Senior adv N R elango and adv vivek Super Legal points accepted in 302 case filed by CBI in special court திமுக முன்னாள் எம் எல் ஏ உள்ளிட்ட 11 பேரை விடுதலை

கொலை திமுக முன்னாள் எம் எல் ஏ உள்ளிட்ட 12 பேரை விடுதலை திமுக முன்னாள் எம் எல் ஏ உள்ளிட்ட 12 பேரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள கொளத்துாரை சேர்ந்த மாற்றுத் திறனாளியான புவனேஸ்வரன் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2012 ஜனவரி 10ஆம் தேதி மர்ம நபர்களால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கொளத்துார் காவல் நிலையத்தினர், சையது இப்ராகிம், செல்வம், முரளி, குமார் ஆகியோருக்கு எதிராக, விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதனின் துாண்டுதலின்படி தான் தனது மகன் கொலை செய்யப்பட்டதாகவும், குற்றப்பத்திரிகையில் ரங்கநாதனின் பெயரை சேர்க்கவில்லை என்பதால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும் என புவனேஸ்வரனின் தந்தை சிவா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாக கூறி, அதை ரத்து செய்ததுடன், டி.எஸ்.பி., அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் சி.பி.ஐ., விசாரணை நடத்த 2014ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

அதன்படி விசாரணையை நடத்திய சி.பி.ஐ. காவல்துறையினர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன், சையது இப்ராகிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம், பாலசந்திரன் உள்பட 12 பேருக்கு எதிராக, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன், உள்ளிட்ட 12 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிருப்பிக்கப்படவில்லை எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

You may also like...