R mahadevan j and abdul kuthose j orderதேவையில்லாத நபர்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்ததற்காக, ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக உயர் நீதிமன்றம் எச்சரித்ததால், மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.

தேவையில்லாத நபர்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்ததற்காக, ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக உயர் நீதிமன்றம் எச்சரித்ததால், மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில் சொத்துகள், நீர்நிலைகளை அளவிட சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்கும்படி சேலத்தை சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் உள்துறை, வருவாய் துறை, பொதுத்துறை, வீட்டுவசதி துறை, நகராட்சி நிர்வாகத்ததுறை, ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவற்றை சார்ந்த 44 பேரை எதிர் மனுதாரர்களாக சேர்த்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல்குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேவையில்லாமல் இத்தனை நபர்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்ததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தனர்.

பின்னர் மனுதாரர் தரப்பில் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று வாபஸ் பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகும்படி மனுதாரருக்கு அறிவுறித்தினர்.

You may also like...