madras high court today Feb 16 news

[15/02, 07:25] sekarreporter1: Madras high court Feb 15th order news https://sekarreporter.com/madras-high-court-feb-15th-order-news/
[15/02, 07:25] sekarreporter1: https://youtu.be/SuqxStyDVGQ?si=neIfWSn1Mu3BSJHy smsj bemch
[15/02, 07:52] sekarreporter1: https://youtu.be/Iiaw-1SPprg?si=LA8J_7Bnc_hhmoh0
[15/02, 10:10] sekarreporter1: பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் ஜாமின் கோரி மனு நீதிபதி நிர்மல்குமார் item 16
[15/02, 11:17] sekarreporter1: [15/02, 11:17] sekarreporter1: 🙏
[15/02, 11:17] sekarreporter1: BREAKING: ELECTORAL BONDS Judgment

  • POLITICAL PARTIES DIRECTED TO REFUND ALL AMOUNTS RECEIVED
  • Finance act 2015 amendments enabling scheme unconditional, Apex court says
  • State Bank of India to HEREWITH IMMEDIATELY STOP issuing electoral bonds, And issue details of the political parties that received electoral bonds and all the particulars received to Election Commission by March 6
  • By March 13 ECI shall publish it on official website
  • Political parties to thereafter refund the Electoral bonds amount to the purchasers account
    [15/02, 11:19] sekarreporter1: தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றி அமைத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்துசெய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க பத்திரப்பதிவுத் துறை தலைவர் தலைமையில் மதிப்பீட்டுக் குழு செயல்பட்டுவருகிறது.

2023-24ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் உரையில், சொத்துக்களின் விலை அதிகரித்துள்ளதால் வழிகாட்டி மதிப்பீட்டை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், மதிப்பீட்டுக் குழு வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயிக்க கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்பதால், தற்காலிக நடவடிக்கையாக 2017ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி வரை அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீடு அடிப்படையில் மதிப்பீடு நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் தொடர்ச்சியாக, 2017ல் அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், புதிய மதிப்பீட்டை நிர்ணயித்து 2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென 2023 மார்ச் 30ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து கிரடாய் மற்றும் 3 கட்டுமான நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விதிகளின்படி துணைக் குழுக்கள் அமைத்து, அறிக்கைகள் பெற்று, அவற்றை ஆய்வுசெய்து, பொதுமக்கள் கருத்துகளை பெற்று அதன்பிறகே வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க முடியும் என்ற சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, சுற்றறிக்கையை ரத்துசெய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, கிரடாய் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
[15/02, 11:28] sekarreporter1: [15/02, 11:28] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1758007749852664209?t=b5UsOBFi4dxAXMkQEYgm3Q&s=08
[15/02, 11:28] sekarreporter1: தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றி அமைத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்துசெய்த உத்தரவுக்கு இடைக்கால தடை
[15/02, 11:28] sekarreporter1: Gov appeal single judge order stayed by smsj rajasekar j bench
[15/02, 12:13] sekarreporter1: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ.-வின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரின் ஜாமீன் மனுவுக்கு காவல்துறை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் பதிலளிக்க
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன்,  அவரது மனைவி மர்லினா  ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில்  ஜனவரி 25ம் தேதி தனிப்படை போலீசாரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட இருவரும், நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே,  ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இருவரும் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து காவல்துறை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் பதிலளிக்க
உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை பிப்ரவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

பாதிக்கப்பட்ட பெண் அன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் நிதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[15/02, 12:21] sekarreporter1: தமிழ் வளர்ச்சி க்கு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு திருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என தெரிவித்துள்ளது.

உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் சி. கனகராஜ் தாக்கல் செய்திருந்த மனுவில், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட கீழமை நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க உத்தரவிட வேண்டும், தமிழ் மொழி மேம்பாடு குறித்து ஆய்வுகள் நடத்த அறிஞர்கள் அடங்கிய நிரந்தர குழுவை அமைக்க வேண்டும், அரபிய எண் முறைக்கு பதில் தமிழ் எண் முறையை அமல்படுத்த வேண்டும், அரசாணைகளை தமிழில் வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்திருந்தார்.

இந்த வழக்கு முதன்மை அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழ் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவதாகவும், தமிழ் ஆண்டு, தமிழ் மாதம் இவற்றை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தது.

தமிழ் ஆராய்ச்சிக்காக உலக தமிழ் ஆராயச்சி நிறுவனத்தால் 2013ஆம் ஆண்டு 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், அதன்பிறகும் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பள்ளி கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள் நடத்தப்படுவது, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது, கீழமை நீதிமன்றங்களில் சாட்சியங்களை தமிழில் பதிவு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது போன்றவற்றையும் சுட்டிகாட்டப்பட்டது.

தமிழ் ஆராய்ச்சிக்கென 1971ஆம் ஆண்டிலேயே தமிழ் மொழி வளர்ச்சி இயக்குனரகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள், நிதி உதவிகள் வழங்கப்படுவதாகவும், தமிழ் வளர்ச்சித் துறையில் 2019-20ஆம் ஆண்டில் 70 கோடியே 91 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதில் 65 கோடியே 48 லட்ச ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாகவும், 2020-21ஆம் ஆண்டில் 63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதில் 53 கோடியே 86 லட்ச ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு
தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் திருப்தி தெரிவித்து, இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை என வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்..
[15/02, 12:40] sekarreporter1: [15/02, 12:39] sekarreporter1: தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் விவரங்களை வெளியிடுங்க – உச்ச நீதிமன்றம்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இதுவரை கட்சிகள் எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து நிதிகளை பெற்றது என்ற விவரங்கள் வெளியாகும்

SupremeCourt #ElectrolBond #உச்சநீதிமன்றம்

[15/02, 12:39] sekarreporter1: 🙏
[15/02, 12:40] sekarreporter1: [15/02, 11:54] sekarreporter1: Savuku sanker விடுதலை எதிர்த்து tn gov appeal judge normal kar order notice ,2 weeks
[15/02, 11:54] sekarreporter1: டேப் வழக்கு
[15/02, 13:51] sekarreporter1: [15/02, 13:50] sekarreporter1: https://youtube.com/shorts/wCpyaQu6thY?si=o7N0InGcaQUL0vJJ
[15/02, 13:50] sekarreporter1: Sc
[15/02, 13:52] sekarreporter1: https://youtu.be/hmFfYjm_b0U?si=wusA54j2yqso6ulT
[15/02, 13:54] sekarreporter1: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், மக்கள் கடமையாற்றுவதற்கான உடற்தகுதியை பெற்றிருக்கின்றனரா என கேட்க முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, சொத்து விவரம், குற்ற வழக்குகள் பற்றிய தகவல்களை தாக்கல் செய்வதோடு, 30 நாட்களுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு அறிவுறுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பையா என்பவர் 2016ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், வேட்பாளர்களின் உடல் நிலை குறித்து பரிசோதனை அறிக்கை என்பது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட அந்தரங்க விஷயம் என்பதால், அந்த விவரங்களை கேட்க முடியாது என விளக்கமளித்தார்.

மேலும், இதுசம்பந்தமாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டுமானால், அதுகுறித்து சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், தான் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதியின் உடல் நிலையை தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது எனவும், மருத்துவ காப்பீடு பெற மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை அளிக்கும் நிலையில், வேட்பாளர்களுக்கு ஏன் வலியுறுத்தக் கூடாது என வாதிட்டார்.

இதையடுத்து, வேட்பாளருக்கு இருக்கும் நோய்கள் பற்றி தெரிவிக்கும்படி வற்புறுத்த முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், அரசியல் சாசன பதவிகளை வகிப்பவர்கள், உடற்தகுதி சான்று சமர்ப்பிக்க வேண்டியுள்ளது என்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கடமையாற்றுவதற்கான உடற்தகுதியைப் பெற்றிருக்கிறார்களா என்பது குறித்த சான்றை பெறலாம் என யோசனை தெரிவித்தனர்.

பின்னர், உடற்தகுதி சான்றை சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்கும்படி தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[15/02, 17:01] sekarreporter1: செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் எந்த ஆதாரத்தையும் திருத்தவில்லை என அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜி தரப்பு வாதத்துக்கு பதிலளித்து, அமலாக்கத் துறை தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிட்டார்.

அப்போது அவர், போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, பதவிக்கு ஏற்றவாறு, 2 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை என மொத்தம், 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு மூன்று வழக்குகள் தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், சென்னை எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறபு நீதிமன்றத்தில் உள்ளன. அந்த ஆதாரங்கள், உயர் நீதிமன்ற உத்தரவின்படி மட்டுமே அமலாக்கத் துறை பெற்றது. அந்த ஆதாரங்கள் திருத்தப்படவில்லை என விளக்கினார்.

முந்தைய ஜாமீன் மனு தள்ளுபடிக்கு பிறகு வழக்கில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதுவும் ஜாமீன் மனு விசாரணை துவங்குவதற்கு ஒரு நாள் முன் தான் ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் இன்னமும் அவர் செல்வாக்கான நபராகவே உள்ளார். ஏற்கனவே பணம் கொடுத்தவர்களிடம் செந்தில் பாலாஜி சமரசம் செய்திருக்கிறார். வழக்கில் சாட்சிகள் இன்னும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்க கூடும். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சண்முகம், சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.

வழக்கில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை. அவை 2020ல் பெறப்பட்டு, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அமலாக்க துறை எந்த ஆதாரத்தையும் உருவாக்கவும் இல்லை; திருத்தவும் இல்லை. மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கு ஆவணங்களை மட்டுமே நம்பியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

வருமான வரி செலுத்தி விட்டால் மட்டும் போதாது. 10 ஆண்டுகள் 68 லட்சம் ரூபாய் ஊதியமாக பெறப்பட்டுள்ளது. அது ரொக்கமாக டிபாசிட் செய்யப்படாது. சட்டவிரோத பண பரிமாற்றம் என்பது ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் மட்டும் அல்ல. மீதமுள்ள தொகை மறைக்கப்பட்டுள்ளது என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.

30 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் ஜாமீனில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்ப எந்த காரணமும் இல்லை. சாட்சி விசாரணை துவங்க அமலாக்க துறை தயாராக உள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதத்தை நிறைவு செய்தார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு பதில் வாதத்துக்காக வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

…..
[15/02, 17:01] sekarreporter1: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரை நாளை நேரில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த  வழக்கில் ஜனவரி 22ம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,  போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை துவங்க கூடாது என்றும், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.அல்லி முன்பு நடைபெற்ற போது செந்தில் பாலாஜி சார்பில், மத்திய குற்றப்பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்க்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்ததே செல்லாததாகிவிடும் என கூறினார்.

இதற்கு அமலாக்கத் துறை சார்பில், வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பதில் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி எஸ். அல்லி செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார். மேலும், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்ப்படுத்தவும் உத்தரவிட்டார்.

அப்போது, இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்கக்கோரி மெமோ தாக்கல் செய்வதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் செந்தில் பாலாஜி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மெமோவை பெற்றுக்கொள்வதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த நீதிபதி பின்னர் மெமோவை தற்போது பெற்றுக்கொள்வதாகவும் அதன் மீது பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபதி எஸ்.அல்லி கூறினார்.
[15/02, 21:32] sekarreporter1: https://youtu.be/9W6jU0YOUsI?si=sd82ipWL6UZNtouq
[15/02, 21:46] sekarreporter1: https://youtu.be/G-thprh9S_g?si=TP1hfN-eX1gzvMIq
[15/02, 21:48] sekarreporter1: https://youtu.be/OEo2uOZxWaQ?si=fyEuy8G1-y6djzdZ

You may also like...