senthil balaji pmla bail விசாரிக்க யாருக்கு அதிகாரம் திங்கட்கிழமை (4ம் தேதி) நீதிபதிகள் ஆர்.சுரேஷ், குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரிய மனுவை
எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற வழக்கு வரும் திங்கட்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி.,எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை சிறப்பு நீதிமன்றமும் மறுத்து விட்டன.

மேலும், ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகாரம் இருக்கிறதா? என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வருமாறும் சிறப்பு நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யபட்டுள்ளது. அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் முறையிட்டப்பட்டது.

ஆனால் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி ஆர்.சக்திவேல் அறிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை (4ம் தேதி) நீதிபதிகள் ஆர்.சுரேஷ், குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

You may also like...