madras high court today Feb 13 news

[12/02, 07:27] sekarreporter1: The Hon`ble Mr.Justice G.R.SWAMINATHANCRL OP(MD). No.2228 of 2024S.Gurumoorthi ..Petitioner/Accused No.3 https://sekarreporter.com/the-honble-mr-justice-g-r-swaminathancrl-opmd-no-2228-of-2024s-gurumoorthi-petitioner-accused-no-3/
[12/02, 13:14] sekarreporter1: [12/02, 13:14] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1756947220493131958?t=tQ13AJLWP0jfU7q7Gti-NA&s=08
[12/02, 13:14] sekarreporter1: [12/02, 13:11] Inbadura Former i Mla: சென்னை திருவான்மியூரில் இன்று காலை நடைபெற்ற தமிழக அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் திரு.சோமையாஜி அவர்களின் திருமணப் பொன் விழா நிகழ்வில் @AIADMKOfficial பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

AIADMKAdvocateWing

[12/02, 13:13] sekarreporter1: 🌹🙏🙏
[12/02, 13:52] sekarreporter1: பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு பெண் எஸ். பி.க்கு பாலியல் தொலை அளித்தது தொடர்பான வழக்கை விசாரித்த விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், ராஜேஷ்தாஸ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம், தீர்ப்பு தேதி அறிவித்த நிலையில், பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் இடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவதால், வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கில் தீர்ப்பு தேதி அறிவித்து விழுப்புரம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ராஜேஸ்தாஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் ஆஜராகி, விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த 9ம் தேதி தாக்கல் செய்த மெமோவில், வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தெரிவித்திருந்ததாகவும், ஆனால் அதனை பரீசிலிக்காமல், நீதிபதி இன்று தீர்ப்பை பிறப்பித்து உள்ளதாக வாதிட்டார்.

எனவே விழுப்புரம் நீதிமன்றம் நீதிமன்றம் பிறப்பித்த இந்த தீர்ப்பிற்கு தடைவிதிக்க வேண்டும் என தெரிவித்தார். மனு தள்ளுபடி என்று மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், விரிவான தீர்ப்பை அறிவிக்காததால் ஆவணங்களை வரவழைத்து சரிபார்க்க வேண்டுமென வாதிட்டார்.

ஆனால், விழுப்புரம் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, விழுப்புரம் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தால்தான் ஆவணங்களை பெற்று ஆய்வுசெய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தன் மீதான வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு மீது காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[12/02, 15:44] sekarreporter1: அனுமதியில்லாமல் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கமளிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் மேரீஸ் சாலையில் 10 மாடியில் கட்டப்பட்டுவரும் எம்.ஜி.எம் மருத்துவமனை கட்டுமான பணியில் ஆழ்துளை அஸ்திவாரம் அமைக்கும் பணி காரணமாக, சுற்றுப்புற பகுதியில் கடுமையான ஒலி மாசு ஏற்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை எனவும், உரிய கட்டணம் செலுத்தும்பட்சத்தில் திட்ட அனுமதி வழங்கப்படும் என சி.எம்.டி.ஏ. தரப்பில் தெரிவிக்கபட்டிருந்தது.

இதையடுத்து, எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தொடர்வதற்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியம் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திட்ட அனுமதி இல்லாமல் கடந்த ஜூலை முதல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள எப்படி அனுமதிக்கபட்டது என சிஎம்டிஏ-வுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், சட்டவிரோத கட்டுமானங்களை கண்கானிக்க வேண்டியது மாநகராட்சி பொறுப்பு தான் என தெரிவித்தார்.

இதையடுத்து தாமாக முன்வந்து சென்னை மாநகராட்சி ஆணையரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், கட்டிட அனுமதி பெறாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்பது குறிது விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

மேலும், கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது, ஏற்படும் ஒலி மாசுவை கண்காணிக்க ஏதேனும் நடைமுறை உள்ளதா? இல்லையா? என்பது குறித்து அறிக்கையில் சுட்டிக்காட்டாத தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற நடைமுறைகள் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து மற்றொரு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[12/02, 16:36] sekarreporter1: சோழவரம் அருகே இரு ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றும்படி டிஜிபி-க்கு பரிந்துரைத்திருப்பதாக ஆவடி காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை பாடியநல்லூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பார்த்திபன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய சண்டே சதீஷ், முத்து சரவணன் ஆகியோர் சோழவரத்தை அடுத்த பூதூர் மாரம்பேடு பகுதியில் பதுங்கி இருந்த இருவரையும் பிடிக்க சென்றபோது, தப்பிக்க முயன்றதாக கூறி பூந்தமல்லி காவல் நிலைய துணை ஆணையர் ஜவஹர் தலைமையிலான காவல்துறையினர் என்கன்வுன்டரில் சுட்டுக்கொன்றனர்.

இந்த நிலையில் காவல்துறை நடத்திய என்கவுண்டரில் சந்தேகம் உள்ளது, தனது மகன் தப்பிக்க முயற்சி செய்ததால் தான் சுட்டு கொல்லப்பட்டார் என்று காவல்துறை கூறும் தகவல் தவறு, காவல்துறைக்கு எதிரான வழக்கை அவர்களே விசாரித்தால் உண்மை வெளிவராது போன்ற காரணங்களை கூறி, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என ரவுடி முத்து சரவணனின் தந்தை கோவிந்தராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றும்படி பரிந்துரைத்து தமிழக டிஜிபி-க்கு ஆவடி காவல் ஆணையர் ஜனவரி 18ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதற்கு இன்னும் டிஜிபி-யிடமிருந்து பதில் வரவில்லை என்பதால் வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது.

இதை ஏற்று கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
[12/02, 17:28] sekarreporter1: முறையான அனுமதில்லாமல் தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பது நீதிமன்ற நேரத்தையும், பொதுமக்களின் பணத்தையும் வீணடிப்பதாகும் என்பதால், ஊழல் வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது சரியே என அமைச்சர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக, அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி, கடந்த 2012-ம் ஆண்டு , அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று துவங்கியது. அப்போது, வழக்கில் சாட்சி விசாரணை துவங்கிய பின் விடுவிக்க கோரியது ஏன்? வழக்குப்பதியும் போது குற்றம் சாட்டப்பட்டவர் என்ன பொறுப்பில் இருந்தார்? என்பன உள்ளிட்ட ஐந்து கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இதுசம்பந்தமாக விளக்கம் அளிக்க அறிவுறுத்தினார்.

இதையடுத்து, அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவதற்கு பதில், சபாநாயகரிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இது சட்டப்படி தவறு என்பதால், வழக்கில் சாட்சி விசாரணை துவங்கிய பின் விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்ததாகக் குறிப்பிட்டார்.

அமைச்சர் பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான ஒப்புதலை ஆளுநர் மட்டுமே வழங்க முடியும் என்பதால், முறையான அனுமதில்லாமல் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க முடியாது. அப்படி விசாரிப்பது நீதிமன்ற நேரத்தையும், பொதுமக்களின் பணத்தையும் வீணடிப்பதாகும் எனத் தெரிவித்தார்.

பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளிக்கதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை. அதனால் சபாநாயகரின் ஒப்புதல் சட்டப்படி செல்லாது என்பதால் சிறப்பு நீதிமன்றம் மனதைச் செலுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. அது சரியானது என வாதிட்டார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பு வாதம் முடிவடைந்ததை அடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு வாதங்களுக்காக விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நாளைக்கு தள்ளிவைத்தார்.
[12/02, 18:03] sekarreporter1: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகார் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், முரசொலி அறக்கட்டளையின் மேல்முறையீடு மனு குறித்து பதிலளிக்கவும் தேசிய பட்டியிலினத்தோர் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி-யின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பபட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டிலின ஆணையம் விசாரிக்க முடியாது எனக் கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, விதிகளின்படி புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தரப்பில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மேல்முறையீடு வழக்கு குறித்து தேசிய பட்டியிலினத்தோர் ஆணையம், புகார்தாரர் சீனிவாசன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும் சீனிவாசன் அளித்த புகார் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[12/02, 18:03] sekarreporter1: தாது மணல் கொள்ளை தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் இறுதி விசாரணையை தொடங்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், சட்டவிரோத கடத்தல் விசாரணை அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதாக அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பாக கடந்த 2015ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், தாதுமணல் முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டார். மேலும் நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞரின் அறிக்கையின் அடிப்படையில் இழப்பிட்டு தொகையை வசூலிக்க நடவடிக்கை மேற்கொண்டுவருதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த வாதத்தின்போது நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட
வழக்கறிஞர் வி.சுரேஷ் ஆஜராகி அரசுத் ஆவணங்கள் அடிப்படையில், இரண்டு ஆண்டுகளாக தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இதுவரை மூன்று விரிவான அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த அறிக்கைகளை மத்திய மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள்,
தாது மணல் அள்ள விதிக்கப்பட்ட தடை மற்றும் விசாரணை அறிக்கைகள், சட்டவிரோத கடத்தல் என அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
[12/02, 18:03] sekarreporter1: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகார் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், முரசொலி அறக்கட்டளையின் மேல்முறையீடு மனு குறித்து பதிலளிக்கவும் தேசிய பட்டியிலினத்தோர் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி-யின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பபட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டிலின ஆணையம் விசாரிக்க முடியாது எனக் கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, விதிகளின்படி புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தரப்பில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மேல்முறையீடு வழக்கு குறித்து தேசிய பட்டியிலினத்தோர் ஆணையம், புகார்தாரர் சீனிவாசன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும் சீனிவாசன் அளித்த புகார் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[12/02, 18:52] sekarreporter1: Mr. Wilson said that the commission is not a civil court that can declare title. In such view of the matter, the Hon’ble Bench orally directed the ASG Mr. ARL Sundaresan not to proceed with the case and ordered notice returnable by 14.3.2024. The ASG undertook to inform the commission. Mr P. Wilson also submitted before the court that he will also write to the commission about the oral directives by the court to ASG not to precipitate the matter. https://sekarreporter.com/mr-wilson-said-that-the-commission-is-not-a-civil-court-that-can-declare-title-in-such-view-of-the-matter-the-honble-bench-orally-directed-the-asg-mr-arl-sundaresan-not-to-proceed-with-the-case/
[12/02, 19:03] sekarreporter1: [12/02, 19:00] sekarreporter1: Nalini murugan case full order judge ktishnakumar and judge danapal for mutugan adv V elangovalen https://sekarreporter.com/nalini-murugan-case-full-order-judge-ktishnakumar-and-judge-danapal-for-mutugan-adv-v-elangovalen/
[12/02, 19:00] sekarreporter1: im to leave the country at his own cost.
For Petitioner : Mr.V.Elangovan
For R1 : Mr.AR.L.Sundaresan
Asst Solicitor General for Mr.K.Subburanga
CGC
For R2 : Mr.S.Rajakumar
Additional Public Prosecutor
For R3 & R4 : Mr.P.Baladhandayutham
Special Government Pleader
[12/02, 19:07] sekarreporter1: சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு போட்டிகளில் மதுபானங்கள் வினியோகிக்க கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே சிறப்பு உரிமம் வழங்கப்படும் எனவும், நிபந்தனைகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் முன்வைப்புத் தொகையும் முடக்கப்படும் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

விளையாட்டு போட்டிகளில் மதுபானம் வழங்குவதற்கு அனுமதி வழங்கும் அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் பாலு தாக்கல் செய்த வழக்கில், தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை தரப்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு, தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள், சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளின் போது மதுபானம் விநியோகிக்க வேண்டியது அவசியம் என கோரிக்கை விடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகளை பரிசீலித்து சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் மதுபானம் விநியோகிப்பதற்கு சிறப்பு உரிமம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக கூடுதல் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு உரிமத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், சர்வதேச கருத்தரங்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பொதுமக்கள் பார்வைக்கு அப்பால் தனி இடத்தில் மட்டுமே மதுபானம் வழங்கப்பட வேண்டும், சிறப்பு உரிமம் கோரி ஏழு நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும், எவ்வளவு மதுபானம் வழங்குவயு என டாஸ்மாக் நிர்வாகம் தான் தீர்மானிக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு கடும் நிபந்தனைகள் விதிக்கப்படும் என கூடுதல் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நிபந்தனைகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க சிறப்பு படைகள் அமைக்கப்படும் எனவும், நிபந்தனைகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் முன்வைப்புத் தொகையும் முடக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் பதில் மனுவுக்கு பதில் அளிக்கும்படி மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, விசாரணையை மார்ச் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
[12/02, 19:45] sekarreporter1: கூடுதல் விலைக்கு பேப்பர் கொள்முதல் செய்து, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த வழக்கில், எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து, மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில், 2006-, 2007 இடைப்பட்ட காலத்தில், 5 மெட்ரிக் டன் பேப்பர் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த பேப்பர்கள் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்து, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகப் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தமிழக எழுது பொருள் மற்றும் அச்சுத்துறையின் அப்போதைய கமிஷனர் கே.சம்பத்குமார் ஐ.ஏ.எஸ்., உள்பட எட்டு பேருக்கு எதிராக, 2012ல் வழக்குப்பதிவு செய்தது. இவற்றில், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலர் ரகுபதி,68 என்பவர் மீதான வழக்கு விசாரணை மட்டும், சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.மணிமேகலை முன் நடந்து வந்தது.

போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கே.உஷாராணி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி,’ ரகுபதி மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவருக்கு, இரண்டு சட்டப் பிரிவுகளில் தலா ஓராண்டு சிறை தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்தத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.

You may also like...