Sekarreporter1: [9/1, 15:27] DURAIVAIYAPURI Mhc Advt: Cancellation of Patta – Section 10 of Tamil Nadu Patta Passbook Act, 1983 (Tamil Nadu Act 4 of 1986) – W.P.No.23488 of 2022 – order dated 01.09.2022: சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருமதி.மீனாட்சி அம்மாளுக்கு சொந்தமான நிலத்தையும் கட்டிடத்தையும்

[9/1, 15:31] Sekarreporter1: [9/1, 15:27] DURAIVAIYAPURI Mhc Advt: Cancellation of Patta – Section 10 of Tamil Nadu Patta Passbook Act, 1983
(Tamil Nadu Act 4 of 1986) – W.P.No.23488 of 2022 – order dated 01.09.2022:

சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருமதி.மீனாட்சி அம்மாளுக்கு சொந்தமான நிலத்தையும் கட்டிடத்தையும் 1978ம் ஆண்டு தனது கணவர் திரு.நஞ்சப்ப செட்டியார் பெயரில் உயில் எழுதி வைத்த பிறகு இறந்து விட்டார். நஞ்சப்ப செட்டியார் மேற்கந்த சொத்தை தனது இரண்டாவது மகனுக்கும் மற்றும் மகள்களுக்கும் கூடுதல் உயில் ஒன்றை எழுதி வைத்து இறந்து விட்டார். நஞ்சப்ப செட்டியாரின் மூத்த மகனாகிய திரு.தேவராஜன், அவர் பெயரில் இல்லாத மேற்கண்ட சொத்திற்கு சட்டத்திற்கு புறம்பாக அவர் பெயரில் பட்டா பெற்றுவிட்டார். இதனை எதிர்த்து நஞ்சப்ப செட்டியாரின் ஒரு மகளாகிய திருமதி.பிரேமாவதி அவர்கள் தேவராஜனுக்கு கொடுத்த பட்டாவை ரத்து செய்ய கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் 02.12.2017 அன்று மனு தாக்கல் செய்தார். மேற்கண்ட மனு நீண்ட காலம் நிலுவையில் உள்ள நிலையில் பிரேமாவதி இறந்து விட்டார். பிரேமாவதியின் மகனாகிய திரு.பால்ராஜ் அவர்கள் நீண்டகாலமாக வருவாய் கோட்டாட்சியரிடம் நிலுவையில் உள்ள பட்டா ரத்து செய்வதற்கான மனுவை விரைந்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்.திரு.இ.துரை வையாபுரி அவர்கள் பட்டாவை ரத்து செய்ய கோரி பலமுறை மனுதாரர் மனு கொடுத்ததும் பட்டாவை ரத்து செய்யாமல் வருவாய் கோட்டாட்சியர் காலம் தாழ்த்தி வருவதாக வாதாடினார். மனுவை விசாரித்த மாண்புமிகு நீதிபதி திரு.M.தண்டபானி அவர்கள் பட்டா ரத்து செய்வதற்கான மனுவை விசாரிக்க வருவாய் கோட்டாட்சியர்க்கு அதிகாரம் இல்லை வட்டாட்சியருக்கு தான் அதிகாரம் உள்ளது என்று கூறி நடவடிக்கைகளை வட்டாட்சியருக்கு மாற்றி 6 வாரத்திற்குள் பட்டா ரத்து செய்வதற்கான மனுவை விசாரித்து உத்தரவு பிறப்பிக்குமாறு சேலம் மேற்கு வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
[9/1, 15:28] DURAIVAIYAPURI Mhc Advt: E.DURAIVAIYAPURI, ADVOCATE, CHENNAI
[9/1, 15:32] Sekarreporter1: Super

You may also like...