Madras high court orders velumani case

[9/7, 10:58] Sekarreporter1: டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள்..

தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

இடைக்கால உத்தரவு தொடர்பாக விசாரணை செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தது தலைமை நீதிபதி அமர்வு…

மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக தமிழக அரசு ஆட்சேபத்தை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்…

மத்திய அரசு அனுமதியளித்துள்ளதால் மூத்த வழக்கறிஞர் ராஜு ஆஜராகலாம் – உயர் நீதிமன்றம்…
[9/7, 11:30] Sekarreporter1: டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பாக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபத்தை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரி மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என அளித்த அறிக்கையை மீறி அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை எதிர்த்து அரசோ, மனுதாரர்களோ வழக்கு தொடரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், வழக்கை ரத்து செய்யக் கோரி வேலும்ணி தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்த்தல்ல எனவும், இந்த மனுவை ஒற்றை நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என ஆட்சேபம் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜு, வேலும்ணி சார்பில் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்த தலைமை வ்ழக்கறிஞர், வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ள நிலையில் வருமான வரித்துறைக்காக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ராஜு எப்படி வேலும்ணிக்கு ஆதரவாக ஆஜராகலாம் எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த மனு தொடர்பாக கூடுத்ல் மனுக்கள் தாக்கல் செய்ய இருப்பதால் அவகாசம் வழ்ங்க வேண்டும் எனக் கோரினார்.

வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விளக்கிய தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு சாதகமாக ஒப்பந்தங்களை வழங்கிய வேலுமணி, தன்னை வளப்படுத்திக் கொண்டது, அதிகார துஷ்பிரயோகம் என வாதிட்டார்.

மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆஜராகி வருவதாக வேலும்ணி தரப்பு மூத்த வழக்கற்ஞர் தெரிவித்தார். மேலும், அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த பொது நல வழக்குடன், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த குற்றவியல் பிரிவில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் சேர்த்து தான் விசாரிக்கபட்டன என்பதால், வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்துள்ள குற்றவியல் மனுவை இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம் என தெரிவித்தார்.

மேலும், எந்த ஆதாரமும் இல்லை என்ற ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை புறக்கணித்து விட்டு, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கை ரத்து செய்யக் கோரிய வேலுமணியின் மனுவை விசாரிக்க அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபங்கள் தொடர்பாக, தலைமை நீதிபதி அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்தது.

டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வேலுமணி மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பான விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும், வேலுமணி சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜு ஆஜராக மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், அந்த அனுமதி திரும்பப் பெறப்படாததால் இதுசம்பந்தமான தமிழக அரசு ஆட்சேபம் நிராகரிக்கப்படுகிறது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[9/7, 15:22] Sekarreporter1: நில மோசடி புகார் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு மீது செப்டம்பர் 13ல் உத்தரவு…..

சென்னை உயர் நீதிமன்றம்

நீதிபதி இளந்திரையன்

மருமகனின் சகோதரரின் சொத்துகளை அபகரித்த புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கு

தன் மீது தவறாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாம் மீது தவறாக வழக்கு பதியப்பட்டுள்ளது : ஜெயக்குமார்

2016ம் ஆண்டு நடைபெற்றதாக கூறப்படும் சம்பவத்திற்கு 2021ம் ஆண்டு தான் புகாரளிக்கப்பட்டது : ஜெயக்குமார்

2016ம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் அவர் மீது புகார் அளிக்க இயலவில்லை. அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார் : மகேஷ் தரப்பு
[9/7, 15:26] Sekarreporter1: நில மோசடி புகாரில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து வழ்க்கில் செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது மருமகனின் சகோதரர் மகேஷ் அளித்த பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு என்றும், 2016ல் நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு 2021ஆம் ஆண்டு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் புகார் அளிக்க இயலவில்லை என்று புகார்தாரர் மகேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதற்காக செப்டம்பர் 13ஆம் தேதிக்கு நீதிபதி இளந்திரையன் தள்ளிவைத்துள்ளார்.
[9/7, 15:47] Sekarreporter1: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியே செல்லும் கோவை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடுக்ள் விதித்த உத்தரவை மாற்றியமைக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் கோவை – பெங்களூரு சாலையில் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கக்கோரி யானைகள் நல ஆர்வலரான எஸ்.பி.சொக்கலிங்கம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் 2019ஆம் ஆண்டு உத்தரவை முறையாக அமல்படுத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மக்கள் போராடடத்தில் ஈடுபட்டனர்.

தடை உத்தரவால் பொதுமக்கள், பள்ளி கல்லூரி செல்பவர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பவானிசாகர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. – பி.எல்.சுந்தரமும்,
ஈரோட்டை சேர்ந்த கண்ணையன் என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கும், 16.2 டன்னுக்கும் மேல் எடையுள்ள வாகனங்களுக்கும் எப்போதும் அனுமதி இல்லை என உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை மாற்றியமைக்க கோரி சத்தியமங்கலம் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோவை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே பிறப்பித்த இரு அறிவிப்பாணைகளில் எந்த எடையும் குறிப்பிடப்படவில்லை எனவும், பதிவுச்சான்றில் குறிப்பிடப்பட்டுள்ள எடைக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்ல கூடாது என்று மட்டுமே உத்தரவிட்டுள்ளதால், உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், மாற்றுப் பாதையில் செல்ல வேண்டுமானால் 400 கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணிக்க வேண்டும் எனவும், இந்த சாலை வழியாக செல்வதாக இருந்தால் 130 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பயணித்தால் போதுமானது எனவும் வாதிடப்பட்டது.

கூடுதல் தூரம் பயணிப்பதாக இருந்தால் அதற்கு ஏற்ப கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் எனவும் இந்த கட்டுப்பாடுகளால் லாரி உரிமையாளர்களுக்கு என்ன பாதிப்பு உள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நமது தேவையை பூர்த்தி செய்ய சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்படுகிறோம் என வேதனை தெரிவித்தனர்.

மேலும், நீதிமன்ற உத்தரவுக்கு முன்பே இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க மறுத்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், நீர்நிலைகள், வனங்கள் நிறைந்த தமிழகத்தின் பெருமையை பலி கொடுக்க முடியாது எனவும், தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை ஸ்விட்சர்லாந்து போல அழகானது எனத் தெரிவித்தனர்.
[9/7, 19:36] Sekarreporter1: சென்னை, செப்.8&

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சர்புன்நிஷா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:&
எனக்கும் அப்துல் ரசாக் என்பவருக்கும் கடந்த 2007&ம் ஆண்டு இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. எங்களுக்கு 14 மற்றும் 12 வயதுகளில் மகள், மகன் உள்ளனர். என் கணவருடன் குடும்ப தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதால், அவர் மீது போலீசில் புகார் செய்தேன். மேலும், திருவள்ளூர் மாவட்ட முஸ்லிம் ஜமாத் ஒருங்கிணைப்பு கமிட்டியிடம், குடும்ப பிரச்சினை தொடர்பாக சமரசம் செய்து, கணவருடன் சேர்த்து வா–ழ வைக்கும்படி முறையிட்டேன். ஆனால், இந்த கமிட்டி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 25&ந்தேதி இந்த கமிட்டி எனக்கு கடிதம் அனுப்பி, மார்ச் 8&ந்தேதி பொன்னேரியில் உள்ள மரியாம் மதீனா பள்ளிவாசலுக்கு வரும்படி கூறியிருந்தனர். ஆனால், நான் அன்று போக வில்லை. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட முஸ்லீம் ஜமாத் ஒருங்கிணைப்பு கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள திருவள்ளூர் மாவட்ட காஜி முகமது அலி, என் கணவருக்கு தலாக் (விவாகரத்து) சான்றிதழ் வழங்கி விட்டார். இதை வைத்துக் கொண்டு, என் கணவர் அவசர அவசரமாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்து விட்டார். இதனால், நானும், என் குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். சட்டவிரோத கட்டபஞ்சாயத்துக்கு போக வில்லை என்ற காரணத்தால், இந்த கமிட்டி இவ்வாறு செயல்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில், இந்த கமிட்டி நீதிமன்றத்துக்கு இணையாக இதுபோன்ற பிரச்சினைகளை பொன்னேரி பள்ளிவாசலில் வைத்து விசாரிக்கிறது. இந்த ஐகோர்ட்டு கடந்த 2016&ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பில், கோவிலோ, தேவாலயமோ, மசூதியோ எந்த ஒரு வழிப்பாட்டு தலமாக இருந்தாலும், அது வழிப்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதுபோல கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடக்கூடாது என்று ஏற்கனவே கூறியுள்ளது.
எனவே, பொன்னேரி மசூதியில் கட்டபஞ்சாயத்து செய்ய தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கு விசடாரணை முடியும் வரை, தலாக் சான்றிதழை வழங்க கூடாது என்று திருவள்ளூர் மாவட்ட காஜி முகமது அலிக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் சிலம்புச்செல்வன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ÔÔமனுதாரர் கூறும் காரணத்துக்கு முகாந்திரம் இருப்பதால், திருவள்ளூர் மாவட்ட காஜி முகமது அலி, தலாக் சான்றிதழ் வழங்க தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கிற்கு மத்திய சட்டத்துறை, மாநில உள்துறை செயலாளர்கல், டி.ஜி.பி. உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்ÕÕ என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 22&ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்,
……………..
[9/7, 21:14] Sekarreporter1: தமிழகத்தில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி அமல்படுத்தும் வகையில் திருத்தங்கள் கொண்டு வர அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கி 2016 ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப் பிரிவின் கீழ் 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 சதவீத இடங்களிலும் பெண்கள் போட்டியிடவும் வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டப்பிரிவுகளை எதிர்த்தும், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய நடைமுறையை எதிர்த்தும் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு, முதலில் பெண்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் 30 சதவீத பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கி விட்டு, அதன்பின் சமுதாய ரீதியிலான இடஒதுக்கீட்டை பின்பற்றும் நடைமுறையை தமிழக அரசும், அரசுப் பணியாளர் தேர்வாணையமும் பின்பற்றுவது துரதிருஷ்டவசமானது எனவும், இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதே நடைமுறைப்படி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ரத்து செய்வது முறையாக இருக்காது எனவும், அதேசமயம் தகுதி அடிப்படையில் பணிநியமனம் பெறும் உரிமையை மறுக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முதலில் பொதுப்பிரிவையும், பிறகு சமூக ரீதியிலான இடஒதுக்கீட்டு அடிப்படையிலும் நிரப்பி விட்டு, அதில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பூர்த்தியாகவில்லை என்றால் எத்தனை இடங்கள் நிரப்ப வேண்டுமோ, அத்தனை இடங்களில் பெண்களை நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ஏற்ப எதிர்காலத்தில் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்குகளை முடித்து வைத்தனர்.

You may also like...