Navj order அதிரடி உத்தரவு துப்பாக்கியால் சுடுவது போல உள்ளது. Satate pp jinna argued last minits. வினோதமாக, மர்மமாக

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996 – 2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த போது ரூ. 1.36 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2002-ம் ஆண்டு அவர் மீதும், அவரது மனைவி உள்ளிட்டோர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தார். இந்த வழக்கு கடந்த செப்.7 அன்று விசாரணைக்கு வந்தபோது, தாமாக முன்வந்து எடுக்கப்பட்ட இந்த வழக்கை நீதிபதி  என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க அதிகாரமில்லை என்பதால் இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றும் வகையில் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டுமென அமைச்சர் பொன்முடி தரப்பிலும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பிலும் வாதிடப்பட்டது. அதையடுத்து இதுதொடர்பாக செப்.14 அன்று தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.
அதன்படி இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலக மறுப்பு தெரிவித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என பொன்முடி மற்றும் தமிழக அரசு தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தார்.
அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, இந்த வழக்கை விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு மாற்றி உயர் நீதிமன்றம் தான் நிர்வாக ரீதியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்படியிருக்கும்போது இந்த வழக்கில் உயர் நீதிமன்ற பதிவுத்துறையிடமோ அல்லது லஞ்ச ஒழிப்புத்துறையிடமோ விளக்கம் கோரவில்லை என ஆட்சேபம் தெரிவித்தார்.
அதையடுத்து அடுத்த விசாரணையின்போது இந்த வழக்கில் உயர் நீதிமன்ற பதிவுத்துறையும் சேர்க்கப்படும் எனத்தெரிவித்த நீதிபதி, விசாரணையை அக்.9-க்கு தள்ளி வைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘ இந்த வழக்கை நான் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பதை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை எதிர்ப்பது ஆச்சர்யமாகவும், விசித்திரமாகவும் இருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்ய கால அவகாசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மேல்முறையீடு செய்வதன் நோக்கமும், நானே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பதன் நோக்கமும் ஒன்று தான். இந்த வழக்கை தனிப்பட்ட ஒரு நீதிபதி விசாரணைக்கு எடுத்திருப்பதாக பார்க்கக்கூடாது. மாறாக உயர் நீதிமன்றமே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பதாகத்தான் பார்க்க வேண்டும். ஏனெனில் இதுதொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திடம் தான் உள்ளது.  ஒருவேளை நான் எடுத்துள்ள இந்த வழக்கில் கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டால் அது லஞ்ச ஒழிப்புத்துறைக்குத்தான் சாதகமாக அமையும். ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறையின் செயல்பாடுகள் குற்றம் சாட்டப்பட்டவரின் தோள்களில் அமர்ந்து கொண்டு துப்பாக்கியால் சுடுவது போல உள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணையில் இருந்து நான் விலக வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க முடியாது. மாறாக வரும் அக்டோபர் முதல் வாரத்தில் எந்தெந்த நீதிபதிகள் எந்தெந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்பது தொடர்பான மாறுதல்கள் வரவுள்ளது. அப்போது இந்த வழக்கு எந்த நீதிபதிக்கு செல்கிறதோ, அதைப் பொருத்து இந்த வழக்கின் விசாரணை குறித்தும் முடிவு செய்யப்படும், எனக்கூறி விசாரணையை வரும் அக்.9-க்கு தள்ளி வைத்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி விடுதலைக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்ததன் மூலம் பலன்பெறும் லஞ்ச ஒழிப்புத் துறை, உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கையை பாரபட்சமானது எனக் கூறுவது வினோதமாகவும், மர்மமாகவும் உள்ளது என, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையில் இருந்து விலக மறுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், குற்ற விசாரணை முறைச் சட்டம் 397 வது பிரிவின் கீழ் கீழமை நீதிமன்றஙகளில் இருந்து ஆவணங்களைப் பெற்று அவற்றின் உத்தரவுகளையும், தீர்ப்புகளையும் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுஆய்வு செய்ய அதிகாரம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அவகாசம் உள்ள நிலையில், உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதால், லஞ்ச ஒழிப்புத் துறையின் மேல் முறையீடு செய்யும் உரிமை பாதிக்கப்படுவதாகக் கூறுவதை ஏற்க முடியாது எனவும், அப்படி மேல் முறையீடு செய்தால், அதற்கு உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது ஆதரவாகவே அமையும் எனவும், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தால் அது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பயனாகவே இருக்கும் என்பதால், உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கை பாரபட்சமானது எனக் கூற முடியாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.

தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது பாரபட்சமானது என லஞ்ச ஒழிப்புத் துறை கூறுவது வினோதமாகவும், மர்மமாகவும் உள்ளது எனவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, வேலூர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யவில்லை எனவும், இரு தரப்பினருக்கும் விளக்கம் அளிக்கவே உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து வருவதால், குறிப்பிட்ட நீதிபதி, சிலருக்கு எதிராக வேட்டையில் இறங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது எனக் குறிப்பிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுப்பது தனிப்பட்ட நீதிபதி அல்ல எனவும், உயர் நீதிமன்றம் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் இரு தரப்பினரும் வாதங்களை முன்வைப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும், அக்டோபர் மாதம் முதல் நீதிபதிகளின் ரோஸ்டர் எனப்படும் விசாரிக்க வேண்டிய வழக்குகள் ஒதுக்கீட்டில் மாற்றம் வரலாம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.

You may also like...