Madras high court orders october 13 velumani case kallakuruchi smsj order

[10/12, 11:25] Sekarreporter 1: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளியின் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.

கணியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்ட பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர கைது செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 26ஆம் தேதி அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென வழக்கறிஞர் பி. ரத்தினம் தலைமையில் 70 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டு தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ஜாமீன் வழங்கியது ஏற்கத்தக்கது அல்ல என்றும், விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மாணவி தற்கொலை தான் செய்து கொண்டார் என்ற தனி நீதிபதி கருத்தும் ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த கடிதம் குறித்து பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் ரத்தினம் முறையீடு செய்தார். தங்கள் கோரிக்கை மனுவை தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டுமென்றும், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

ஆனால் நீதிபதிகள், ஆயிரக்கணக்கான கோரிக்கை மனுக்கள் உள்ளதாக குறிப்பிட்டதுடன், அவற்றை வழக்காக விசாரிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். கனியாமூர் பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் ரத்து கோரிக்கையையும் தாமாக முன் வந்து வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள், கோரிக்கை மனுவை கவனத்தில் எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
[10/12, 12:32] Sekarreporter 1: மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு பள்ளி மாணவ – மாணவியருக்கு இலவச லேப் டாப்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2020 – 21ம் கல்வியாண்டில் 5 லட்சத்து 32 ஆயிரம் லேப் டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாற்றுத் திறனாளி மாணவ – மாணவியருக்கு லேப்டாப்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அதனால் மாற்று திறனாளி மாணவ – மாணவியருக்கு இலவச லேப் டாப்கள் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இது தொடர்பாக கடந்த செப்டம்பரில் அரசுக்கு அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை எனவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, திட்டம் அமலில் இருந்தால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கலாமே என அரசுக்கு அறிவுறுத்தி மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்
[10/12, 16:07] Sekarreporter 1: உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பணப்பலன் வழங்காததை எதிர்த்து ஆசிரியர் தொடர்ந்த வழக்கில், நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து, 1993ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், பணப்பலன்கள் வழங்கக் கோரி ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வழக்குகளில், மனுதாரர்களுக்கு பண பலன்களை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளில், வெவ்வேறு அமர்வுகள், வெப்வேறு தீர்ப்புகளை வழங்கியதால், வழக்குகள் மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இதனை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு, 1993ம் ஆண்டு அரசாணையை அனைத்து இடை நிலை ஆசிரியர்களுக்கும் 2017 மார்ச்சிலிருந்து அமல்படுத்த வேண்டும் என்றும், 2016க்கு பிறகு பண பலன்கள் கோரும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.

முழு அமர்வு உத்தரவுப்படி தமக்கு பண பலன்கள் வழங்கவில்லை எனக்கூறி ஹரிஹரன் என்ற ஆசிரியர் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பரேஷ் உபாத்யாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 2016க்கு பிறகு புதிய வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என முழு அமர்வு உத்தரவிட்டதால் நிவாரணம் கோர மனுதாரருக்கு உரிமையில்லை என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2013 ஆண்டிலிருந்து வழக்கு தொடர்ந்துள்ளதால், எப்போது நிவாரணம் வழங்கப்படும் என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பணப்பலன்கள் வழங்குவது தொடர்பாக அரசின் கருத்துக்களை பெற்று தெரிவிப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அரசுத்தரப்பில் உரிய விளக்கம் வழங்கப்படாததால், விசாரணைக்கு அரசுத்தரப்பு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறி, நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[10/12, 17:53] Sekarreporter 1: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்குகளை வரும் 27 ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை கோவை மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால விதித்திருந்த நிலையில் மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோவன், வழக்கில் ஆஜராக உள்ள மூத்த வழக்கறிஞர் ராஜூ வெளிநாடு சென்று உள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு மறுப்பு தெரிவித்து நீதிபதிகள், வழக்கை ஒத்திவைக்க முடியாது என தெரிவித்தனர்.
இன்றே விசாரணையை தொடங்கலாம் என தெரிவித்தனர்.
இதையடுத்து
முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பில் இன்னொரு மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே ஆஜராகி,இந்த வழக்கில்
ஏற்கனவே ஆரம்பகட்ட விசாரணைக்கு காவல்துறை அதிகாரியின் பெயரை குறிப்பிட்டு
சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டிருந்த து.அதனடிப்படையில் விசாரணை அதிகாரியாக பொன்னி நியமிக்கப்பட்டு,
ஆரம்பகட்ட விசாரணையில் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டினார்.
முதலில் ரிட் வழக்கை விசாரித்துவிட்டு கிரிமினல் ஓபி வழக்கை விசாரிக்க வேண்டும் கிரிமினல் ஓபி வழக்கில் தான் ஆஜராக உள்ளதாகவும் தெரிவித்தார். எனவே
வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் நாளை ஒத்திவைப்பதாகவும் நாளை வழக்கை நடத்துங்கள் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
அனைத்து தரப்பு வழக்கறிஞர்கள் ஒப்புதலுடன்தான் இன்று ஒத்திவைப்பட்டதாகவும் தற்போது தள்ளிவைக்க கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர். பின்னர் வழக்கு விசாரணையை வரும் 27 ம் தேதி ஒத்திவைத்தனர். ஏற்கனவே இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையும் நீட்டித்து உத்தரவிட்டனர்
[10/12, 18:05] Sekarreporter 1: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்து இறந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே ஒருவர் நேற்று தீக்குளித்தார்.

தீக்குளித்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்து உள்ள சேர்மாதூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்தது.

மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், தனக்கு ஜாதி சான்றிதழ் வழங்குமாறு பலமுறை அரசு அலுவலகங்களில் கேட்டுள்ளார்.

இந்த நிலையில் தனக்கு ஜாதி சான்றிதழ் வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட உதவி மையத்திற்கு வந்ததும், பின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததும் தெரியவந்தது.

தீக்குளித்த வேல்முருகனுக்கு 95 சதவீத தீக்காயங்களுடன்ன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காயத் தடுப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன் முன்பு ஆஜரான வழக்கறிஞர் சூர்யாபிரகாசம், இந்த சம்பவத்தை குறிப்பிட்டு இது குறித்து தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .

இதையடுத்து நீதிபதி, உயர் நீதிமன்ற பதிவாளரை அழைத்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் இந்த சம்பவத்தை தாமாக முன் வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், தலைமை நீதிபதிக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
[10/12, 20:08] Sekarreporter 1: ஆசிரியர் பணி நியமனத்தின் போது கல்வித்தகுதியில் எந்த சமரசமும் செய்து கொள்ள கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை திருவல்லிக்கேணி இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியில், ஹிந்தி முதுகலை பட்டதாரி ஆசிரியராக ஹீரா காதூன் என்பவரின் நியமனத்துக்கு அரசு ஒப்புதல் அளிக்க மறுத்தது.

இதை எதிர்த்து ஹீரா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அலஹாபாத்தில் உள்ள ஹிந்தி சாஹித்ய சம்மேளன் பிரயாக்கில் மனுதாரர் பெற்ற சிக்‌ஷா விஷாரத் பட்டம், தமிழகத்தில் பி.எட் . படிப்புக்கு இணையாக கருத முடியாது எனக் கூறி, நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஆசிரியர் பணி நியமனங்களின் போது, கல்வித்தகுதியில் எந்த சூழலிலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது எனத் தெரிவித்த நீதிபதி, உரிய கல்வித்தகுதியைப் பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
[10/12, 21:17] Sekarreporter 1: அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலன் விசாரணைக் குழுவினர், விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களை துன்புறுத்துவதாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு நடை பயிற்சி சென்ற போது கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி – கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வந்த நிலையில்,
விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க போலீஸ் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலன் விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இந்த சிறப்பு புலன் விசாரணைக் குழு சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணைக்காக அழைத்து செல்லும் நபர்களை சிறப்பு புலன் விசாரணைக் குழு பல்வேறு வகையில் துன்புறுத்துவதாக, சிறை கைதிகள் உரிமை மையத்தின் இயக்குனர் வழக்கறிஞர் புகழேந்தி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலன் விசாரணைக் குழு, நள்ளிரவு நேரங்களில் பலரை விசாரணைக்காக அழைத்துச் சென்று காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக அடைத்து வைப்பதாகவும், குற்ற வழக்கு விசாரணையில் போலீசார் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி சிறப்பு புலன் விசாரணை குழுவினர் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலன் விசாரணைக் குழு சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பதை கண்காணித்து மனித உரிமை மீறலை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
[10/12, 21:17] Sekarreporter 1: சென்னையில் இருந்து டில்லிக்கு 3 கிலோ கொகைன் போதைப்பொருள் கடத்த முயன்ற வழக்கில், மிசோரம் வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து டில்லிக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கடந்த 2017-ம் ஆண்டு மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சென்னையில் இருந்து டில்லி செல்லும் ரயில்களில் சோதனை நடத்தினர்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், முதல் வகுப்பில் பயணம் செய்த மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த விஷால் என்ற வாலிபரிடம் 3 கிலோ கொகைன் எனப்படும் விலை உயர்ந்த போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஷால் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

You may also like...