Madras high court orders november2

[11/1, 12:18] Sekarreporter1: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட  சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இதில், வன்னியர்களுக்கு,  10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினை சார்ந்த 25க்கு மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த சட்டத்திற்கு ஆதரவாக பா.ம.க. தலைவர் ராமதாஸ் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு விசாரிக்கப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டிருப்பதாகவும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில், முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த புதிய அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம், இந்த சட்டத்தை நிறைவேற்றியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என வாதம் வைக்கப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983 ல் நடத்திய கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 13.01 சதவீதம் பேர் வன்னியர்கள் என்ற புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் அமர்வு, வன்னியர் இட ஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு

நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா?? அதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளதா? மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்கள் உள்ளிட்ட இடஒதுக்கீட்டிற்காக அளவுகோல்கள் எதுவும் இல்லாமல் அரசு இடஒதுக்கீடு வழங்க முடியுமா??? உள்ளிட்ட 6 கேள்விகளை எழுப்பி அரசிடம் விளக்கம் கேட்டிருந்தாகவும் ஆனால் அரசு இந்த கேள்விகளுக்கு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை என்பதால் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கி அரசு பிறபித்த சட்டத்தை ரத்து செய்வதாகவும், சட்டம் செல்லாது எனவும் உத்தரவிட்டனர்.
அப்போது இந்த தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்யும் வகையில் தீர்ப்பை சில வாரங்கள் நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.
[11/1, 13:15] Sekarreporter1: கோவில்களில் பக்தர்களுக்கும், தெய்வத்துக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் பிரதட்சணம் ( வலம் வர) ஏற்பாடு செய்யக் கோரி ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வர மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் குறித்து நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் இரு வாரங்களுக்கு முன் நேரில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கோவிலுக்கு வரும் பக்தர்களை பேருந்து நிலையத்தில் வைத்து தரிசனத்து ஏற்பாடு செய்து தருவதாக கூறி, 500 ரூபாய் வரை இடைத்தரகர்களால் வசூலிக்கப்படுவதாக மனுதாரர் குற்றம் சாட்டினார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், கடவுளுக்கும், பக்தர்களுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை எனவும், இதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

ஆண்டவன் முன் அனைவரும் சமம் எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்யும்படி, மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தி, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

அதேபோல, இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வி ஐ பி தரிசனத்தை முறைப்படுத்துவது குறித்தும் அந்த அறிக்கையில் விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.
[11/1, 15:43] Sekarreporter1: வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர்களின் பேட்டிகள்…..

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் : இந்த இட ஒதுக்கீடு முடிவை கைவிடக்கூடாது என இந்த அரசும் முடிவெடுத்தது. உச்ச நீதிமன்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு மூலம் உள் ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தீர்ப்பளித்திருந்தது. சட்டம் ரத்துக்கான காரானங்கள் நாளைதான் தெரியவரும். மேல்முறையீட்டிற்கு அடிப்படை உள்ளதால் மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம். மேல்முறையீடு செல்ல அரசிடம் வலியுறுத்துவோம். ஏற்கனவே இடமளிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் நியமனம் செய்யப்பட்ட மாணவர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கவே மேல்முறையீடு செல்வோம்.

========

பாமக வழக்கறிஞர் கே.பாலு : தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. சட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் வகையில் அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்து படித்து வரும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. தீர்ப்பிற்கு தடைவிதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வழக்கில் வெற்றி பெறுவோம் என நம்பி இருந்தோம். தீர்ப்பை சட்டப்படியாக சந்தித்து, தீர்ப்பை முறியடிக்கும் முயற்சிகளை மேற்கொள்வோம். அரசு மேல்முறையீடு செய்யும்போது, பாமக மற்றும் டாக்டர் ராமதாஸ் தரப்பிலும் மேல்முறையீடு செய்வோம். அருந்ததியர், இஸ்லாமியர் உள் ஒதுக்கீடு போலத்தான் வன்னியர்களுக்கு வழங்கப்பட்டது.

=========

மனுதாரர் பழனியப்பன் என்பவர் தரப்பு வழக்கறிஞர் ஜி. முருகேந்திரன்

வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை நீதிபதிகள் வழங்கியுள்ளனர். இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா?? சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா?? உள்ளிட்ட கேள்விகளுக்கு நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளதாக கூறியுள்ளனர்.இந்த இட ஒதுக்கீடு மூலம் தென் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். தமிழக அரசாங்கம் கொண்டு வந்துள்ள இந்த சட்டமானது அரசியல் சாசனத்திற்கு முரணானது என நீதிபதிகள் கூறியுள்ளனர். தமிழக அரசு மேல் முறையீடு செய்ய உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

============
[11/1, 17:03] Sekarreporter1: குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்களின் வாடகை பாக்கி எவ்வளவு என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுசீந்திரம் கோவில் ஓவியங்கள் அழிப்பு, திருவெள்ளறை கோவில் பணிகளை மூன்றாம் நபர்களுக்கு டெண்டர்விட்டது, சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் இடிக்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களில் நீதிமன்ற உத்தரவை மீறியதாக ரங்கராஜன் நரசிம்மன், வெங்கட்ராமன் ஆகியோரால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆஜராகி இருந்த நிலையில், குத்தகை சொத்துகள் மூலம் வர வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிலுவையில் இருப்பதாகவும், ஆனால் கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாக உள்ள பாக்கித் தொகையை மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், அறநிலையத்துறை ஆணையரிடம் கோவில்களை நேரில் சென்று ஆய்வு செய்து, குறைகளை நிவர்த்தி செய்யும்படியும், மேற்கொண்ட பணிகள் குறித்து புகைப்படங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

  • குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்களின் வாடகை பாக்கி எவ்வளவு என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...