Mhc orders news for cvs former add pp riyas argued

[8/25, 10:55] Sekarreporter1: அதிமுக பொதுக்குழு தொடர்பான தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஈ.பி.எஸ்.மேல் முறையீடு வழக்கு நீதிபதிகள் துரைச்சாமி, சுந்தர் மோகன் அமர்வில் இறுதி விசாரணை தொடங்கியது…

ஈ.பி.எஸ். சார்ப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆரியமா சுந்தரம், சி.எஸ்.வைதியநாதன், விஜய் நாராயணன்
[8/25, 11:53] Sekarreporter1: ஒன்றரை கோடி தொண்டர்களுக்காக அல்லாமல், ஓபிஎஸ் நலனுக்காக தனிநீதிபதி தீர்ப்பளித்துள்ளார்

*தனி நீதிபதியின் தீர்ப்பு யூகத்தின் அடிப்படையிலானது என ஈபிஎஸ் தரப்பு வாதம்
[8/25, 11:53] Sekarreporter1: 2,539 பொதுக்குழு உறுப்பினர்களும் தனக்கு ஆதரவு தெரிவித்து தனித்தனியாக தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் அளித்துள்ளனர் – ஈபிஎஸ் தரப்பு
[8/25, 12:04] Sekarreporter1: உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் படிவத்தில் கையெழுத்திட பன்னீர்செல்வம் மறுத்ததால் சின்னம் கிடைக்காமல் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்…

ஈ பி எஸ்
[8/25, 12:19] Sekarreporter1: மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதம் துவங்கினார்
[8/25, 12:24] Sekarreporter1: “பொதுக்குழுவின் முடிவை ஏற்பவர்களே அடிப்படை உறுப்பினர்கள்” – ஈபிஎஸ் தரப்பு வாதம்
[8/25, 12:30] Sekarreporter1: கட்சி விதிகள்படி பொதுக்குழு மட்டும் தான் கட்சி நிர்வாகம் குறித்த முடிவுகள் எடுக்கும்.

பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் இறுதியானது; கட்சியினர் அதற்கு கட்டுப்பட வேண்டும் என கட்சி விதிகளில் கூறப்பட்டுள்ளது

அடிப்படை தொண்டர்களின் கருத்துக்களை பெறவில்லை என தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவ்று…

இந்த காரணத்துக்காகவே தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்யலாம்…

கட்சி விதிகளை புறக்கணித்து தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்…

அடிப்படை உறுப்பினர்க்ள் முடிவு எடுக்க அதிகாரமில்லை…

அதுபற்றி கட்சி விதிகளில் எதுவும் குறிப்பிடவில்லை…

பொதுக்குழுவுக்கு அடிப்படை உறுப்பினர்களை அழைக்கவில்லை…

– ஈ பி எஸ் தரப்பு
[8/25, 12:30] Sekarreporter1: கட்சிகள் தங்களது சட்டதிட்ட விதிகளின்படியே செயல்படுகிறது.. தனி நீதிபதி வழக்கை அணுகியே விதமே தவறானது…

– ஈபிஎஸ் தரப்பு அரியமா
[8/25, 12:34] Sekarreporter1: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட வேண்டும் என தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்…

இருவரும் இணைந்து செயல்பட முன்வர மாட்டார்கள்…

கட்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விடும்…

ஈ பி எஸ் தரப்பு
[8/25, 12:37] Sekarreporter1: ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் தான் வழக்கே தொடரப்பட்டது.- இ.பி.எஸ்
[8/25, 12:44] Sekarreporter1: தனது உரிமை பாதிக்கப்பட்டதால் தான் பன்னீர்செல்வம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்…

1.50 கோடி உறுப்பினர்களின் உரிமை பாதிக்கப்படவில்லை…

– ஈ பி எஸ்
[8/25, 13:23] Sekarreporter1: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா இல்லையா என்பது பற்றி ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியதில்லை என ஈ பி எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது…

அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற வாதத்தை ஏற்க முடியாது…

அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுக தான்…

இது சம்பந்தமான விதியை கொண்டு வருவதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தார்…

– ஓ பி எஸ்
[8/25, 14:52] Sekarreporter1: தலைமைக்கழகத்தின் பெயரில் தான் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதே தவிர, ஒருங்கிணைப்பாளரோ அல்லது இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல…

கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்பதால் ஜூலை 11 கூட்டத்துக்கு அனுப்பிய நோட்டீஸ் செல்லாதது…

– ஓ பி எஸ்
[8/25, 14:55] Sekarreporter1: பொதுக்குழு கூட்டம் முறைப்படி கூட்டப்படவில்லை…

சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தகுதி நீக்கம் ஆகியிருந்தால் அப்போது பதவிகள் காலியானதாக கூறலாம்…

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்…

பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாவிட்டால் பதவிகள் காலியாகி விடும் என கட்சி விதிகளில் கூறப்படவில்லை…

– ஓ பி எஸ்
[8/25, 15:14] Sekarreporter1: கட்சி விதிகளில் திருத்தம் செய்ய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தான் அதிகாரம் உள்ளது…

– ஓ பி எஸ்
[8/25, 15:14] Sekarreporter1: பொதுக்குழு கூட்டம் முறைப்படி கூட்டப்படவில்லை…

சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தகுதி நீக்கம் ஆகியிருந்தால் அப்போது பதவிகள் காலியானதாக கூறலாம்…

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்…

பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாவிட்டால் பதவிகள் காலியாகி விடும் என கட்சி விதிகளில் கூறப்படவில்லை…

– ஓ பி எஸ்
[8/25, 15:59] Sekarreporter1: ஓ பி எஸ் தரப்பு

மாவட்ட செயலாளர்கள் தான் ஒற்றைத் தலைமை கோரியதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில் கூறப்பட்டுள்ளது

அதனால் தான் எந்த புள்ளி விவரமும் இல்லை என தனி நீதிபதி குறிப்பிட்டுள்ளார்

கட்சி துவங்கிய 1972ல் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மாற்ற முடியாது என விதி உள்ளது

ஆனால் 2017ல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்ட போது இரு பதவிகளும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது

அதன் பின் 2021 டிசம்பரில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில் செயற்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது
[8/25, 16:10] Sekarreporter1: ஸ்ரீராம்

அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடத்துவது என செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பின் பொதுக்குழு ஒப்புதல் வழங்க வேண்டிய அவசியம் என்ன?
[8/25, 16:38] Sekarreporter1: அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு வழக்குகளில் தீர்ப்பு தள்ளிவைப்பு
[8/25, 16:38] Sekarreporter1: தீர்ப்பு ஒத்திவைப்பு
[8/25, 16:57] Sekarreporter1: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த எடப்பாடி மேல் முறையீடு

தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

காலை முதல் மாலை வரை நீடித்த விசாரணை…

எழுத்துப்பூர்வமான வாதங்களை நாளை தாக்கல் செய்ய இரு தரப்புக்கும் உத்தரவு
[8/25, 17:29] Sekarreporter1: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு இன்று நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, எடப்பாடி பழனிச்சாமி சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஆரியமா சுந்தரம் மற்றும் விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அவர்கள் தங்கள் வாதத்தில், தனி நீதிபதியின் தீர்ப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டினர். குறிப்பாக, ஜூலை 11 பொதுக்குழுவுக்கு ஜூலை 1ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்றும் தனி நீதிபதி கூறியுள்ளது தவறு என தெரிவித்தனர்.

கட்சியினர் ஒற்றை தலைமை வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாக கூறியதற்கு எந்த புள்ளி விவரங்களும் இல்லை எனவும், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது எனவும் குறிப்பிட்டனர்.

ஜூன் 23 ம் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படாத நிலையில், அந்த நிவாரணத்தை தனி நீதிபதி வழங்கியது அசாதாரணமானது எனச் சுட்டிக்காட்டினர்.

கட்சி விவகாரங்களை பொறுத்தவரை பொதுக்குழு முடிவே இறுதியானது. அடிப்படை தொண்டர்களின் கருத்துக்களை பெறவில்லை என்ற தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு எனவும் சுட்டிக்காட்டினர்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட வேண்டும் என தனி நீதிபதி தீர்ப்பளித்தைச் சுட்டிக்காட்டிய மூத்த வழக்கறிஞர்கள், இருவரும் இணைந்து செயல்பட முன்வர மாட்டார்கள் எனவும், தனி நீதிபதி உத்தரவு காரணமாக கட்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

தனது உரிமை பாதிக்கப்பட்டதால் தான் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருக்கிறாரே தவிர,
1.50 கோடி உறுப்பினர்களின் உரிமைக்காக அல்ல எனவும் சுட்டிக்காட்டினர்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும், இது விபரீதமானது எனவும் தெரிவித்தனர்.

உள்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையிலும், வழக்கு கோரிக்கையை மீறி உள்ளதாலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர்.

தொடர்ந்து, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார் மற்றும் அரவிந்த் பாண்டியன், அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்றும், அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுக தான் எனவும், இது சம்பந்தமான விதியை கொண்டு வருவதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் இரு பதவிகளும் காலியாகவில்லை என முடிவுக்கு வந்து இரு பதவிகளும் நீடிப்பதாக கருதும் வகையில் ஜூன் 23க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், தலைமைக்கழகத்தின் பெயரில் தான் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதே தவிர, ஒருங்கிணைப்பாளரோ அல்லது இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல எனவும் கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்பதால் ஜூலை 11 கூட்டத்துக்கு அனுப்பிய நோட்டீஸ் செல்லாதது எனவும் வாதிட்டனர்.

மேலும், சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தகுதி நீக்கம் ஆகியிருந்தால் மட்டுமே பதவிகள் காலியானதாக கூறலாம் என்று தெரிவித்த ஓ.பி.எஸ் தரப்பு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாவிட்டால் பதவிகள் காலியாகி விடும் என கட்சி விதிகளில் கூறப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது.

ஓ.பி.எஸ். தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடத்துவது என செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பின் பொதுக்குழு ஒப்புதல் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

பின்னர், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நாளை மாலை 3 மணிக்குள் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
……….
[8/25, 18:32] Sekarreporter1: முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதற்காக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.பி.வி.பி. அமைப்பினர் தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், மேலும் மரணங்கள் நிகழக் கூடாது என்பதை வலியுறுத்தியும், தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளிவந்ததை கண்டித்தும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தின் அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினரை தாக்கியும், உடைகளை கிழித்தும், காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ்வரி புகார் அளித்தார்.

அந்த புகாரில் ஏ.பி.வி.பி. அமைப்பை சேந்த் 35க்கும் மேற்பட்டோர் மீது சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டத்தின் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், கலகம் செய்ய தூண்டிவிடுதல், இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகள் மற்றும் பொது சொத்து சேதப்படுத்துதல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கௌசிக், உகேந்திரன், சுசீலா, அமர் வஞ்சிதா உள்ளிட்ட 31 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர்களது மனுவில் மற்றொரு மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு சக மாணவர் என்ற முறையில் போராடியதாகவும், முதல்வரின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமே தங்களது நோக்கமாக இருந்ததாகவும், ஆயுதங்கள் ஏதும் வைத்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[8/25, 18:32] Sekarreporter1: மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் விதிகளை பின்பற்றி புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யலாம் என்ற உத்தரவை தெளிவுபடுத்தக்கோரி மாநகர போக்குவரத்து கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுள்ளது.

கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016 ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, தமிழக அரசு பேருந்துகளை கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளையும், உச்ச நீதிமன்ற உத்தரவையும் பின்பற்றி தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இந்த உத்தரவை தெளிவுபடுத்தக் கோரி சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட மனு, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சாலையின் அமைப்பை பொறுத்தவரை தாழ்தள பேருந்துகளை இயக்கினால் சேதம் அதிகமாகும் என்றும், அப்படிப்பட்ட பேருந்துகளை கொள்முதல் செய்வதால், பொருட் செலவும் அதிகமாகும் என்பதால் உயர் நீதிமன்ற உத்தரவை தெளிவுபடுத்த வேண்டுமென மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி தாங்களும் உத்தரவு பிறப்பித்ததால், தெளிவு தேவைபட்டால் உச்ச நீதிமன்றத்தை மட்டுமே நாட வேண்டுமென தெரிவித்ததை ஏற்ற மாநகர போக்குவரத்து கழகம், தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டது.
[8/25, 19:39] Sekarreporter1: பெரியார் சிலை குறித்து சர்ச்சை வகையில் பேசியதாக தொடரப்பட்ட சினிமா ‘ஸ்டன்ட் மாஸ்டர்’ கனல் கண்ணனின் ஜாமின் மனுவை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த மதுரவாயலில் கடந்த 1ம் தேதி நடைபெற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பங்கேற்றார். அதில், ‘ஸ்ரீரங்கம் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்நிலையில் மத மோதலை துாண்டும் விதமாக பேசிய கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலர் குமரன் புகார் அளித்தார்.இந்தப் புகார் தொடர்பாக, சென்னை சைபர் கிரைம் போலீசார், கலகம் செய்ய துாண்டுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய, இரு பிரிவுகளின் கீழ், கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட கனல் கண்ணன் தற்போது புழல் சிறையில் அடுக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமின் கோரி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், கனல் கண்ணன் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனல் கண்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பால்கனகராஜ், தம்முடைய பேச்சு நாட்டின் எந்த சட்டத்துக்கு எதிரானது அல்ல எனவும் இந்த சிலையை அகற்றக்கோரி, ஏற்கனவே பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும் கூறினார். சிலையை நிறுவிய நபர் மீது நடவடிக்கை எடுக்காமல், மனுதாரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் சிலையை உடைக்கப் போவதாக கூறவில்லை என தெரிவித்த கனல் கண்ணன் தரப்பு வழக்கறிஞர் சிலையை அகற்ற வேண்டும் என்று தான் அரசுக்கு கோரிக்கை விடுத்தாக கூறினார். இது ஒன்றும் தீங்கானது அல்ல எனவும் எனவே, ஜாமின் வழங்க வேண்டும்”. என வாதிட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன், மனுதாரர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளதாகவும் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய மதங்கள் குறித்து பேசியுள்ளதாக குறிப்பிட்டார். கனல் கண்ணனின் பேச்சு இரு தரப்பினர் இடையே மத மோதல், பகைமை, மற்றும் வெறுப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் பேசிய வீடியோவை, சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரின் விபரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் கூறினார். பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளதால் கனல் கண்ணனுக்கு ஜாமின் வழங்கக்கூடாது” என வாதிட்டார்.கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் சார்பாக வழக்கறிஞர் அருண் ஆஜராகி,-
பெரியார் கடவுள் மறுப்பை கடைசியாகத்தான் பேசினார்- மனிதனை மனிதனாக மதிப்பதற்கு எதுவெல்லாம் தடையாக இருக்கிறதோ அதை எல்லாம் எதிர்த்தார் அவை எல்லாவற்றிர்கும் மூலம் கடவுள் ஆகவே கடவுளையும் எதிர்த்தார்-
தமிழ் நாடின் பெரும்பான்மையான மக்களான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக , பொருளாதார, கல்வி ,வேலைவாய்ப்பு மேப்பாட்டிற்கு காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் – அவரது சிலையை உடைக்க வேண்டும் என்பது பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டின் மீதான தாக்குதல். மேலும் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசியதோடு மட்டுமல்லாமல் பிறரையும் தூண்டும் வண்ணம் பேசியிருப்பது திட்டமிட்டே வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது, வெறுப்பு பேச்சு தான் பல நாடுகளில் இனப்படுகொலைகள் ஏற்பட காரணமாக இருந்தது ஆகவே கனல் கண்ணனுக்கு ஜாமின் வழங்குவது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று வாதிட்டோம். பல இனப்படுகொலைகள் நடைபெறுவதற்கு காரணம் வெறுப்பு பேச்சு தான் ஆகவே நீதிமன்றம் அத்தகைய சூழலுக்கு வழிவகுக்க அனுமதிக்க கூடாது என்று வாதிட்டார்.இந்த வாதங்களை கேட்ட கேட்ட நீதிபதி எஸ்.அல்லி பிறப்பித்துள்ள உத்தரவில், விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாலும், ஜாமின் வழங்கினால் ஆதாரத்தை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[8/25, 22:10] Sekarreporter1: பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன.

இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தரமற்ற பொருட்கள் விநோயோகம் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, திருவள்ளூரை சேர்ந்த ஜெயக்கோபி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இருந்த வெல்லம், கரும்பு, பருப்பு, புளி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாகவும், உயிரிழந்த பூச்சிகள் காணபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தரமற்ற பொருட்கள் வழங்கியதன் மூலம் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வருக்கு புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் தரமற்ற பொருட்கள் விநியோகத்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தரமற்ற பொருட்களை வழங்கிய அதிகாரிகள், அவற்றை தடுக்காத உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிராக லோக் ஆயூக்தா அமைப்பில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எதிர்மனுதாரராக உள்ள அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பிய போதும், அமைச்சராக உள்ளதால் இருவரும் இதுவரை பதிலளிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ஐ. பெரிய சாமி இருவரையும் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

You may also like...