Mhc orders june 18 admk case

 சதுப்பு நிலப்பகுதியை இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு மாற்றிய வருவாய் துறை உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை காரப்பாக்கத்தில் பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய 38 ஏக்கர் நிலப்பகுதியை, கழுவேலி நிலம் என வகைப்படுத்திய வருவாய் துறை, அதில் 8 ஏக்கர் அளவிற்கு, தரமணியில் செயல்பட்டுவரும் இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு மாற்றம் செய்து கடந்த 2014ம் ஆண்டு மே 16ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த இயற்கை அறக்கட்டளையின் நிறுவனர் ஐ.ஹெச்.சேகர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், பக்கிங்காம் கல்வாயில் வரும் உபரி நீர், துரைப்பாக்கம் – ஒக்கியம் கால்வாய் வழியாக வரும் தண்ணீரை சேகரிக்க பயன்படும் கழுவேலி மற்றும் சதுப்பு நிலப் பகுதியை, பாதுகாக்க வேண்டிய அரசே, அந்நிலத்தை புள்ளியியல் நிறுவனத்திற்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வு, தமிழக அரசு, சென்னை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம் உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளது.
[6/18, 14:54] Mukesh Puthiyathaimurai Jounalist: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராவதற்காக 6 மூத்த வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் வழக்குகளில் ஆஜராக மூத்த வழ்க்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், எம்.கே.கபீர், என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன் ஆகியோரை நியமித்து பொதுத்துறை செயலாளர் ஜெகந்நாதன் பிறப்பித்துள்ள உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல மதுரை கிளையில் மூத்த வழக்கறிஞர்கள் எம். அஜ்மல் கான், ஐசக் மோகன்லால் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
[6/18, 15:33] Sekarreporter: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராவதற்காக 6 மூத்த வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் வழக்குகளில் ஆஜராக மூத்த வழ்க்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், எம்.கே.கபீர், என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன் ஆகியோரை நியமித்து பொதுத்துறை செயலாளர் ஜெகந்நாதன் பிறப்பித்துள்ள உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல மதுரை கிளையில் மூத்த வழக்கறிஞர்கள் எம். அஜ்மல் கான், ஐசக் மோகன்லால் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
[6/18, 18:18] Sekarreporter: சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் செயலில் ஈடுபடும் வயது வந்த தனிப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த மசாஜ் சென்டரின் உரிமையாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உதயகுமார் என்பவர் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, உதயகுமார் தரப்பில், பாலியல் தொழிலாளிகள் விருப்பப்பட்டு தொழிலில் ஈடுபடும்போது, அது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் ஆகாது என்றும், பாலியல் தொழிலுக்கான விடுதி நடத்துவது தான் சட்டவிரோதம் என்று வாதிடப்பட்டது.

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கையில் அவர் பெயர் இடம்பெறவில்லை என்பதால், வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் மசாஜ் பார்லர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வந்ததாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முதல் தகவல் அறிக்கையில் மனுதாரர் பெயர் இடம்பெறாத நிலையில், அதன் பிறகு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அவர் பெயர் சேர்க்கப்பட்டு இருந்தாலும்கூட, அவரது செயல்பாடுகள் குற்றம் விளைவித்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறி, அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நீதிபதி தன்னுடைய தீர்ப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, விபச்சார விடுதிகளுக்கு சோதனைக்குச் செல்லும் காவல் துறையினர், பாலியல் தொழிலாளர்களை கைது செய்யவோ, துன்புறுத்தவோ கூடாது என்றும், விடுதிகளை நடத்துவதுதான் சட்டவிரோதம் என்றும் கூறியிருப்பதை சுட்டிக்காட்டி, வயது வந்த ஒரு ஆணோ, பெண்ணோ சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் செயலில் ஈடுபட்டால், அந்த தனிப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை காவல்துறையினர் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
[6/18, 18:19] Sekarreporter: சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் யோகா தினம் கொண்டாட முடிவு செய்துள்ளதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை கடிதம் அனுப்பியுள்ளதை சுட்டிக்காட்டி, சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில முதன்மை

 

அமர்வு நீதிபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் அனைத்து நீதிபதிகளும், நீதிமன்ற பணியாளர்களும், வழக்கறிஞர்களும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

You may also like...