sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1712033326792687898?t=osY5AkVfecRLDSUObJ3FrQ&s=08 [10/11, 14:42] sekarreporter1: [10/11, 14:36] sekarreporter1: *நியோ மேக்ஸ் வழக்கு* அதிரடி உத்தரவு

[10/11, 14:42] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1712033326792687898?t=osY5AkVfecRLDSUObJ3FrQ&s=08
[10/11, 14:42] sekarreporter1: [10/11, 14:36] sekarreporter1: *நியோ மேக்ஸ் வழக்கு*

நியோ மேக்ஸ் வழக்கில் நிறுவனத்தில் சார்பில் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு உரிய நிவாரனம் வழங்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில்.விசாரனைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜராகி ஓய்வு பெற்ற நீதிபதி.தலைமையிலான கமிட்டிக்கு.கடும்.ஆட்சேபனை தெரிவித்தார். நீதிபதி கமிட்டி அமைத்தால் காலதாமதமின்றி எல்லோருக்கும் விரைவாக பிரித்து கொடுத்துவிடலாம் என நியோ மாக்ஸ் தரப்பில்.வைக்கப்பட்ட வாதத்தை சுட்டிகாட்டி 1999 ம் ஆண்டு அமைக்கப்பட்ட கமிட்டி முதல் பல்வேறு கமிட்டி இதுவரை முதலீட்டாளர்களுக்கு திருப்பி கொடுக்காததை சுட்டிக்காட்டினார். மேலும் நியோ மேக்ஸ் தாக்கல்.செய்துள்ள பிரமான வாக்குமூலத்தில் 32048 முதலீட்டாளர்கள் என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி, புகார் கொடுத்த ஜெயசங்கரீஸ்வரனுக்கு 15515 சதுர அடியும், 25 லட்சமும் கொடுத்துள்ளனர் என்பதனை அடிப்படையாக கொண்டு சராசரியாக கணக்கிட்டால் 32048 முதலீட்டாளர்களுக்கு கொடுப்பதற்கு 49 கோடியே 72 லட்சம் சதுர அடி தேவைப்படுகிறது. ஆனால் அவர்கள் டி.டி.சி.பி அப்ரூவல் பெற்ற இடம் 5 கோடியே 9 லட்சம் சதுர அடி மட்டுமே உள்ளது. மேலும் இப்போது அவர்களிடம் இருக்கும் நிலத்தில் அடிப்படையில் 32048 முதலீட்டாளர்களுக்கு அவர்கள் பிரித்து தருவதாக சொல்கிற 2 கோடியே 23 லட்ச சதுர அடியை சராசரியாக பிரித்துகொடுத்தால் ஒருவருக்கு 697 சதுர அடிதான் கொடுக்க முடியும். இதற்கு முதலீட்டாளர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

மேலும் சட்டத்துக்கு புறம்பாக நீதிபதி கமிட்டி.அமைக்க உயர் நீதிமன்றம்.உத்தரவிட முடியாது. புலன் விசாரனை முழுமை பெற வேண்டும், இதுவரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்தவர்களின் எண்ணிக்கை 667 மட்டுமே, ஆனால் 32048 பேர் முதலீடு செய்துள்ளார்கள் என நிறுவனமே உத்தேசமாக தான் குறிப்பிட்டுள்ளது. மொத்தத்தில் எத்தனை முதலீட்டாளர்கள் என்பது முழுமையான புலன் விசாரனைக்கு பின்னரே தெரிய வரும். மேலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தொகை எவ்வளவு என்பதை குறிப்பிடவில்லை. எனவே நீதிபதி.கமிட்டி அமைத்தால், அது மறைமுகமாக புலன் விசாரனையை பாதிக்கும் என குறிப்பிட்டார்.
[10/11, 14:36] sekarreporter1: Assisted by S. Santhosh, Government Advocate

You may also like...