senthil balaji for ed N Ramesh adv

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த ஆவணங்களை சரிபார்த்துக்கொள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பிற்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. For ed N Ramesh

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை தரப்பில் வழக்கிற்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, குற்றம்சாட்டபட்ட செந்தில் பாலாஜிக்கும் வழங்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது.

இதையடுத்து ஆவணங்களை கோரிய மனுவை வாபஸ் பெறுவதாக செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களை செந்தில்பாலாஜி தரப்பு சரிபார்த்துக்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜனவரி 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...