Madras high court orders november 30

[11/29, 11:17] Sekarreporter 1: சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான வார்டுகளை பெண்களுக்கு ஒதுக்கியதை எதிர்த்த வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வார்டு ஒதுக்கீடு தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பின்படி, ஆண்களை விட பெண்களுக்கு அதிக வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். பார்த்திபன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலினத்தவர் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மொத்தமாக 32 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மீதமுள்ள 168 இடங்களில் கடந்த 2016ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடாக, 84 இடங்கள் தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கவேண்டும் எனவும், ஆனால் பெண்களுக்கு 89 இடங்களும் , ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு கூடுதலாக வார்ட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது பாரபட்சமானது எனவும், இதை சரிசெய்ய கோரி நவம்பர் 13 ம் தேதி தமிழ்நாடு அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநகராட்சி வார்டுகளில் பெண்களுக்கு 50 சதவீதத்துக்கு குறையாமல் இட ஒதுக்கீடு வழங்கி 2019ல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின், மண்டல வாரியாக ஒதுக்கீடு வழங்கக் கூறி அறிவிப்பாணை வெளியிடப்பட்டதாகவும், ஒற்றைப்படைகளில் வார்டுகள் எண்ணிக்கை வரும் போது, கூடுதலாக வரும் ஒரு வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து மாநகராட்சி சட்டத்தின் குறிப்பிட்ட சட்டத் திருத்தங்களை எதிர்த்து புதிய வழக்கு தொடர்வதாக கூறி, இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதித்து. வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[11/29, 12:32] Sekarreporter 1: தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு குறையாத இடத்தை ஒதுக்க வேண்டுமென கோயம்பேடு மார்கெட் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்பேடு தக்காளி மைதானத்தை திறக்க கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் வழக்கு தொடர்நதது.

அதில் வாகனங்களை நிறுத்தக்கூடிய இடத்தில் சிறுகடைகளின் உரிமையாளர்கள் விற்பனை செய்ததால் மைதானம் மூடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தக்காளி விலை உயர்வை கருத்தில் லொண்டு தற்காலிகமாக வாகனங்ளை நிறுத்த அனுமதிக்க முடியுமா என சி.எம்.டி.ஏ. மற்றும் கோயம்பேடு மார்கெட் கமிட்டி ஆகியவற்றிற்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.

அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மார்கெட் கமிட்டி தரப்பில் 800 வாகனங்ளை 8 இடங்களில் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த சங்கத்தினரை அனுமதிக்காததால்தான் விலை உயர்தது என கூறுவது தவறு என்றும், அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்கள் எவரும் தடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. கடந்த வாரத்தை விட தக்காளி விலை தற்போது குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தக்காளி விற்பனை இடத்திற்கு அருகில் உள்ள ஏ சாலை எஃப் பிளாக் அருகில் உள்ள இடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

காலி மைதானத்தில் தக்காளியை லாரியிலிருந்து சிறு வாகனங்களுக்கு மாற்ற மட்டுமே பயன்படுத்துவதாகவும், விற்பனை செய்ய மாட்டோம். எனவும் வியாபாரிகள் சங்கம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கபட்டது.

இவற்றை பதிவு செய்த நீதிபதி, தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், தற்காலிக ஒரு ஏக்கருக்கும் குறையாத இடத்தை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வியாபாரிகளும் பொருட்களை ஏற்றி இறக்க மட்டும் நான்கு வாரங்களுக்கு இடைக்காலமாக ஒதுக்கும்படி மார்கெட் கமிட்டிக்கு உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் அந்த இடத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். சோதனை முறையில் இரண்டு வாரங்களுக்கு இந்த நடைமுறையை கடைபிடித்து, அதில் உள்ள சாதக பாதகங்களை இரு தரப்பும் இரண்டு வாரங்களுக்கு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, பிரதான வழக்கின் விசாரணையை டிசம்பர் 15ஆக தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

தொடர் மழை, வரத்து குறைவு, பிற மாநில வாகனங்கள் வராதது போன்ற காரணங்களால் அதிகளவில் உயர்ந்துள்ள தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
[11/29, 12:54] Sekarreporter 1: ராஜிவ் கொலை வழக்கில் எழுவர் விடுதலை தொடர்பான தீர்மானத்துக்கு ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ம் தேதி ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் மீது ஆளுனர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளித்து தமிழக உள்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில்மனுவில், தண்டனை குறைப்பு தொடர்பாக குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க தகுதியானவர் என கூறி, ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததாகவும், அதை மத்திய அரசு சட்டப்படி பரிசீலிக்கும் எனக் கூறியிருந்ததும் பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளின்படி, நளினியின் மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆளுநரின் செயல்பாடு உச்ச நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும், ஆளுநர் ஒப்புதல் இல்லாமலும் தண்டனைக் குறைப்பு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் நளினி தரப்பில் சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இதே வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது என்றார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய நளினி தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், கூடுதல் பதில்மனுவை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்ததனர்.

இதேபோல, முன் கூட்டி விடுதலை கோரி இந்த வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவுக்கு மூன்று வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
[11/29, 13:54] Sekarreporter 1: நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை – தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகம் பேட்டி

அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதால் மீண்டும் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற தேவையில்லை – அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம்
[11/29, 15:50] Sekarreporter 1: *நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.*

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை தொடர்பான தீர்மானத்துக்கு ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தங்களை விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தாக்கல் செய்த வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு குறித்து தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பேட்டி அளித்தார்.

அப்போது, ஏழு பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசு 2018ஆம் ஆண்டு 8 செப்டம்பர் 9ம் தேதி நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுனருக்கு தெரிவித்து இருந்ததாக கூறினார்.

முந்தைய ஆளுனரும் இப்போதைய ஆளுனரும் முடிவெடுக்காமல் தாமதமாவதால், நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்று நளினி மனுதாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

அரசின் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து ஆளுனர் முடிவு எடுத்து, அதில் அவர் கையெழுத்திட்டபின் அரசாணை வெளியிட வேண்டும் என்றும், ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பன்நோக்கு விசாரணை முகமையின் புலன் விசாரனை முடிவடையாததால், முடிவெடுக்க தாமதமாவதாக ஆளுனர் தரப்பில் தெரிவிப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். மற்றொரு முறை மத்திய அரசின் பரிந்துரைக்காக அனுப்பப்பட்டுள்ளதால் தாமதம் ஆவதாகவும் தெரிவித்தார்.

நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதால் எழுவர் விடுதலை தொடர்பாக மீண்டும் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்

அதனால் தற்போதைய நிலையில் நளினியின் வழக்கு தேவையற்றது என்பதால்தான் தள்ளுபடி செய்யச் சொன்னோமே தவிர, விடுதலை செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றும், சமூக வலைதளங்களில் தவறான புரிதலுடன் கருத்துக்கள் பகிரப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
[11/29, 16:59] Sekarreporter 1: 100 கோடி ரூபாய் மோசடி வழக்கில் நிதிநிறுவன அதிபர் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்…..

100 கோடி ரூபாய் மேல் பணம் மற்றும் சொத்து ஆவணங்களை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக சென்னை வடபழனி கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பைனான்சியர் வேலு, தமிழ்ச்செல்வி, நாகரத்தினம், முருகன் ஆகியோர் மீது மத்திய குற்ற பிரிவு காவல்துறை மோசடி வழக்குப்பதிவு….

நான்கு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல்…

பல கோடி சொத்துக்கள் மற்றும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாலும் வழக்கு விசாரணை இன்னும் முடிவடயதாதலும் முன்ஜாமீன் வழங்க முடியாது மனுவை தள்ளுபடி – நீதிபதி டி.வி.தமிழ்செல்வி
[11/29, 17:02] Sekarreporter 1: 100 கோடி ரூபாய் மோசடி வழக்கில் நிதிநிறுவன அதிபர் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வடபழனி கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர். வேலு மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக 100 கோடி ரூபாய் மேல் பணம் மற்றும் சொத்து ஆவணங்களை பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக கூறி சென்னையை சூளைமேடை சேர்ந்த மோகன் குமார் என்பவர் சென்னை மத்திய குற்றபிரிவு காவல் துறையில் புகார் அளித்தார்.

இந்த புகார் மீது வேலு மற்றும் அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி, தாயார் நாகரத்தினம் மற்றும் சகோதரர் முருகன் ஆகியோர் மீது காவல்துறை மோசடி வழக்குப்பதிவு செய்தது.

நான்கு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது புகார் அளித்த மோகன்குமார் தரப்பில் இடையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டாது. ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது சுமார் 115 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்கள் மற்றும் பணத்தை அவர் ஏமாற்றி உள்ளதாகவும் கடன் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகவும் இதில் பல நிறுவனங்களின் சொத்து ஆவணங்களும் அடங்கியுள்ளதால் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கபட்டது.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, தமிழ்ச்செல்வி, வழக்கு விசாரணை இன்னும் முடிவடையவில்லை இந்த நிலையில் வேலு, நாகரத்தினம் முருகன் உள்ளிட்டோர் முன்ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[11/29, 17:13] Sekarreporter 1: நீலகிரியில் குலதெய்வம் கோயிலுக்கு பூசாரியாக நியமித்த 7 வயது சிறுவனுக்கு கல்வி வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நீலகிரி மாவட்டம், நெடுக்காடு கிராமத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வமான கெத்தை அம்மன் கோவிலில் பூஜை உள்ளிட்ட விழாக்களை அந்த இன மக்களே செய்து வந்த நிலையில், கடந்த 1994ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதாகவும், அந்த கோயிலுக்கு அதே கிராமத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு படித்த 7 வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இதுபோல பூசாரியாக நியமிக்கப்படும் சிறுவர்களால் பள்ளி செல்ல முடியாது என்றும், உணவை அவர்களே சமைத்து சாப்பிடுவது, கோவில் பசுக்களின் பாலை கறந்து நெய் எடுத்து விளக்குகளுக்குப் பயன்படுத்துவது போன்றவற்றால் கல்வி தடைப்படுகிறது என்றும், இது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அதிகாரிக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோவில் மரபு படி சிறுவன் கோவிலை விட்டு வெளியில் வரக்கூடாது என்றும் தமிழகத்தில் வீடு தோறும் கல்வி திட்டம் செயல்படுத்தபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, சிறுவனுக்கு கல்வி வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
[11/29, 17:45] Sekarreporter 1: போலீஸ் வேனில் காவலர் உடையில் சிறுமிகளிடம் விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, விளாத்தூர் என்னுமிடத்தைச் சேர்ந்த சிவா, தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

2018ஆம் ஆண்டு பக்கத்து வீடுகளைச் சேர்ந்த தத்துவபதி மற்றும் ராஜப்பா ஆகிய இருவருக்கும் இடையிலான தகராறு தொடர்பாக விசாரிக்க வந்த அரித்துவாரமங்கலம் போலீஸ் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அசோக்குமார், தத்துவபதியை லத்தியால் தாக்கியுள்ளார்.

இதை தட்டிக் கேட்ட சிவாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த உதவி ஆய்வாளர், வழக்கு ஒன்றில் அவரை கைது செய்வதற்காக, அவரது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று, 8 மற்றும் 5 வயதுடைய சிறுமிகளை போலீஸ் வேனுக்குள் வைத்து விசாரித்ததாகவும், இதனால் ஏற்பட்ட அச்சத்தில் குழந்தைகள், ஒரு வாரத்துக்கு பள்ளி செல்லவில்லை என்றும், போலீசாரால் தனது உயிருக்கும், உடமைக்கும் அச்சுறுத்தல் உள்ளதால், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவா, மனித உரிமை ஆணையத்தில் புகார் தாக்கல் செய்தார்.

இந்த புகார் மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ், சிறப்பு உதவி ஆய்வாளரின் நடத்தையால் சிறுமிகள் அச்சத்தின் பிடியில் சிக்கி பாதிக்கப்பட்டதால், சிவாவுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

சிறுமிகளை போலீஸ் வேனில் வைத்து விசாரித்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆணையம், காவல் நிலைய ஆய்வாளர் மஞ்சுளா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் அசோக்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை எப்படி கையாள வேண்டும் என போலீசாருக்கு பயிற்சி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
[11/29, 17:55] Sekarreporter 1: சாலையோர வியாபாரிகள் (தெரு வியாபாரிகள்) ஒழுங்குமுறைச் சட்டப்படி, சென்னையில் வியாபாரம் செய்யக் கூடிய இடங்கள் எவை என்பதை ஒரு மாதத்தில் அறிவிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சாலையோர வியாபாரிகள் (தெரு வியாபாரிகளை) முறைப்படுத்துவது தொடர்பாக 2014ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தையும், விதிகளையும் அமல்படுத்தக் கோரி சிங்காரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தெரு வியாபாரிகள் சட்டப்படி சென்னையில் எங்கு வியாபாரம் செய்யலாம் என்றும், எங்கெல்லாம் வியாபாரம் செய்யக் கூடாது என்றும் ஒரு மாதத்தில் அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், வியாபாரம் செய்யக் கூடிய பகுதிகள், வியாபாரம் செய்யக் கூடாத பகுதிகளை ஒரு மாதத்தில் அறிவிக்க வேண்டும் எனக் கூறி, அந்த நடைமுறைகளை முடிக்க ஏதுவாக வழக்கை ஒரு மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.
[11/29, 18:45] Sekarreporter 1: கருணை மனுவின் நிலை குறித்து தகவல் கோரியுள்ள பேரறிவாளனின் மனு முறையாக பரீசிலிக்கப்படும் என
மாநில தகவல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆளுநருக்கு கருணை மனு அனுப்பிய நிலையில்,
கருணை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாததால்,
அது தொடர்பான விவரங்களை தர வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆளுநர் அலுவலக தகவல் அதிகாரிக்கு விண்ணப்பித்ததாக கூறியுள்ளார்.

அதன் மீது ஆளுநர் மாளிகை பதிலளிக்காததால், இதே கேள்விகளுடன் மத்திய தகவல் ஆணையத்திற்கு மனு அளித்ததாகவும், அந்த மனு மாநில தகவல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது வரை அந்த மனுவிற்கு எந்த பதிலும் வராததால், தனது மனுவுக்கு பதிலளிக்கும்படி மாநில தகவல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்

இந்த வழக்கு இன்று நீதிபதி தாண்டாபானி முன்பு விசாரணைக்கு வந்த போது,மாநில தகவல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநில தகவல் ஆணையத்திற்கு ஏராளமான மனுக்கள் வருவதாகவும், வரிசைப்படி பேரறிவாளனின் மனுவை பரிசீலித்து பதில் அளிக்கப்படும் என தெரிவித்தார்

அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்
[11/29, 18:45] Sekarreporter 1: ராணுவ நிலத்தை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ராணுவ நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை 8 வாரத்தில் அகற்றி நிலத்தை ஒப்படைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள துளசிங்கபுரம் பகுதியில் உள்ள நிலத்தை1987ல் அரசு புறம்போக்கு நிலமாக அறிவித்ததை ரத்து செய்து, அப்பகுதியில் சாலை அமைக்கவும், மாநகராட்சி நிலம் என அறிவிக்கவும் உத்தரவிடக் கோரி சிங்காரவேலு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ராணுவ பயிற்சி மையத்தை சேர்ந்தவர்களும், ராணுவ எஸ்டேட் அதிகாரியும் இடையூறு ஏற்படுத்துவதாகவும், 2017ல் வழக்கில் தற்போதுள்ள நிலை நீடிக்க வேண்டுமென்ற உத்தரவை மீறி சுற்றுச்சுவர் எழுப்பியதால் பிரதான சாலையை அணுகுவது சிரமமாக இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், குறிப்பிட்ட நிலம், ராணுவ நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலம் தான் என தமிழக அரசும், மாநகராட்சியும் உறுதிபடுத்துவதால், அந்த இடத்தில் சுற்றுச்சுவர் எழுப்ப ராணுவத்துக்கு உரிமையுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதி என கூறுவதால், அரசின் திட்டங்களின்படி மாற்று இடங்களை கண்டறிந்து இடம் கொடுக்கலாம் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நாட்டை பாதுகாக்க பாடுபடும் ராணவத்தினருக்கு சொந்தமான நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க கூடாது எனவும், அந்த நிலத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு, சுற்றுசுவர் கட்டும் பணிகளை காவல்துறை உதவியுடன் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

வளர்ச்சி நடவடிக்கை, சாலை விரிவாக்கம், உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்க நிலம் தேவை என்பதால் ஆக்கிரமிப்பாளகளை அப்புறப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

அரசின் நலத்த்திட்டங்களில் பலனடைய தகுதி இருந்தால், அரசு மாற்று இடம் கொடுக்கலாமே தவிர, ராணுவ நிலத்தை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளார்.

புறம்போக்கு நிலம் என்ற அறிவிப்பை ரத்து செய்ய முடியாது என மனுதாரர் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, 8 வாரத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

You may also like...