விளையாட்டு வீரர் சலுகையை ஒரு முறைதான் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்த முடியாது. இதுகுறித்து தெளிவான விதிமுறைகளை உருவாக்கி புதுச்சேரி அரசு வெளியிட வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறேன். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார் ………………….

சென்னை, செப்.13-

சென்னை ஐகோர்ட்டில், புதுச்சேரியை சேர்ந்த சிவசக்தி என்ற மாணவி தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த கல்வி ஆண்டில் நீட் தேர்வு எழுதி, விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் பல்மருத்துவத்தில் எனக்கு இடம் கிடைத்தது. தற்போது நடப்பு கல்வியாண்டில் நீட் தேர்வு எழுதினேன். விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் எம்.எம்.பி.எஸ். படிப்புக்கான ஒதுக்கீட்டு பட்டியலில் என் பெயரை சென்டாக் (புதுச்சேரி மாநில தேர்வு குழு) அறிவித்துள்ளது. இந்தநிலையில், சிறந்த விளையாட்டு வீரர் அட்டையை பயன்படுத்தி ஏற்கனவே பல் மருத்துவ படிப்பில் சேர்ந்த பின்னர், அதே சலுகையை நடப்பு கல்வியாண்டில் எப்படி பெற முடியும்? என்று விளக்கம் கேட்டு கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீசை ரத்து செய்து, எனக்கு மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி என்.சேஷசாயி விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு வக்கீல், கடந்த கல்வியாண்டில் பல்மருத்துவ படிப்பில் 23 இடங்கள் காலியாக இருந்தது. எனவே, எளிதாக மனுதாரரை கொண்டு அந்த இடம் நிரப்பப்பட்டது. அதனால், மறு கல்வியாண்டிலும் சிறந்த விளையாட்டு வீரர் என்ற சலுகையை பன்படுத்த முடியும். மேலும், இந்த சலுகையை வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் பயன்படுத்த முடியுமா? அல்லது ஒரு கல்வியாண்டில் ஒரு முறைதான் பயன்படுத்த முடியுமா? என்று புதுச்சேரி அரசாணை தெளிவாக இல்லை. தகுதி பட்டியலை வெளியிட்ட பின்னர், இதுபோல விளக்க நோட்டீஸ் அனுப்ப முடியாது’’ என்று வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது தேர்வு குழு தரப்பு வக்கீல், சிறந்த விளையாட்டு வீரர் அட்டையை ஒரு முறைதான் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு கல்வியாண்டுக்கும் பயன்படுத்த முடியாது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.சேஷசாயி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சிறந்த விளையாட்டு வீரர் இடஒதுக்கீட்டை எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பது தனிநபர் விருப்பமாகும். ஆனால், ஒரு முறை பயன்படுத்தி விட்டால், அத்தோடு நிறுத்துக் கொள்ள வேண்டும். அதே இடஒதுக்கீட்டு சலுகையை அடுத்த வீரர் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
பல்மருத்துவ படிப்பில் காலியான இடங்களில் ஒன்றுதான் தனக்கு வழங்கப்பட்டது என்று மறுமுறை உரிமை கோர முடியாது. மறுமுறை பொதுப்பிரிவின் கீழ்தான் மருத்துவ படிப்பில் சேர முடியும். விதிகளின்படி சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான அட்டையை ஒரே ஒருமுறைதான் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விளையாட்டு பிரிவின் கீழ் ஒரு முறை இடம் கிடைத்து விட்டால், அந்த படிப்பை தொடர்ந்து படித்து முடிக்க வேண்டும். பாதியில் ஒரு படிப்பை விட்டுவிட்டு, வேறு ஒரு படிப்புக்கு ஒவ்வொரு கல்வியாண்டிலும் விளையாட்டு சலுகையை பயன்படுத்த அனுமதித்தால், இதே சலுகையுடன் காத்திருக்கும் மற்றொரு மாணவருக்கு கிடைக்கும் வாய்ப்பை தடுப்பதாகி விடும். அடுத்த மாணவர்களின் உரிமையை இதுபோல தடுக்கக்கூடாது. எனவே, சிறந்த விளையாட்டு வீரர் சலுகையை ஒரு முறைதான் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்த முடியாது. இதுகுறித்து தெளிவான விதிமுறைகளை உருவாக்கி புதுச்சேரி அரசு வெளியிட வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்
………………….

You may also like...