர்த்து ,இராம சமாஜம் அமைப்பு சார்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது

இந்த வழக்கு நீதிபதி V.M வேலுமணி முன்பு விசாரணைக்கு வந்தபோது
இந்து சமய நலத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் யஷ்வந்த்,
மண்டபத்தில் ஆஞ்சநேயர் சிலை வைத்து அபிஷேகம் ,ஆராதணை செய்து வழிப்பாடு நடத்தப்படுவதாகவும் பொதுமக்களும் அதிக அளவில் வருவதாகும் எனவே இந்து அறநிலைத்துறை சட்டத்தின் படி, சிலை வைத்து வழிப்பாடு நடைபெறுவதால் இந்த மண்டபம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி ராம சமாஜம் சார்பில் தொடரப்பட்ட மனு
நிலைக்கதக்கதல்ல என்று தெரிவித்த நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
[3/19, 15:32] Sekarreporter: சென்னை, மார்ச் 20: கோடநாடு கொலை வழக்கில் மேல் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் சாட்சி விசாரணையை நடத்துமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தத் தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம் பகதூரைக் கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இந்தக் கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். சயான் குடும்பத்துடன் சென்ற கார் விபத்துக்கு உள்ளாகி அவரது மனைவி, குழந்தை பலியானார்கள். சயான் படுகாயமடைந்தார்.
இதையடுத்து, இந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் உள்பட 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கில் பல சாட்சிகளிடம் விசாரிக்கப்படவில்லை. பல சாட்சிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சயான் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட ஊட்டி மாவட்ட நீதிமன்றம் கூடுதல் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தது.
இந்த நிலையில், வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தீபு, ஊட்டி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணையை தொடங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.ஷாஜகான் ஆஜராகி, இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சாட்சி விசாரணையை தொடங்கினால் வழக்கின் போக்கு மாறிவிடும். வழக்கு தொடர்பாக மேலும் பல தகவல்களும், ஆவணங்களும் திரட்டப்பட்டு வருகிறது. முக்கியமான வழக்கு என்பதால் மேல் விசாரணைக்கு பிறகே சாட்சி விசாரணையை தொடங்க முடியும். எனவே, சாட்சி விசாரணையை தொடங்க அனுமதிக்க கூடாது என்று வாதிட்டார்.
அப்போது, வழக்கறிஞர் அய்யப்பராஜ் ஆஜராகி, இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி ஆகியோரையும் சாட்சிகளாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதால் அவர்கள் இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 401 (2)ல் முன்மொழியப்பட்ட சாட்சிகளுக்கும் வாய்ப்பு தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தற்போது இந்த வழக்கில் மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சாட்சி விசாரணைக்கு உத்தரவிட முடியாது. எனவே, இந்த மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.
[3/19, 16:31] Sekarreporter: ஏபிவிபி மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவர் மருத்துவர் சுப்பையா கைது

மருத்துவர் சுப்பையாவை சென்னை ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்

பக்கத்து வீட்டை சேர்ந்த வயதான பெண்மணி கொடுத்த புகாரில் கைது எனத் தகவல்

மருத்துவர் சுப்பையா தனது தனது பக்கத்து வீட்டு வாசலில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக வழக்கு
[3/19, 17:36] Sekarreporter: தகவல்களை சேகரிக்கும் தபால் நிலையங்கள் போல உயர் நீதிமன்றம் செயல்பட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரி விண்ணப்பிக்கும் போது 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இத்தொகையை, போஸ்டல் ஆர்டர்களாகவோ, வரைவோலைகளாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கு பதில் ஆர்.டி.ஐ. ஸ்டாம்ப்களை அறிமுகப்படுத்தலாம் என மத்திய தகவல் ஆணையம் 2013ல் அளித்த பரிந்துரையை அமல்படுத்தக் கோரி நெல்லையைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, போஸ்டல் ஆர்டர்கள், வரைவோலைகள் பெற்று விண்ணப்பிக்கும் போது ஏற்படும் தவ்றுகளால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மத்திய தகவல் ஆணையத்தின் பரிந்துரை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிந்து கொள்ளாமல், பொது நல வழக்கு மூலம் விசாரணை நடத்த முடியாது எனவும், தகவல்களை சேகரிக்கவும், பரிமாறவும் உயர் நீதிமன்றம் தபால் நிலையம் போல செயல்பட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும், மத்திய தகவல் ஆணையம் பரிந்துரை மட்டுமே வழங்கியுள்ளதாகவும், அது சட்டமாகாது என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like...