Madras high court today Feb 18 th news

[17/02, 08:11] sekarreporter1: madras high court today Feb 18 news orders https://sekarreporter.com/madras-high-court-today-feb-18-news-orders/
[17/02, 08:17] sekarreporter1: https://youtu.be/uix7LyhQt2s?si=EFJgTmFs_4L36_cR
[17/02, 08:25] sekarreporter1: The Madras High Court has quashed the revision order passed under the Tamil Nadu Goods and Service Tax Act (TNGST Act) against Renault Nissan for travelling beyond the scope of revision proceedings.The bench of Justice Senthilkumar Ramamoorthy has quashed the revision order and remanded the matter for reconsideration. The respondent department was directed to provide a reasonable…
[17/02, 08:29] sekarreporter1: https://youtu.be/qLCrnIH-T4E?si=Jslpuj89BBbdYIn6
[17/02, 08:53] sekarreporter1: [17/02, 08:52] sekarreporter1: Madras HC stays parallel proceedings by the State Authorities on the same subject matter for which audit was already concluded by the Central Authorities. Also observes follow up action for subsequent years should be taken only by jurisdictional authorities, by relying on GST Council instructions.
[17/02, 08:52] sekarreporter1: Appeal against cancellation of GST registration dismissed on the ground of delay. HC intervenes and directs the appellate authority to consider the issue on merits.
[17/02, 14:05] sekarreporter1: வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை அறிவிக்கும் வரை, தமிழகத்தில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்க தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றச் செயல்கள், பாதுகாப்பு மீறல்களுக்காக வாகனங்களின் நம்பர் பிளேட்கள் தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக, அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் பொருத்துவதை கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி, 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு பின் அனைத்து புதிய வாகனங்களிலும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் பொருத்தப்படுகின்றன. அதற்கு முந்தைய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களை உற்பத்தி செய்யவும், விற்கவும் பல்வேறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. மத்திய அரசு அங்கீகரித்துள்ள இந்த நிறுவனங்களை, மாநிலங்களில் நியமித்து மாநில அரசு அறிவிக்க வேண்டும்.

மத்திய அரசு உத்தரவிட்டு, ஐந்து ஆண்டுகளாகியுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை எந்த நிறுவனங்களையும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் உற்பத்தி நிறுவனங்களாக தமிழக அரசு அறிவிக்கப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் பொருத்தவில்லை என காவல் துறையினர் அபராதம் விதிப்பதால், அங்கீகாரமில்லாத நிறுவனங்களில் நம்பர் பிளேட்கள் பொருத்தப்படுவதாகவும், இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க, உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் நிறுவனங்களை அறிவிக்க கோரி தமிழக அரசுக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை வாகனங்களுக்கு அபராதம் விதிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்காபுர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, மார்ச் 26ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
[17/02, 14:05] sekarreporter1: புதுச்சேரி வேல்ராம்பட்டு பகுதியில் அமைக்கப்படும் கழிவுநீர் சேகரிப்பு கிணறு திறந்தநிலையில் அமைக்கப்படாது என அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள வேல்ராம்பட்டில் 2000ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பொறியாளர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள திறந்தவெளி நிலத்தில், கோவில், போர்வெல், நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்டவை அமைந்துள்ள நிலையில், அதன் அருகில் 3 மீட்டர் விட்டத்தில், 5 மீட்டர் ஆழத்தில் கழிவு நீர் சேகரிப்பு கிணறு அமைக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டது.

இந்த நிலையில் குடியிருப்பு பகுதியை ஒட்டி திறந்தவெளி கழிவுநீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்படுவதை எதிர்த்து புதுச்சேரி வேல்ராம்பட்டு பொறியாளர்கள் காலனி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

குடியிருப்பு பகுதி மட்டும்லலாமல், பூங்கா, கோவில், நீர்த்தேக்கத் தொட்டி, ஆழ்துளை கிணறு ஆகியவை உள்ள நிலையில், அரசிடம் உரிய அனுமதி பெறாமல் பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரி அரசு தரப்பில் திறந்தவெளி கழிவுநீர் சேகரிப்பு கிணறு அமைக்கவே முதலில் விண்ணப்பிக்கப்பட்டதாகவும், பின்னர் மூடிகளுடன் கூடிய திட்டமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கழிவு நீர் கசிவு, நிலத்தடி நீர் பாதிப்பு அகியவை ஏற்படாத வகையில் அமைக்க வேண்டுமென மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கழிவுநீர் சேகரிப்பு கிணறு அமைப்பது ஒரு தனிநபரின் நலனுக்காக அல்ல என்றும், அப்பகுதியில் வசிப்பவர்களின் நலன் கருதி அமைக்கப்படுவது அவசியமானது என குறிப்பிட்டுள்ளனர். இந்த கழிவுநீர் சேகரிப்பு கிணறு தவிர வேறு எந்த விதமான கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது எனவும், மீதமுள்ள பகுதி பூங்கா அல்லது திறந்தவெளி நிலமாக பாதுகாக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர்.
[17/02, 16:50] sekarreporter1: பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டப்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூர் புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், 2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், பஞ்சாலைகள், டெக்ஸ்டைல் மற்றும் ஸ்பின்னிங் மில்களில் பணியாற்றும் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி வருவதால், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொழிற்சாலைகள், ஸ்பின்னிங் மில் மற்றும் வேறு பணியிடங்களில் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடக் கோரி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி என்பவர் கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில், பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டப்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூர் புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அதிகாரி கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த குழுக்கள், புகார்களை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

மேலும், 10 தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களில் உள் விசாரணைக்குழு எனப்படும் விசாகா குழு அமைக்கவும் அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 22ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

[17/02, 17:02] sekarreporter1: குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படும் வழக்குகளை ஆராய்வதற்காக மாவட்டம் மற்றும் மாநகர அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அந்த வழக்குகளில் இருந்து நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், அந்த வழக்குகளை ஆய்வு செய்ய காவல்துறை மற்றும் குற்றத் தொடர்வுத் துறை மூத்த அதிகாரிகளை கொண்ட குழுக்களை அமைக்க வேண்டுமென 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் அனைத்து மாநிலங்களின் காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் உள்ள குறைகளை கண்டறியவும், இளம் அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி அளிக்கவும், வழக்கை திறம்பட எடுத்துச் செல்லாத காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் விதிமுறைகளை உருவாக்க வேண்டுமென அந்த தீர்ப்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு இருந்தன.

உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல்களை அமல்படுத்தும்படி தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் வி.நடராஜன் 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி தரப்பில், உதவி ஐ.ஜி.-யான எஸ்.சக்தி கணேசன் தாக்கல் செய்த அறிக்கையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு அரசின் அறிவுறுத்தலின்படி காவல் துறை மற்றும் குற்ற வழக்கு தொடர்வு துறை ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் மாவட்டம் மற்றும் மாநகர அளவில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட வழக்குகள் மறு ஆய்வு செய்யப்பட்டு, திறம்பட செயல்படாத 13 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

காவல்துறை அளித்த அறிக்கையில் இருந்து, மனுதாரர் கோரிக்கை நிறைவேறியுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
[17/02, 18:01] sekarreporter1: வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை அறிவிக்கும் வரை, தமிழகத்தில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்க தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றச் செயல்கள், பாதுகாப்பு மீறல்களுக்காக வாகனங்களின் நம்பர் பிளேட்கள் தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக, அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் பொருத்துவதை கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி, 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு பின் அனைத்து புதிய வாகனங்களிலும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் பொருத்தப்படுகின்றன. அதற்கு முந்தைய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களை உற்பத்தி செய்யவும், விற்கவும் பல்வேறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. மத்திய அரசு அங்கீகரித்துள்ள இந்த நிறுவனங்களை, மாநிலங்களில் நியமித்து மாநில அரசு அறிவிக்க வேண்டும்.

மத்திய அரசு உத்தரவிட்டு, ஐந்து ஆண்டுகளாகியுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை எந்த நிறுவனங்களையும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் உற்பத்தி நிறுவனங்களாக தமிழக அரசு அறிவிக்கப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் பொருத்தவில்லை என காவல் துறையினர் அபராதம் விதிப்பதால், அங்கீகாரமில்லாத நிறுவனங்களில் நம்பர் பிளேட்கள் பொருத்தப்படுவதாகவும், இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க, உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் நிறுவனங்களை அறிவிக்க கோரி தமிழக அரசுக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை வாகனங்களுக்கு அபராதம் விதிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்காபுர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, மார்ச் 26ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
[17/02, 18:01] sekarreporter1: பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டப்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூர் புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், 2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், பஞ்சாலைகள், டெக்ஸ்டைல் மற்றும் ஸ்பின்னிங் மில்களில் பணியாற்றும் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி வருவதால், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொழிற்சாலைகள், ஸ்பின்னிங் மில் மற்றும் வேறு பணியிடங்களில் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடக் கோரி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி என்பவர் கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில், பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டப்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூர் புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அதிகாரி கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த குழுக்கள், புகார்களை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

மேலும், 10 தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களில் உள் விசாரணைக்குழு எனப்படும் விசாகா குழு அமைக்கவும் அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 22ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
[17/02, 18:01] sekarreporter1: குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படும் வழக்குகளை ஆராய்வதற்காக மாவட்டம் மற்றும் மாநகர அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அந்த வழக்குகளில் இருந்து நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், அந்த வழக்குகளை ஆய்வு செய்ய காவல்துறை மற்றும் குற்றத் தொடர்வுத் துறை மூத்த அதிகாரிகளை கொண்ட குழுக்களை அமைக்க வேண்டுமென 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் அனைத்து மாநிலங்களின் காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் உள்ள குறைகளை கண்டறியவும், இளம் அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி அளிக்கவும், வழக்கை திறம்பட எடுத்துச் செல்லாத காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் விதிமுறைகளை உருவாக்க வேண்டுமென அந்த தீர்ப்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு இருந்தன.

உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல்களை அமல்படுத்தும்படி தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் வி.நடராஜன் 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி தரப்பில், உதவி ஐ.ஜி.-யான எஸ்.சக்தி கணேசன் தாக்கல் செய்த அறிக்கையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு அரசின் அறிவுறுத்தலின்படி காவல் துறை மற்றும் குற்ற வழக்கு தொடர்வு துறை ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் மாவட்டம் மற்றும் மாநகர அளவில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட வழக்குகள் மறு ஆய்வு செய்யப்பட்டு, திறம்பட செயல்படாத 13 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

காவல்துறை அளித்த அறிக்கையில் இருந்து, மனுதாரர் கோரிக்கை நிறைவேறியுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
[17/02, 18:01] sekarreporter1: மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெட்ரோல் விற்பனை நிலையங்களின் உரிமம் வழங்குவதற்கு முன் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் பாதுகாப்பு அமைப்பு நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வி.பி.ஆர் மேனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அதற்கான இடங்களில் அமைக்கப்பட வேண்டும். எண்ணெய் கசிவுகளால் புற்றுநோய் மற்றும் மூளை தொடர்பான நோய்கள் வர வாய்ப்புள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.

தமிழக அரசிடம் இருந்து பாதுகாப்பு தொடர்பான தடையில்லாத சான்றை பெற்ற பின்னர் மத்திய அரசின்
பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பிடம் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெற மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்களில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் அமைக்க வேண்டும், தீயணைப்பு வாகனங்கள் செல்ல இட வசதி அருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் பல விற்பனை நிலையங்கள், மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்கியதாக போலியான ஆவணங்களை சமர்பித்து பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பிடம் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. அதனால் மத்திய அமைப்பு நேரடி ஆய்வு செய்த பின் உரிமம் வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, விதிகளின் படி மாநில அரசு நேரடி ஆய்வு செய்ய வேண்டும் எனவும், மத்திய அரசு அமைப்பு ஆவணங்களை ஆய்வு செய்து உரிமம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வழக்கறிஞர் ஆனந்த் நட்ராஜன் ஆஜராகி குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிமம் வழங்குவதற்கு முன் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் பாதுகாப்பு அமைப்பு ஆவணங்களுடன் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

எல்லா நிறுவனங்களையும் நேரில் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால், சந்தேகம் உள்ள விற்பனை நிலையங்களை மட்டும் ஆய்வு செய்யலாம். மாவட்ட நிர்வாகத்தால் தடையில்லாத சான்று பெற்ற நிறுவனங்களின் உண்மை தன்மையை மீண்டும் ஆய்வு செய்யலாம். மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் படி வருவாய் அதிகாரிகள் கட்டாயம் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

You may also like...