Pmla case bail granted. By cbi court quashed by judge jayachandren ed appeal argued by N.Ramesh adv in mhc

நிலக்கரி இறக்குமதி முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கில் கைது செய்யப்பட்ட கோஸ்டல் எனர்ஜி இயக்குனர் அகமது ஏ.ஆர். புகாரிக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011-12 மற்றும் 2014-15 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே இந்தோனேசியாவில் இருந்து தரம் குறைந்த நிலக்கரியை, உயர்தர நிலக்கரி என இறக்குமதி செய்து சுமார் 564 கோடி ரூபாய் அரசை ஏமாற்றியதாகவும் , மோசடி செய்ததாகவும் கோஸ்டல் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநரான அகமது ஏ.ஆர். புகாரி, தேசிய அனல் மின் கழகம், உலோகங்கள் மற்றும் தாதுக்கள் விற்பனை நிறுவனம், ஆரவளி தனியார் மின் நிறுவனம் ஆகியவற்றின் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதேபோல, தரமற்ற நிலக்கரியை விற்பனை செய்ததில் 564 கோடியே 48 லட்ச ரூபாயை அகமது புகாரியின் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்துள்ளதாக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் அகமது புகாரியின் கோஸ்டல் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான 557 கோடி ரூபாயையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கோஸ்டல் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் அகமது ஏ.ஆர். புகாரியின் ஜாமீன் மனுக்கள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 16ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்த உத்தரவுக்கு ரத்து செய்ய கோரி அமலாக்கத் துறை சார்பில் வக்கீல் என். ரமேஷ்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இன்று தீர்ப்பளித்தார். அதில், ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றம் போதுமான காரணங்களை தெரிவிக்கவில்லை எனவே அமலாக்கதுறை தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவை எற்பதாகவும், ஜாமீன் வழங்கிய சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யவதாக தெரிவித்துள்ளார்.

You may also like...