MadrasHigh court order round up june 3

[6/4, 07:25] sekarreporter1: சென்னை சாலைகளில், லேன் ஒழுங்குமுறைகளை அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலைகளில் கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்வதற்காக தனித்தனி லேன்கள் எனப்படும் வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த லேன் ஒழுங்குமுறைகளை பின்பற்றாததால் விபத்துகள் அதிகரித்துள்ளதாக கூறி, சென்னையைச் சேர்ந்த குமாரதாஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், சென்னை மாநகரம், உலகளவில் அதிக எண்ணிக்கையில் இரு சக்கர வாகன இயக்கப்படும் நகரமாக உள்ளதாகவும், சென்னை சாலைகளில், லேன் ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஒதுக்கப்பட்ட வழியில் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதில்லை எனவும், இதுசம்பந்தமாக அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலைகளில் லேன் ஒழுங்குமுறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வு, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை ஜூன் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
[6/4, 07:25] sekarreporter1: சென்னை, ஜூன் 4: சொத்து தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கொளத்தூர் காமராஜர் நகரில் வசித்தவர் பழனி. திருமணமானவர். இவரது தம்பி தமிழ் செல்வன் திருமணமாகாதவர். இவர் கீழ் தளத்திலும் பழனி மேல் தளத்திலும் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2021 பிப்ரவரி 8ம் தேதி பழனி கீழ் தளத்தில் காம்பவுண்ட் அருகில் உள்ள பைப்பில் தண்ணீர் பிடிக்க வந்துள்ளார். அப்போது அவரை தமிழ் செல்வன் திட்டியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தமிழ் செல்வன் தான் வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் பழனியின் வலது மார்பில் குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த மனைவி கவிதாவையும் தமிழ் செல்வன் தாக்கியுள்ளார்.சிறிது நேரத்தில் பழனி இறந்துள்ளார்.
இதையடுத்து தமிழ் செல்வனை கைது செய்த கொளத்தூர் போலீசார் அவர் மீது கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய சாட்சிகள் மற்றும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் தமிழ் செல்வனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
[6/4, 07:25] sekarreporter1: விழுப்புரம் அருகே டெண்டர் ஒதுக்கப்படாத பகுதிகளில் கருவேல மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரத்தை சேர்ந்த திலீப்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் முட்ராம்பட்டு ஏரியில் 6 ஹெக்டேரில் வளர்ந்திருந்த கருவேல மரத்தை அகற்றுவதற்கான டெண்டரை சுப்ரமணி எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

டெண்டர் எடுத்த பகுதியை விட்டுவிட்டு, வேறு இடத்தில் 52 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள 30 லட்ச ரூபாய் மதிப்பிலான கருவேல மரங்களை வெட்டத் துவங்கியுள்ளதாகவும், இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏலம் எடுத்த இடத்தை தவிர மற்ற இடங்களில் கருவேல வெட்ட தடை விதிக்கவும், சுப்ரமணி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், சில இடங்களில் பொதுப்பணித் துறையே மரங்களை வெட்டியுள்ளது என்றும், சுப்ரமணிக்கு ஒதுக்கப்பட்ட ஒப்பந்ததின் அவகாசம் ஆகஸ்ட் மாதம் வரை உள்ள நிலையில், அவர் இன்னும் வெட்ட தொடங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஏலம் எடுக்காத பகுதியில் வெட்டப்படுகிறதா என்பதை கண்காணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, டெண்டர் ஒதுக்கப்பட்ட பகுதியை தவிர்த்து, மற்ற பகுதிகளில் மரம் வெட்டினால் நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை என அறிவுறுத்திய நீதிபதிகள், ஏலம் எடுக்காத பகுதிகளில் மரம் வெட்டுவதை தடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு முடித்துவைத்தனர்.
[6/4, 07:25] sekarreporter1: சொத்து தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை கொளத்தூர் காமராஜர் நகரில் வசித்தவர் பழனி. அவருக்கும், அவரது தம்பி தமிழ்செல்வனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது, தமிழ் செல்வன், கத்தியால் பழனியின் குத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த பழனியின் மனைவி கவிதாவையும் தமிழ் செல்வன் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த பழனி இறந்துவிட்டார்.

இதையடுத்து தமிழ் செல்வனை கைது செய்த கொளத்தூர் போலீசார், அவர் மீது கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி விசாரித்தார். அரசு தரப்பில் மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய சாட்சிகள் மற்றும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் தமிழ் செல்வனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

You may also like...