mba case smsj order

a

  1. சென்னை ஐகோர்ட்டில், பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆங்கிலேய வக்கீல்களால் மெட்ராஸ்

    பார்

    அசோசியேசன் என்ற சங்கம் தொடங்கப்பட்டது. இதில், இங்கிலாந்தில் சட்டம் படித்த இந்தியர்கள் சிலரும் ஆரம்ப காலத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். 1951-ம் ஆண்டுக்கு பின்னர், ஆங்கிலேயர்கள் யாரும் இல்லாததால், மூத்த வக்கீல்கள் உள்ளிட வக்கீல்கள் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த சங்க அலுவலகத்தில், கடந்த 2012-ம் ஆண்டு வக்கீல் யானை ராஜேந்திரனின் மகன் வக்கீல் நீல்ரஷன் என்பவர் தண்ணீர் குடிக்க சென்றுள்ளார். அங்கிருந்த மூத்த வக்கீல் பி.எச்.பாண்டியன், அவரை தடுத்ததாக கூறப்படுகிறது.சட்டப்படி நடவடிக்கைஇதுகுறித்து, சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளரிடம்,  யானை ராஜேந்திரன் புகார் மனு கொடுத்தார். பின்னர், இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார்.அதேபோல, வக்கீல் ஏ.மோகன்தாஸ், மெட்ராஸ் பார் அசோசியேஷனில் எஸ்.சி., எஸ்.டி., வக்கீல்களை உறுப்பினர்களாக சேர்ப்பது இல்லை. இந்த பிரிவினர் சுமார் 7 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த நான் உறுப்பினராக சேர்க்கும்படி கொடுத்த விண்ணப்பமும் 2010-ம் ஆண்டு முதல் பரிசீலிக்கப்பட வில்லை’’ என்று கூறியிருந்தார்.அதேபோல, வக்கீல் எஸ்.மகாவீர் சிவாஜியும் வழக்கு தொடர்ந்தார்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, 101 பக்கங்கள் கொண்ட பரபரப்பு தீர்ப்பை நேற்று வழங்கினார். அதில் நீதிபதி கூறியிருப்பதாவது:-வக்கீல்கள் மத்தியில் பொருளாதார நிலை உள்ளிட்டவைகளின்  அடிப்படையில்  பாகுபாட்டை ஏற்படுத்தினால், அது திறமையான இளம் வக்கீல்கள் நம்பிக்கை இழந்து, இந்த துறையை விட்டே சென்று விடும் நிலை ஏற்பட்டு விடும். இளம் வக்கீல்களுக்கு அறிவுரை, யோசனைகளையும் மட்டும் வழங்கினால் போதாது, அவர்களுக்கு மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.  மனுதாரர் யானை ராஜேந்திரனின் மகன் வக்கீல் நீல்ரஷன் விபத்தில் மரணம் அடைந்து விட்டார். வயோதிக காரணமாக மூத்த வக்கீல் பி.எச்.பாண்டியனும் மறைந்து விட்டார்.ஒரு மனிதனுக்கு நடந்த சமூக தீமைகள், அவன் மரணத்துடன் மடிந்து விடுவது இல்லை. இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இது எதிர்காலத்திலும் நடைபெறாதபடி தடுக்க வேண்டும். மனிதர்களிடைய பாகுபாடு இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

எனவே, 2012-ம் ஆண்டு நடந்த வருந்தத்தக்க நிகழ்வுக்காக ரூ. 5 லட்சத்தை இழப்பீடாக யானை ராஜேந்திரனுக்கு மெட்ராஸ் பார் அசோசியேசன் வழங்க வேண்டும். மனுதாரர்கள் மோகன்தாஸ், மகாவீர் சிவாஜி ஆகியோர் ஒரு வாரத்துக்குள் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.உறுப்பினர்களாக சேர விரும்பும் அனைத்து வக்கீல்களுக்கும், சாதி, மதம், பொருளாதார நிலை, சீனியர் வக்கீலின் ஜூனியர், அரசியல் என்று எந்த ஒரு பாகுபாட்டையும் பார்க்காமல், அதற்குரிய விண்ணப்பத்தை வழங்க வேண்டும்.இதற்காக கொடூரமான சங்க விதிகளை காரணம் காட்டி, விண்ணப்பம் வழங்க மறுக்கக்கூடாது.மேலும், இந்த சங்க அலுவலம் ஐகோர்ட்டில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் உயர் பாதுகாப்பு பகுதியில் உள்ளதால், இங்கு பிறந்தநாள் விழா உள்ளிட்டவைகளுக்காக விருந்து நிகழ்ச்சி நடத்தினால், அதற்கு ஐகோர்ட்டு தலைமை பதிவாளரிடம் முறையான அனுமதியை பெற வேண்டும்.இந்த சங்க அலுவலகத்தை இந்த உயர் பாதுகாப்பு பகுதியில் இருந்து வெளியேற்றி வேறு ஒரு இடத்தை ஒதுக்குவது என்பது ஐகோர்ட்டின் பதிவுத்துறை அதிகாரித்துக்கு உட்பட்டது. எனவே, இதுகுறித்து முடிவு செய்ய தலைமை நீதிபதி முன்பு அனைத்து விவரங்களையும் தலைமை பதிவாளர் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்.இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

You may also like...